Sunday, December 22, 2019

வறுமையின் கலாச்சாரம்

வறுமையின் கலாச்சாரம்

பொதுவாக வறுமையானவர்கள் தெருக்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடற்ற மக்கள் உணவு அற்றவர்கள், தீவிர பொருயாதார நெருக்கடியில் வாழ்பவர்களை; என கருதுகின்றோம். ஆனால் உண்மையில் வறுமை என்றால் என்ன என்பது தொடர்பாக தெளிவுபடுத்துவதில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்ற. இவ் வறுமையானது சமூகவியல் மற்றும் மானிடவியல் துறைகளில் ஒர் முக்கியப்படுத்தபட்ட கற்கை நெறியாக அமைகின்றது.
சமூகவியல் மற்றும் மானிடவியல் ரீதியாக வறுமை எனும் எண்னக்கருவை நோக்கும் போது 'வறுமை என்பது சமூதாயத்தில் வாழ்கின்ற ஒருவர் பற்றி அவரின் வாழ்க்கை பற்றி விபரிப்பது' என கொள்ளப்படுகின்றது. இதன் படி சமூக பொருளாதார வாழ்வில் மக்கள் தங்களுக்கு தேவையான ஆக குறைந்த அடிப்படை தேவைகளையேனும் நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலை வறுமை எனப்படும். இங்கு அடிப்படை தேவைகள் எனப்படும் போது உணவு, உறையுள், உடை என்பனவற்றை கொண்டு காணப்படும். இவற்றிற்க்கு மேலாக போதியளவு கல்வி, சுகாதாரம், சுத்தமான குடி நீர் என்பனவற்றை பெற்று கொள்ள முடியாத நிலையும் வறுமை என கொள்ளப்படும்.
சமூகவியலில் வறுமை பற்றிய கற்றலில் வறுமையின் கலாச்சாரம் என்னும் எண்னக்கரு முக்கியக்கியமானதோன்றாக அமைகின்றது. இவ் எண்னக்கருவானது 1957 இல் வட அமேரிக்க மானிடவியலாளர்ரான Oscar lowis எனும் அறிஞர்ரினால் முன்வைக்கபட்ட ஒன்றாக காணப்படுகின்றது. வறுமையின் கலாசாரம் என்பது வறுமைக்கு காரணமாகின்ற, வறுமையை ஏற்படுத்துகின்ற பண்பாட்டு அம்சங்களை குறித்து நிற்க்கின்றது.
2
வறுமையின் கலாச்சாரம் பற்றி ஒஸ்கார் லுயிஸ் பின்வருமாறு கூறுகின்றார். வறுமை என்பது ஒர் உப கலாச்சாரம் என்றும் அவ் வறுமை கலாச்சாரம் தோற்றம் பெற்று விட்டால் அதன் அம்சங்கள் அடுத்த பரம்பரைக்கு கொண்டு செல்லப்படுகின்றன என்றும் கூறுகின்றார். மேலும் இவ் வறுமையின் கலாசாரத்தினால் ஏற்படுகின்ற பொருளாதார அடைவுகள் மற்றும் தீர்வுகள் என்பன வரையறுக்கபட்டதாய் காணப்படும்.

வறுமை மற்றும் வறுமையின் கலாச்சாரம் என்பனவற்றிற்க்கிடையே வேறுபாடு காணப்படுவதாக ஒஸ்கார் லுயிஸ் கூறுகின்றார். வறுமையில் வாழும் அனைத்து மக்களும் வறுமையின் கலாச்சாரத்துக்கு உட்பட்டவர்களாக காணப்படுவதில்லை என்பது இவரின் கருத்து. இவர் நடுத்தர வர்க்க மக்கள் வறிய நிலைக்கு சென்றாலும் வறுமையின் கலாச்சாரத்தினுள் உள்வாங்கபடமாட்டார்கள் என்கின்றார். இதற்க்கு எடுத்துக் காட்டாக கிழக்கு ஜரேப்பாவில் வாழ்ந்த யுதர்களை எடுத்துக் கொள்கின்றார் ஒஸ்கார் லுயிஸ் இவ் மக்கள் வறுமையானவர்களாக காணப்படினும் வறுமையின் கலாச்சாரத்தினுள் உட்படவில்லை ஏன்னெனில் அவர்களது மதம், பாரம்பரியம் என்பன உலகத்தில் வாழும் யுதர்களுக்கு முக்கிய அடையாளத்தை கொடுத்துள்ளது. இவ் மதமும், பாரம்பரியமும், நம்பிக்கைகளும் அச் சமூகத்திற்க்கு ஒர் ஜக்கியபட்ட உணர்ரை கொடுக்கின்றது என்பதால் அவ் மக்கள் வறுமையானவர்கள் எனினும் வறுமையின் கலாச்சாரத்தினுள் உட்படமாட்டார்கள்.

