சமூக உளவியல்
சமூக உயவியலும் அதன் முக்கியத்துவமும் தற்கால சமூக பிரச்சினைகளை மையப்படுத்திய ஒர் வெளிப்படுத்தல்
உளவியல் என்பதிற்க்குறிக்கும் psychology என்ற ஆங்கிலப்பதமானது psyche , logos ஆகிய இரு சொற்களின் இனைவினால் ஏற்பட்டதாகும். psyche என்ற சொல்லானது கிரேக்க சொல்லில்லிருந்து பிறந்நதாகும். இச் சொல்லானது உயிர் மூச்சு (breath of life) என்ற பொருள் கொண்டதாய் அமைகின்றது. அதாவது இது ஆண்மா , ஆவி , உள்ளம் என அர்த்தப்படுகின்றது. இவ்வாறே logos எனும் பதமானது இயல் அல்லது கற்கை என்று பொருள்படுகின்றது. இதன் வடிவில்தான் உளவியல் என்பது “ஆன்மா பற்றிய கற்கை அல்லது உள்ளம் பற்றிய கற்கை” என வரைவிலக்கனப்படுத்தபடுகின்றது.
இவ் உளவியலானது ஒர் விதத்தில் உயிரியல் விஞ்ஞானத்துடனும் இன்னுமொர் விதத்தில் சமூகவியல் , மானிடவியல் , கல்வியியல் ,கலை , இலக்கியம் , மொழியியல் என்பனவற்றுடனும் இனைந்து பல்வேறுபட்ட வகைப்பாடுகளை கொண்டதாய் அமைகின்றது. அதன் ஆரம்ப கால வகைப்பாடுகளாக
• கட்டமைப்பு சார் உளவியல்
• செயற்பாடுசார் உளவியல்
• நடத்தைவாக உளவியல்
• கேஸ்டால் உளவியல்
என்பன காணப்படுகின்றன. இதே போன்று உளவியலின் நவீன வகைப்பாடுகளாக
• மருத்துவ உளவியல்
• கல்வி உளவியல்
• குழந்தை உளவியல்
• ஆளுமை உளவியல்
• சமூக உளவியல்
என்பன காணப்படுகின்றன. இத்தகைய வகைப்பாடுகளில் சமூக உளவியல் அதிக முக்கியத்துவம் பெறும் ஒன்றாக காணப்படுகின்றது.
சமூக உளவியல் என்பது சமூகச் சூழலில் மக்கள் எவ்வாறு சித்திக்கின்றார்கள், உணர்கின்றார்கள்இ நடந்து கொள்கின்றார்கள் என்பவற்றை குறித்த விஞ்ஞான பூர்வமான கற்கை என வரைவிலக்கனப்படுத்தலாம். நமது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சுக துக்கங்கள் அநேக சந்தர்ப்பங்களில் பிறரே நிர்னயித்து கொள்கின்றனர். பிறர்ரை பற்றியோ அல்லது நம்மை பற்றியோ நாம் சிந்திப்பது தான் நமது நடத்தையை பாதிக்க கூடியது. இதனைப் போன்று சமூக சூழலும் எமது நடத்தையை தீர்மானிக்கினறது. சமூக நடத்தையானது நமது உணர்தலாலும் சமூக கோட்பாடுகளினாலும் உந்தப்படுகின்றது. எனவே சமூக உளவியல் என்பது சமூக நடத்தை மற்றும் எண்னங்களை அறிவியல் சார்ந்து விளங்கி கொள்ளுதல்லாகும்
2
சமூக உளவியல் என்பது எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக நோக்கும் போது மனிதன் தன் குறியீடுகள்இ அடையாளங்கள்இ சைகைகள்இ ஆகியவற்றின் வழியே மனிதன் தன் மனவெளிப்பாடுகளை மற்றவர்களுக்கு உணர்த்திய போதே சமூக உளவியல் என்பது ஆரம்பித்துவிட்டது. சமூகம் ஒன்று தோன்றிய போது ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு வாழ தொடங்கிய போதே சமூக உளவியல் தோன்றிவிட்டது. எனினும் வரலாற்று ரீதியாக சமூக உளவியலானது ஆரம்பகால கிரேக்க தத்துவ ஞானிகள், பிரெஞ்சு தேச சமூக மெய்யியலாளர்கள் மானிடவியலாளர்கள் என்பவர்கள் கால காலமாய் சமூக உளவியலுக்கு வளம் சேர்த்து இத் துறையை வளர்ச்சிபாதைக்கு இட்டு சென்றுள்ளனர்.
