Tuesday, April 9, 2019

சமூகவியல்

சமூகம் சார்ந்த விடயங்கள் அல்லது தோற்றபாடுகள் தொடர்பான கற்றுக்கொள்ளலுக்கு சமூகவியல் கோட்பாடுகள் பெரும்பங்காற்றுகின்றன ஆராய்க.

சமூகம் சார்ந்த விடயங்கள் அல்லது தோற்றபாடுகள் என்பன கால ஒட்டத்திற்க்கும் புறச் சூழலுக்கும் ஏற்ப மாறிகொண்டு செல்பவையாகவே அமைந்துள்ளன. இதற்கேற்ப சமூகத்தோற்றபாடுகள் பற்றிய சமூகவியல் கோட்பாடுகளும் மாற்றமுற்று செல்பவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் கோட்பாடு என்பது சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான விடயங்களையூம் விபரிப்புகளையூம் மேற்கொள்ளும் தர்க ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கூற்றுக்களின் தொகுதி எனலாம். சமூகவியல் மேற்க்கு ஐரோப்பிய நாடுகளில் தோற்றம் பெற்றதாயினும் அவ் நாடுகளின் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப அவை பல வேறுபாடுகளை கொண்டுள்ளன இதன் அடிப்படையில் கோட்பாடுகள் பல்தன்மை பொருந்தியவையாக உள்ளன. அவை சமூகவியலாளருக்கு சமூகவியலாளர் மற்றும் நாடுகளுக்கு நாடு வேறுபாடுகள் உடையவையாக அமைகின்றன.

ஒரு பாடநெறி சார்ந்த கோட்பாடுகள் அப்பாட நெறியின் தோற்றம்  வரலாறு என்பவற்றுடன் தொடர்புடையவையாகும். அந்தவகையில் சமூகவியலும் மானிடவியலும் இனைந்த பாடநெறிகளாக வளர்ச்சியடைந்து வந்தமையால் சமூகவியல் கோட்பாடுகளையூம் மானிடவியல் கோட்பாடுகளையூம் பிரித்து நோக்குவது கடினமானதாகும். அந்த வகையில் செயற்பாட்டுவாதம், கட்டமைப்புவாதம் ,விமர்சனவியற்கோட்பாடுகள் போன்றவை இவை இரண்டுக்கும் போதுவானவை. இதே போன்று தனியே சமூகவியல் கோட்பாடுகளாக தொல்சீர் சமூகவியல் கோட்பாடுகள் இ வியாக்கியானிப்புவாதம் இ விமர்சனவியல் வாதம் இ நவீனத்துவம் இ பின் நவீனத்துவம் என்பன அமைகின்றன.

அடுத்து சமூக தோற்றபாடுகள் தொடர்பான கற்றலுக்கு சமூகவியல் கோட்பாடுகளின் பயன்பாட்டு தன்னையை நோக்குவோம்மாயின்.
சமூகவியல் சார்ந்த கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடாக தொல்சீர் சமூகவியல் கோட்பாடு அமைகின்றது. பிரஞ்சு புரட்சி மற்றும் தொழில் புரட்சியின் விளைவாக அதிகம் பாதிக்கபட்ட சமூகத்தையூம் மக்களையூம் அறிந்து கொள்ள முயன்றதின் விளைவாகவே தொல்சீர் சமூகவியல் கோட்பாடுகளின் தோற்றம் உண்டானது. இக் கோட்பாட்டில் முதன்மையான அறிஞர்ராக ஒகஸ்ற் கொம்ற் காணப்படுகின்றார். இவர் சமூகவியலில் தொடர்பாக

நேர்காட்ச்சிவாதம் 
• மனித முன்னெற்றத்திறக்கான விதி  
• சமூக நிலையமைப்பு 
• சமூக இயங்கியல் 
• ஆய்வூ முறைகள்
• அறிவியலின் தரவரிசை
போன்ற பல கோட்பாடுகளை முன்வைத்தார்

நேர்காட்ச்சிவாதம்; எனப்படுவது புலநறிவாதம் , நிச்சயவாதம் , புறமெய்மைவாதம் என சமூகவியல் புலங்களில் அறியப்படுகின்றது. சமூகம் தொடர்பான ஒர் இயற்கை வழியினை கண்டுகொள்ளும் பொருட்டே இவ்வாதம் முன்வைக்கபட்டது. இவ் வாதம் நேராக கண்ட உண்மைகளை மட்டுமே கருத்தில் கொள்வதாக அமைகின்றது. இது சமூகத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றிய எதிர்வூ கூறலாகவூம் அமைகின்றது.

