சமூகவியல் மற்றும் உளவியலுக்கிடையிலான தொடர்பு
சமூகவியல் மற்றும் உளவியல் என்பன சமூக விஞ்ஞானங்களில் முக்கியத்துவம் பெறும் கற்கைகளாகும். இவை சமூக விஞ்ஞானங்கள் என்ற ரீதியில் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளன. சமூகவியல் என்பது மனித சமூகம் பற்றிய அறிவியல் கற்கையாகும். இது சமூக நடத்தை, சமூக விழுமியங்கள், சமூகத்தின் கலாசாரங்கள், சமூக உறவு மற்றும் சமூக தொடர்பாடல் போன்ற பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த அம்சங்களை விஞ்ஞான ரீதியாக ஆய்விற்குட்படுத்துகின்றது. அதே நேரம் உளவியல் மனிதனுடைய உளம் பற்றிய அறிவியல் கற்கையாகும். இக் கற்கை மனிதனுடைய நனவு நிலை,நனவிலி நிலை, உணர்வுகள், நடத்தைகள் மற்றும் எண்னங்கள் போன்றவற்றை விஞ்ஞான ரீதியாக ஆய்விற்குட்படுத்துகின்றது.
உளவியல் ஒரு தனிநபரினை மையமாக கொண்ட கற்கையாக அமைகின்றது. அதே நேரம் உளவில் தனிநபர் என்ற எல்லையை தாண்டி சமூகம் மற்றும் மனித குழுக்கள் பற்றிய கற்கையாக அமைகின்றது. இருந்தாலும் உளவில் மற்றும் சமூகவியல் என்பன மனித நடத்தையினை தனது பிரதான கற்கைப் பகுதியாக கொண்டிருக்கின்றன. சமூகவியல் சமூக நிறுவனங்கள், சமூக இடைவினை மற்றும் கலாசாரங்கள் போன்ற சமூக ரீதியான அம்சங்களை ஆய்விற்குட்படுத்துவதன் மூலம் மனித நடத்தையினை புரிந்து கொள்கின்றது. அதே நேரம் உளவியல் ஒரு மனிதனின் மனதை புரிந்து கொள்வதன் மூலம் அவனது நடத்தையினை கற்றுக்கொள்கின்றது.
சமூகவியல் ஒரு பரந்த கண்ணோட்டத்தை கொண்டிருக்கின்றது. இக் கற்கை சமூக கட்டமைப்புகள், சமூக நிறுவனங்கள், கலாசார மதிப்புகள் போன்ற சமூக ரீதியான அம்சங்கள் தனி மனிதரையும் மனித குழுக்களையும் எவ்வாறு தாக்கமடையச் செய்கின்றது என கற்கின்றது. மேலும் இக் கற்கை சமூக அம்சங்கள் சமூக நடத்தை, சமூகத்தின் நம்பிக்கை மற்றும் அடையாளங்களை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதையும் கற்கின்றன. உளவியல் சமூகவியல் போன்று பரந்தளவான கண்ணோட்டத்தை தொண்டதல்ல இது தனிநபரிதியான ஆய்வுகளை மேற்க்கொள்கின்றது. இது ஒரு மனிதனின் உள செயற்பாட்டையும், அறிவாற்றல் செயற்பாட்டையும், மனித உணர்வுகளையும் மற்றும் மனித நடத்தையை பாதிக்கும் உந்துதல்களையும் கற்கின்றது. அத்துடன் இக் கற்கை தனி மனிதனுடைய அனுபவங்கள் ஆளுமைப் பண்புகள் மற்றும் மன செயல்முறைகள் சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்பதையும் ஆய்விற்குட்படுத்துகின்றது.
இவ்விரு கற்கைப் புலங்களும் வெவ்வேறு நுட்பங்களையும் வழிமுறைகளையும் கொண்டிருந்தாலும் மனித நடத்தையினை கற்றுக்கொள்வதில் பொதுவான ஆர்வத்தை கொண்டுள்ளன. இதன் விளைவான சமூக உளவியல் என்ற புதிய கற்கைப் புலத்தின் தோற்றம் இடம் பெற்றது. இந்த சமூக உளவியல் சமூகவியல் மற்றும் உளவியல் என்பன இனைந்தவொரு கற்கை புலமாகும். இதில் ஒரு தனிநபரின் எண்னங்கள், உணர்வுகள் மற்றும் செயல்கள் பிறரினால் எவ்வாறு தாக்கத்திற்கு உள்ளாகின்றது என்பதை கற்கின்றது.
சமூகவியல் மற்றும் உளவியலுக்கிடையிலான வேறுபாடுகள்
1. உளவியல் தனிநபரின் உணர்ச்சிகள், படத்தைகள் மற்றும் சிந்தனைகள் பற்றிய ஆய்வாகும். சமூகவியல் தனிநபரை தாண்டி சமூக ரீதியில் சமூக நடத்தை, சமூக குழுக்கள் மற்றும் சமூக நிறுவனங்கள் என்பனவற்றை ஆய்வு செய்கின்றது.
2. ஒரு உளவியலாளர் அடிப்படை மருத்துவ அறிவினை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக ஒருவருடைய மூளை எவ்வாறு செயல்படுகின்றது போன்ற சில அடிப்படை மருத்துவ விடயங்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதே நேரம் ஒரு சமூகவியலாளர் சமூக கோட்பாடுகள் பற்றியும் நடைமுறைகள் பற்றியும் உறுதியான புரிந்துனர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
3. சமூகவியலாளர்கள் பொதுவாக சமூக பணிகளிலும் சமூக சேவைகளிலும் சமூக நீதிசார் துறைகளிலும் செயல்படுகின்றனர். அதே நேரம் உளவியலாளர்கள் மனிதவள முகாமைத்துவம் மற்றும் உளவளதுனை போன்ற துறைகளில் பங்களிக்கின்றனர்.
4. உளவியல் கற்ற உளவியலாளர்களினால் ஒருவருக்கு ஏற்படும் மனநல பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கு மருத்துவ சிகிச்சை வழங்க முடியும். ஆனால் சமூகவியலாளர் சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்க முடியாது.
சமூகவியல் மற்றும் உளவியலிடையிலான ஒற்றுமைகள்
1. இவை இரண்டும் மனித நடத்தையை ஆய்வு செய்ய கூடிய சமூக விஞ்ஞானங்களாகும்.
2. இரண்டு துறைகளும் மக்களின் வாழ்கையை மேம்படுத்துவதையும் மக்களில் பிரச்சினைகளை தீர்ப்பதிலும் அக்கறை கொண்டுள்ளன.
3. இத்துறைகள் தமக்கேன தனிப்பட்டு ஆய்வு பகுப்பாய்வு நுட்பங்களையும், சிக்கலை தீர்க்கும் வழிமுறைகளையும் கொண்டுள்ளன.
4. சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் சில பொதுவான திறன்களை கொண்டிருக் வேண்டியுள்ளது. உதாரணமாக விமர்சன ரீதியான சிந்தனை, பகுத்தறிவான சிந்தனை, பகுப்பாய்வு செய்பதற்கான திறன் மற்றும் சரியான தொடர்பாடலை மேற்கொள்வதற்கான திறன் என்பனவற்றை கூறலாம்.
5. Jacques Lacan மற்றும் sigmund freud போன்ற அறிஞர்கள் சமூகவியலிலும் உளவியலிலும் தம் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

No comments:
Post a Comment