என்பதை காணலாம்.
சமூக உளவியல்லானது காலத்தால் பிந்திய ஒர் கற்கை நெறியாகும். எனினும் இச் சிந்தனைக்கான ஆரம்ப கால சிந்தனைகள் கிரேக்க காலம் தொட்டே காணப்படுகின்றன. கிரேக்க நாட்டு அறிஞர்ரான பிளேட்டோ தனது நூல்லான குடியரசு என்ற நூலில் உயிர்களின் சமூக இயல்பாரந்த தன்மை தொடர்பாக குறித்துள்ளார். தனி மனிதர்களிடம் சுய இயலுமாற்றல் போதியளவூ இல்லாததனால் அவர்களிடம் சமூக இடைவினை வளர்ச்சியடைந்தது என்று இவர் கருதுகின்றார். இவ் கருத்தினை அரிஸ்டோட்டில் மறுதலித்து மனிதன் ஒர் அரசியல் விலங்கு என்று கருதினார்.
இதே போன்று Jeramy bentham பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு இன்ப துன்ப மனப்பாங்குகளை மையமாகக் கொண்டு “இன்ப வாதம்” என்கின்ற கொள்கையை முன்வைத்தார். இக் கொள்கையே சமூக உளவியல் தோன்றுவதற்க்கு பொருத்தமான ஆரம்பமாக அமைந்தது. இதன் பின் நோர்மன் றிப்பெட் 1897 இல் முதன் முதலில் சமூக உளவியலுக்கோர் ஆய்வூ கூடத்தை உருவாக்கிளார். இவரை தொடர்ந்து 1908 இல் வில்லியம் மக்டுகல் சமூகவியலுக்கோர் அறிமுகம் எனும்மோர் நூல்லை வெளியிட்டார் இதுவே சமூக உளவியல் தொடர்பான முதன் நூல்லாகும். இதே போன்று 1924 allport எனும் அறிஞர் சமூக உளவியல் எனும் நூல்லின் மூலம் தத்துவ ரீதியான பங்களிப்பை மேற்கொண்டார்.
இவ்வாறுபல அறிஞர்களின் பங்களிப்பின்னூடாக சமூக உளவியல்லானது வளர்ச்சியூற்றுவந்துள்ளது. இத்தகைய தோற்ற வரலாற்றினை கொண்ட சமூக உளவியலானது இன்று சமூகத்தில் பரிசோதனை முறையிலும் யதார்த்த ரீதியிலான ஆய்வாகவூம் அமைந்துள்ளது. சமூகத்தில் பண்பாட்டு சூழல்இ ஆளுமைஇ கருத்துருவாக்கம்இ சாதியம்இ புரட்சிஇ வர்க்கம் போன்ற பல்வேறுபட்ட விரிவாள தளத்தில் இருந்து சமூக உளவியல்லானது தனது ஆய்வூகளை மேற்கொள்கின்றது.
இத்தகைய சமூக உளவியல்லானது பல்வேறுபட்ட முக்கியத்துவத்தினை கொண்டதாய் அமைந்துள்ளது. அத்தகைய முக்கியத்துவங்களாக
சமூக உளவியல்லானது சமூகத்தில் மனிதனின் தனித்துவத்தையூம் சமூகத்தில் அவனது அந்தஸ்தையூம் பேனிகொள்ளவதாய் அமைகின்றது என்ற ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது அதாவது மனித வாழ்வின் முக்கியத்துவம் சமூகத்தன்மையாகும். மக்கள் கூடி வாழ்கின்றனர் அவர்கள் தமக்கிடையே சந்தோஷங்களையூம்இ துக்கங்களையூம்இ அனுபவங்களையூம் பகிர்ந்து கொள்கின்றனர். தமது எண்ணங்கள்இ கலாச்சாரங்கள்இ நம்பிக்கைகள் என்பவற்றை தம்மிடையே பரிமாற்றி கொள்கின்றனர். இருந்த போதிலும் சமூக உளவியலானது ஒவ்வொரு மனிதனையூம் தனித்துவமானவனாக நோக்குகின்றது. அது மனிதனின் பல்வேறுபட்ட நடத்தையை அறிய முற்படுகின்றது.
