எமில் துர்கைம் தொழிற்பிரப்பு எனும் நூலில் குறிப்பிட்டுள்ள முக்கிய எண்ணக்கருக்களை விளக்குக.
பிரான்சிய கல்வியுலகின் முதன்மை கல்வியலாளராக முதன்மை பெறுபவர்ராக எமில் டுர்கைம் காணப்படுகின்றார். கிழக்கு பிரான்ஸ் மாகாணமான எபிநோரல் என்ற இடத்தில் 1858 ஏப்பிரல் 15 ஆம் திகதி பிறந்தார். யூதமத புலமையாளர்களை கொண்ட குடும்பமொன்றில் பிறந்த டுர்கைம் யூத மத குருவாகும் நோக்கத்துடன் தனது ஆரம்ப கல்வியை தொடங்கினார். பின்னர் கடவுள் மீதான நம்பிக்கை குறைந்து போனது எனினும் இவரின் ஆக்கங்களில் சமயம் மற்றும் கடவுள் தொடர்பானவையும் இடம் பெறுவது குறிப்பிடதக்கது.
பிற் காரத்தில் விஞ்ஞான ரீதியான சமூகவியல் கட்டமைப்பொன்றினை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த டுர்கைம் இந் நோக்கில் இறுதிவரை விலகாமல் உழைத்தார். இதன் விளைவாக பல்வேறுபட்ட சமூகவியல் ஆக்கங்களை டுர்கைம் வெளியிட்டார். இந்த வகையில் 1833 இல் இவரின் 'சமூகத்தின் தொழிற்பிரிப்பு' (வாந னுiஎளைழைn ழக டயடிழச ழக ளழஉநைவல) எனும் நூல்லை வெளியிட்டார். மேலும் இரு ஆண்டுகள் கழித்து ( வாந சரடநள ழக ளழஉழைடழபல அநவாழனள) சமூகவியல் முறைமைகளுக்கான விதிகள் ஏனும் நூல்லை வெளியிட்டார். 1897 இல் தற்கொலை (ளரiஉனைந) என்ற நூல்லையும் பின் 1912 இல் சமய வாழ்வின் அடிப்படை வடிவங்கள் எனும் நூல்லும் (வாந நடநஅநவெயசல கழசஅ ழக சநடபைழைரள டகைந) டுர்கைம்மினால் வெளிடப்பட்டது. சமூகவியலுக்கான டுர்மைம்பின் குறிப்பிடதக்க பங்களிப்புகளில் சிலவாக பின்வருவன காணப்படுகின்றது.
• சமூக உண்மை
• முறையியல்
• செயற்பாட்டியல் பகுப்பாய்வு
• சமூக வகைப்பாடு
• சமயத்தின் சமூகவியல்
• சமூகத்தின் தொழிற்பிரிப்பு
• தற்கொலை
• அறிவின் சமூகவியல்.
இவ்வாறு பல்வேறுபட்ட பங்களிப்புக்களை சமூகவியலுக்கு எமில் டுர்கைம் மேற் கொண்டுள்ளார். இத்தகைய ஆக்கங்களில் முக்கியத்துவம் பெறும் ஒன்றாக சமூகத்தின் தொழிற்பிரிப்பு காணப்படுகின்றது. இவர் தொழிற்பிரிப்பு எனும் தனது ஆக்கத்தில் சமூக ஒற்றுமை, சட்டத்தின் பங்கு, வரலாற்று சூழுல், திரண்னாய்வு போன்ற பல்வேறுபட்ட எண்னக்கருக்களை முன்வைத்துள்ளார்.
சமூகத்தின் தொழிற்பிரிப்பு என்ற இவரின் ஆக்கத்தில் சமூகத்தின் படிமலர்ச்சி மற்றும் அவற்றினால் ஏற்படும் விளைவுகள் என்பனவற்றில் கவனம் செலுத்தியுள்ளார். மேலும் ஆதி கால சமூகம் மற்றும் நவீன சமூகங்களிடையே காணப்படுகின்ற வேறுபாட்டை அவதானி;த்தார். அதாவது அதிகரித்;து செல்லும் தொழிற் பிரிப்பு, மற்றும் சமூதாயங்களில் உறுதிப்பாடு என்பவற்றின் மூலம் இவற்றிற்க்கிடையிலான வேறுபாட்டை இனம்காட்டினார் டுர்கைம். ஆதி சமூகத்தை தொழிற்புரட்ச்சிக்கு பின்னுள்ள சமூதாயங்களுடன் ஒப்பிடுட்டு நோக்கினார் டுர்கைம். ஆதி சமூகங்கள் இயல்பான உறுதிப்பாட்டை கொண்டவை (அநஉhயniஉயட ளழடனையசல)எனவும் பின்னரான சமூகமானது அமைப்பு ரீதியான உறுதிப்பாட்டை(ழசபயniஉ ளழடனையசல) கொண்டவை என்றும் இவர் கருதுகின்றார்.