சமூகத்தில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக வறுமையின் கலாச்சாரம் தோற்றம் பெற்றது. மேலும் இன ரீதியான புறமோதல்களும், வர்க்கரீதியான சமூகங்களும் இதற்கான காரணங்களாகும். எடுத்துக்காட்டாக இலங்கையில் ஏற்பட்ட முப்பது ஆண்டு காலமான போர் மற்றும் மலேசியாவில் இடம்பெற்ற இன மோதல் என்பனவற்றை கூறலாம். இங்கு பல்லின மக்கள் வாழும் இத்தகைண நாடுகளில் இன ரீதியான புற ஒதுக்கல்கள் அனைத்து விடயங்களிலும் காணப்படும். இதன் விளைவாக இங்கு வறுமையின் கலாச்சாரம் தோற்றம் பெறும்.
3
இது ஒருவரின் நடத்தையை தீர்மானிக்க கூடியதாக காணப்படுகின்றது. இது பினபற்றலுக்கு பல கூறுகளை கொண்டதாய் காணப்படுகின்றது. வறுமையின் கலாச்சாரமானது தனிநபர்களினது உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் அமைகின்றது. எடுத்துக்காட்டாக விளிம்பு நிலையில் காணப்படுபவர், தங்கி வாழ்பவர் அல்லது உதவியை எதிர்பார்பவர் போன்றவர்களின் தாழ்வுமனப்பாண்மை மற்றும் இயலாமை போன்ற உணர்வுகளை வெளிப்படுத்துவதாய் அமையும். நிகழ்காலத்தில் இதனை எதிர்கொள்வதற்க்காக மக்கள் சகிப்புத்தன்மையை கொண்டுள்ளனர்.
சமூகத்தில் வறுமைக்குட்பட்டவர்கள் தமது நிலைக்காக மேற்கொள்ளும் பிரதிபலிப்பாக வறுமையின் கலாச்சாரம் காணப்படுகின்றது. இது வர்க்க முறைப்படுத்தபட்ட மக்களின் எதிர்வினையாக காணப்படும். எடுத்துக்காட்டிற்க்கு இத்தகைய நிலைமையை காலனித்துவ சமூகங்களில் காணப்பட்ட ஏழைகளிடமும் மூன்றாம் மண்டல நாடுகளில் முதலாளித்துவத்திற்க்கு முன்னுள்ள சமூகத்திலும் இவ் நிலைமை காணப்பட்டது.