இதேபோன்று மனிதனின் சமூக இடைவினைகளை விளக்குகின்றது என்ற ரீதியில் சமூக உளவியல்லானது முக்கியத்துவப்படுகின்றது. இடைவினையானது இரு நபர்களின்னிடையில் நடக்கும் செயல்லை பாரத்து அறியக்கூடிய நடத்தையாகும். இங்கு இடைவினைகள் ஏற்படும் முறைகள், இடைவினையால் ஏற்ப்படும் தாக்கம்இ என்பனவற்றை சமூக உளவியல் அறிய முற்படுகின்றது என்ற ரீதியில் இப் பாடமானது முக்கியத்துவம் கொண்டதாய் அமைகின்றது. மேலும் சமூக உளவியல்லானது சமூக நடத்தை மற்றும் சிந்தனைக்கான காரணிகளையூம் புரிந்கொள்கின்றது. சமூக உளவியலானர் சமூக நடத்தை மற்றும் சிந்தனையூம் அமைக்கின்ற நிபந்தனைகளையூம் காரணிகளையூம் விளக்க முயல்கின்றனர். சமூக நடத்தையோடு தொடர்புள்ள வகையில் மக்களின் செயல்கள்இ உணர்வூகள், நம்பிக்கைகள், ஞாபகம், அனுமானம் போன்றவை தோற்றம் பெறும் பொருட்டு தாக்கம் செலுத்தும் சூழல்சார்மாறிகள், கலாசார காரணிகள்இ உயிரியற் காரணிகள் போன்றவற்றை சமூக உளவியல்லானது அறிந்து
கொள்கின்றது என்ற ரீதியில் சமூக உளவியல் முக்கியத்துவப்படுகின்றது.
அத்துடன் சமூக உளவியல்லானது சமூக எண்ணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது எவ்வாறு மாறுகின்றது மற்றும் அதனை எவ்வாறு அளக்கலாம் என்பதை அறிவதை நோக்கமாய் கொண்டுள்ளது. அத்துடன் மனித நடத்தையின் காரணகாரியங்களை அறிந்து எதிர்வூ கூறல்களையூம் முன்வைக்க கூடியது என்ற வகையில் சமூக உளவியல்லானது முக்கியத்துவப்படுகின்றது.
பொதுவாக சமூக உளவியலானது தனிமனித நடத்தை மற்றும் சமூககுழுக்களின் நடத்தைகள் எத்தகையதாக அமைகின்றது. அவை ஏற்படுவதற்க்கான காரண காரியங்கள் என்ன என்பதையூம் அவ் நடத்தையினால் ஏற்ப்படும் தாக்கங்கள் எத்தகையது என்பதையூம் அறிந்து கொள்வதில் முக்கியத்துவமுடையதாக உள்ளது.
சமூக உளவியல்லானது பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடைய பிரச்சினைபற்றியூம் அவர்களுடைய சிக்கல்களை பற்றியூமே பெரும்பாலும் ஆராய்வதாய் அமைந்தது. அறிஞர்கள் பெரும்பாலும் மனிதர்களின் ஒழுக்கங்கள் பற்றியூம் நடத்தைகளை பற்றியூம் சமூதாயத்தின் நல்லவை எவை கெட்டவை எவை என்பதை பற்றியூமே ஆராய்ந்தனர் இத்தகைய முக்கியத்துவத்தை கொண்ட சமூக உளவியல்லானது தற்காலத்தில் பல்வேறுபட்ட சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. சமூக உளவியலானது நுன் கடன் பிரச்சினைஇ போதைப் பொருள் பாவனைஇ சிறுவர் துஸ்பிரயோகம்இ பாடசாலை இடைவிலகல்இ இளவயது திருமணம்இ சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை மையமாக கொண்டதாய் அமைந்துள்ளது.