ஆதி சமூகத்தில் இயல்பான உறுதிப்பாட்டின் வழி அதன் அங்கத்தவர்கள் ஒன்றினைக்கபட்டவர்களாக காணப்படுவர். இங்கே சட்ட அமைப்பு என்பது கூட்டு நோக்கத்தை மீறுபவர்களை தண்டிப்பதாய் காணப்படுகின்றது. அடக்கு முறை மற்றும் குற்றவியல் சட்டம் என்பன இங்கு நடைமுறையில் காணப்பட்டன. இதே போன்று நவீன சமூகத்தில் தனிமனிதனை எடுத்து கொண்டால் ஒவ்வொரு தனி மனிதனும்; வேறுபட்ட ஆளுமைகளை கொண்டமைந்தவனாக அமைகின்றான். இதன் முலம் வேறுபட்ட செயற்பாடுகள், அனுபவங்கள் என ஒவ்வொரு மனிதனும் வெளிப்படுத்துகின்றான். எனினும் இங்கு அமைப்புரீதியிலாக உறுதிப்பாடு காணப்படுகின்றது. இங்கு தனியன்களுக்கு மத்தியில் ஒத்ததன்மையை விட வேற்றுமையே இனைவின் அடிப்படையாகின்றது. இத்தகைய இனைவிற்க்கு தொழிற்பிரிப்பும் ஒர் காரணமாக அமைகின்றது என்கின்றார் டுர்கைம். தொழிற்பிரிப்பும் மனிதர்களிடையே காணப்படும் வேறுபாடும் ஒருவரை இன்னுமொருவர் மீது தங்கிநிற்க்க வழி செய்கின்றது.
இங்கு தங்கி நிற்றல் என்பது மனித உளநிலை, ஒழுக்கநிலை மற்றுமமைப்பு ரீதியான ஒழுக்கநிலை என்பவற்றில் தங்கியுள்ளது. நவீன சமூகங்களில் அமைப்பு ரீதியான உறுதிப்பாடானது அதிகரித்து செல்கின்ற போது கூட்டு பிரக்ஞையின் முக்கியத்துவம் குறைந்து செல்வதை கானலாம். இங்கு குழுவின் உணர்வு செயல் சிந்தனை என்பன குறைவடைந்து தனியன்கள் முக்கியத்துவம் பெறும் நிலை தோற்றம் பெறும். சமூகத்தில் மனிதனை இனைப்பதற்க்கான பொது நம்பிக்கைகளின் தேவை இல்லாது போவதின் விளைவாகவே இவ் நிலமை தோற்றம் பெறுகின்றது என்பது டுர்கைம்மின் கருத்தாகும்.
இத்தகைய நம்பிக்கைகள் இல்லாத நிலை காணப்படும் சமூகத்திற்க்கு குடியியல் சட்டங்களுக்கு பதிலாக குடியியல் நிர்வாக விதிகள் ஏற்படுத்தபடுகின்றன என டுர்கைம் தனது தொழிபிரிப்பில் கூறுகின்றார். இதன் மூலம் உயர்நிலை உறுதிப்பாட்டுடன் சமத்துவத்தின் உயர் விழுமியங்கள், தாராண்மை, சகோதரத்துவம், நீதி போன்ற ஒழுக்கங்கள் சமூகத்தில் வெளிப்பட கூடியதாக காணப்படும். மேலும் சமாதானமான பயன்பாட்டுள்ள ஒப்பந்தங்கள் மூலமும் நவீன சமூகத்தில் உறுதிப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்கின்றார் டுர்கைம்.
இந் நூல்லின் இரண்டாம் பாகத்தில் அதிகரித்து வரும் தொழிற்பிரிப்பின் விளைவுகளை விரிவாக ஆராய்ந்தார் டுர்கைம். தொழிற்பிர்ப்பானது பொருளாதார உற்பத்தியில் நல்ல விளைவுகளைத் தருவதுடன் தனியன்களின் செல்வ விருத்திக்கும் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்க்கு உதவும் எனும் பழமைகள் வாதிகளின் கருத்துடன் முரண்படுகின்றார் டுர்கைம். மனித உயிரிகள் ஒர் அளவுக்குத்தான் பொருளாதாரப் பண்டங்களை அனுபவிக்கலாம். அதிகரிக்கும் உற்பத்திகளுக்கு மகிழ்ச்சிதான் ஊக்கமெனில் அவர்கள் எப்பொழுதோ உற்பத்தியை நிறுத்தியிருப்பார்கள். மகிழ்ச்சி என்பது சமூக நலத்துடன் தொடர்புடையது என்பது டுர்கைம்மின் கருத்தாகும். தொழிற்பிரிப்பு என்பது அதிகரித்த குடித்தொகையின் விளைவே என்கின்றார். குடித்தொகை அதிகரித்ததின் காரணம்மாக சமூகத்தில் போட்டி தன்மை அதிகரிக்கின்றது. தனியன்கள் பிழைப்பதற்க்கான சிறப்புத் தேர்ச்சியையும் அது தூண்டி நிற்கின்றது. எனினும் குடித்தொகை மட்டும் தொழிற்பிரிப்பினையும் அதன் வழி சமூக உறுதிப்பாட்டையும் மேற்கொள்ள முடியும் என்று கொள்ள முடியாது.
தொகுத்து நோக்கும் போது எமில் டுர்கைம்மின் தொழிற்பிரிப்பானது ஆதிகால மற்றும் நவீன சமூகங்களில் தொழிற்பிரிப்பின் முக்கியத்துவத்தினை கூறுவதுடன். தொழிற்பிரிப்பானது சமூகத்தில் உறுதிப்பாட்டினை எவ்வாறு தோற்றுவிக்கின்றது என்றும் அவ் உறுதிப்பாட்டை பேனுவதில் சட்டத்தின் பங்கு என்னவென்றும் தொழிற்பிரிப்பில் தெளிவாக கூறுகின்றார். அத்துடன் ஆதிகால சமூகத்திற்க்கும் நவீக சமூகத்திற்க்கும் இடையிலான ஒப்பீடாகவும் தொழிற்பிரிப்பு அமைகின்றது.
உசாத்துனை
1. சண்முகலிங்கம்.என்.2008. சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்'; நாகலிங்கம் நூலாலயம், யாழ்பாணம்
2. சண்முகலிங்கம்.என்.2002. தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர்கள்'; சமூகவியல் சமூகம் யாழ்ப்பானம்.
by thanojan
👍
ReplyDeleteVery useful bro
ReplyDelete