வறுமையின் கலாச்சாரம் பற்றி ஒஸ்கார் லுயிஸ் கூறும் போது இவ் கலாச்சார வறுமையில் வாழும் பிள்ளைகளின் அபிலாஷைகள் மற்றும் குணங்களில் ஏற்படும் மாற்றத்தை உலகியல் பார்வையில் நோக்க வேண்டும் என்கின்றார். இது தொடர்பாக “susan mayer” என்னும் சமூகவியலாளர் “what money can’t buy” எனும் தனது நூல்லில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் “there are little evidence to support that parental income has a significant effect on children’s outcomes” இதன் மூலம் வறுமையின் கலாச்சாரத்திற்க்கு உட்பட்ட பிள்ளைகளின் வெளிப்பாடுகளில் பெற்றோர்களின் வருமானத்தின் தாக்கம் காணப்படுவதை அறிந்து கொள்ளலாம்.
4
அத்துடன் வறுமையில் வாழும் பிள்ளைகள் தொடர்பாக ஒஸ்கார் லுயிஸ் தனது வறுமையின் கலாச்சாரம் எனும் கோட்பாட்டில் பின்வருமாறு கூறுகின்றார். இவர் வறுமையானவர்கள் அடுத்த வறுமையான சந்ததியினை உருவாக்குகின்றனர் என்பதை தெளிவாக்குவதுடன். வறுமையின் கலாச்சாரம் பரம்பரை பரம்பரையாக தொடரக்குடியது என்பதை தெளிவாக்கின்றது. இங்கு வறுமையின் சுழற்ச்சி வட்டம் தலைமுறை தலைமுறையாக கடத்தபடுகின்றது.
வறுமை தொடர்பான கற்றலில் வறுமையின் கலாச்சாரம் பற்றிய கோட்பாடுகள் விரிவடைந்து செல்லதாய் காணப்படுகின்றது. 1976 இல் கல்லி மற்றும் கொள்கைளில் காணப்பட்ட முரண்பாடுகள் நீங்கி Harding, M.L small, M.lamont, Bourgois, Newman, Carter போன்ற அறிஞர்கள் 21ம் நூற்றாண்டில் மீண்டும் இக் கோட்பாட்டை சீராக உருவாக்கினர். இவர்கள் ஏழைகள் வேறுபட்ட மதிப்புகளுக்காக போராடுகின்றனர் அவ்வாறான போராட்டங்களை கற்பதற்க்கான ஒர் வழிமுறையே வறுமையின் கலாச்சாரம் என்பர்.

வறுமையின் கலாச்சாரம் பற்றி கூறும் போது Oscar lowis , இ இனால் 1998 இல் வெளியிடப்பட்ட கருத்து முக்கியத்துவம் பெறுகின்றது. இவர் the people in the culture of poverty have a strong feeling of marginality, of not belonging they are like aliens in their own country, convinced that they are existing institution do not serve their interests and needs.. இக் கருத்தின் மூலம் Oscar lowis வறுமையின் கலாச்சாரத்திற்க்கு உட்பட்டவர்களின் மனநிலை பற்றி பேசுகின்றார். இவ் மக்கள் உதவியற்ற, சார்பு நிலையுடன் கூடிய பலமான சாதி ஆதிக்க உணர்வுகளை கொண்டவர்களாகவும். அவர்கள் தமது சொந்த நாட்டிலேயே வெளிநாட்டினர் போல் வாழ்கின்றனர் என்றும் அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் அயலவர்கள், அவர்கள் வாழ்வதற்க்கான சொந்த வழிகள் என்பவற்றை அவர்களே அறிவர் என்றும் கூறுகின்றார். எடுத்துக்காட்டிற்க்காக மெக்ஸிகோ வில் வாழும் சேரி புற மக்களை சுட்டி காட்டுகின்றார்.
5
தொகுத்து நோக்கும் போது வறுமையின் கலாச்சாரம் என்பது சமூகத்தில் வறுமைக்கு எட்பட்டவர்களின் பிரதிபலிப்பாகும். மேலும் இது வகுப்பு ரீதியான உணர்வல்ல உணர்வுமிக்க அந்தஸ்த்தாகும்;. இங்கு வறுமையின் சுமையானது சமூதாயத்தின் அங்கத்தவர்கள் மீது தினிக்கபடுகின்றது. எப்போது வறுமையில் உள்ள மக்கள் உணர்ச்சியுள்ள வர்க்கமாக மதிக்கபடுகின்றனரோ, எப்போழுது அவர்கள் சர்வதேசத்தின் மேற்பார்வைக்கு வருகின்றனரோ அது வரைக்கும் வறுமையின் கலாச்சாரமானது வளர்ச்சியடைந்து கொண்டுதான் செல்லும். ஆனால் தற்காலம் வரையிலும் வறுமையின் கலாச்சாரமானது வளர்ச்சி அடைந்து கொண்டுதான் செல்கின்றது.
6

No comments:

Post a Comment