இலங்கையில் தற்காலங்களில் முக்கியத்துவம் பெற்றுவரும் பாரிய சமூக பிரச்சினையாக நுன் கடன் பிரச்சினை அமைகின்றது. இதன் வினைவாக பல மக்கள் தமது சொத்துக்களை இழந்தும் உடமைகளை இழந்தும் காணப்படுகின்றனர். இதன் விளைவாக தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் மன விரக்த்தி மற்றும் மன உளைச்சல் போன்ற உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். இதனால் தற்கொலை போன்றவையூம் ஏற்ப்படுகின்றன. இத்தகைய சமூகப்பிரச்சினைகளை சமூக உளவியல்லானது தமது ஆய்வூப்பரப்பிற்க்குள் உட்படுத்தி அவற்றிற்க்கான காரண காரியங்களை அறிந்து இத்தகைய உளவியல் தாக்கங்களில் இருந்து
மக்களை விடுவிக்க கூடியது
இதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்ளின் தோற்றம்இ பாடசாலை இடைவிலகல்இ இள வயது திருமணம் போன்ற பிரச்சினைகளை சமூக உளவியலானது கருத்தில் கொண்டு. ஒவ்வொரு தனிநபர்களையூம் அவர்கள் மீது இச் சமூகத்தின் செல்வாக்கு எவ்வாறு அமைந்துள்ளது. சமூகம் அவ் தனிநபர்களின் நடத்தையை எவ்வாறு தீர்மானிக்கின்றது என்பதை அறிந்து இப் பிரச்சினைகளுக்கான தீர்வூகளை முன்வைக்க கூடிய ஒரு கல்வியாகும். அடுத்து போதைப் பொருள் பாவனை தொடர்பாக நோக்கும் போது சமூக உளவியல்லானது தனிநபர் மற்றும் சமூக நடத்தையினை கருத்தில் கொள்வதால் இப் பாடமானது இப் பிரச்சினையில் இருந்து தனிநபரையூம் அவன் சார்ந்த சமூகத்தையூம் காப்பாற்ற கூடியதாய்யூள்ளது.
சமூக உளவியல் கற்கையானது சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரையூம் அவ் நபரின் தனித்துவத்தையூம் சமூக அந்தஸ்தையூம் பேனக்கூடியதாய்யூள்ளதால் சமூகத்தினால் தனிநபர் புறக்கனிக்கபடுத்தல்இ ஒத்திவைக்கபடுதல் என்பவற்றை இவ் கற்கை தனது அனுகுமுறைகளினால் தடுக்கின்றது. இதன் வாயிலாக கொலைஇ கொள்ளை போன்ற சமூக விரோத செயற்ப்பாடுகளில் ஈடுபடுவோர் உருவாகுவதில்லை. மேலும் சமூக உளவியலானது சமூக நடத்தை மற்றும் சிந்தனைகளுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முற்படுவதால் இக் கற்கையால் சமூகத்தில் நல்லவை எவை கெட்டவை எவை என பகுத்தறிய கூடியதாயூள்ளது. எனவே சமூகத்தினை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து ஒர் நல்வழிக்கு உட்படுத்த கூடியதாயய் அமைகின்றது.
தொகுத்து நோக்கும் போது சமூக உளவியல்லானது ஒவ்வொரு தனிநபர்களையூம், தனி நபர்களிக்கிடையிலான இடைவினையின் தன்மைஇ இடைவினையின் தாக்கம்இ சமூகம் தனிநபரின் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றதுஇ சமூகத்தின் நடத்தைஇ தனிநபர் மற்றும் சமூக சிந்தனைகள் , நடத்தையின் காரண காரியங்கள் என்பனவற்றில் தன் ஆய்வினை வியாபித்து கொண்டு மேற்கூறியது போன்ற சமூகப்பிரச்சினைகளை தடுப்பதுடன் அப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு தீர்வினையூம் வழங்குவதாய் அமைகின்றது. மேலும் தன் அனுகுமுறைகளின் ஊடாக இப் பிரச்சினைகள் சமூகத்தையூம் தனிநபரையூம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிந்து மேலும் அத்தகைய பிரச்சினைகள் மீண்டும் தோன்றாம்ல் தடுக்கின்றது.
உசாத்துனை
• பரணீதரன் .க. 2015. “உளவியல் பிரிவூகள் ஒரு பார்வை” . ஜீவநதி கலை அகம்
• கவிந்திரன். க. 2013. “உளவியல்”. குமரன் புத்தக இல்லம் கொழும்பு
• பேராசிரியர் முனைவர். ஜெயராசாஇ சபாஇ 2008. “உளவியல் முகங்கள்”. சேமமடு பதிப்பகம்
• அகோல்கர் .எ. “சமூக உளவியல்” . சென்னை தமிழ் வெளீயிட்டு கழகம்
NEW POST - சமூகவியலில் சமூக இடைவினை
No comments:
Post a Comment