அடுத்து மனித முன்னேற்றத்திறக்கான விதி தொடர்பாக நோக்கும் போது கொம்ற் மனித குலத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டு வந்த தொடர்மாற்றங்கள் தொடர்பாக அவதானித்ததின் விளைவாக இவ் கோட்பாட்டை முன்வைத்தார். இவர் மனித இன முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய இரண்டையூம் வரலாற்று ரீதியான பரிமான அடிப்படையில் ஆராய்ந்து இக் கோட்பாட்டை முன்வைத்தார். ஓர் தனியனின் மன வளர்ச்சிக்கு சமாந்தரமாகவே சமூகத்தின் பரிமான வளர்ச்சியூம் அமைந்தது என இக் கோட்பாட்டின் மூலம் தெரிவிக்கின்றார்.


மனித மன வளர்ச்சியானது பின்வரும் மூன்று படி நிலை கொண்டதாய்யூள்ளது.
1. இறையியல் நிலை 
2. நுண் பொருள் கோட்பாடடியல் நிலை 
3. புறமெய்மை நிலை
இவ் படி நிலைகளில் சமூகமும் வளர்ச்சியூற்றுள்ளது.

இறையியல் நிலை என்பது கி;.பி 1800 காலப்பகுதியாக கருதப்படுகின்றது. சமூக ஒழுங்குகளையூம் இ சமூககட்தமைப்புகளையூம் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வூகளுடன் தொடர்புபடுத்த முயன்ற காலமே இதுவாகும். இக் காலத்தில் சமூகம் தமக்கு அப்பாற்பட்ட இறை மற்றும் கடவூள் போன்ற கருதுகோள்களினால் ஆளப்படுவதாய் அமைந்தது. இறை சத்திகள்தான் உலக உயிர்களை இயக்குவன இ செயல்களை தீர்மானிக்கின்றன அனைத்திற்க்கும் இயல்நிலை கடந்த சத்திகளே காரணம் என நம்பிக்கை கொண்ட சமூகமே இக் கால சமூகமாகும்.

இரண்டாவது நிலையான நுண்பொருள் நிலையானது தத்துவ ஞானம் வளர்ச்சி கண்டதன் விளைவாக தோற்றம் பெற்ற நிலையாகும் இயல் நிலைக்கு மேலான சத்திகள் இக் காலத்தில் மெய்யியல் சிந்தனைகளாக மாற்றபட்டன. உலக இயக்கத்திற்க்கு இயல் நிலை கடந்த சத்திகள்தான் காரணம் என்பதை இக் காலத்துச் சமூகம் ஏற்க்க மறுத்தது. தாம் கண்டுகொண்டவற்றின் பின்னாதாரமான பரமாத்தீக உண்மைகளை பற்றி அறிய முற்பட்ட காலமே இதுவாகும்.

அடுத்து புறமெய்மை அல்லது நேர்காட்ச்சி நிலை என்பது கற்பனை நீங்கிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பருவமாகும். கி.பி 1800 க்கு பிற்பட்ட காலமே இதுவாகும். சமூகம் மேற்கூறிய இரு நிலைகளிலும் இருந்து விடுபட்டு அறிவூ”ர்வமாக சிந்திக்க தொடங்கிய காலம் நேர்காட்ச்சி நிலை எனலாம். அறிவூக்கு எட்டியதையே அளக்கின்ற இந்த பருவமே மனித மனச்செயற்பாட்டின் உச்ச நிலை என்பது கொம்ற்றின் கருத்து.

இவ் கோட்பாட்டின் மூலம் இந்த படிநிலைகளுடன் தொடர்புடைய வகையில் காணப்பட்ட சமூக நிலையமைப்புகள் இ சமூக ஒழுங்கின் தன்மை இ மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலை என்பவற்றிலும் கொமற் கவணம்செலுத்தினார்.

  • இறையியல் நிலை இரானுவமயமானது குடும்பம் விடு சாரந்நது பினைப்பு அடிப்படையானது
  • நுன்பொருள் கோடபாடு சட்ட ரீதியானது அரசு கூட்டுவாழ்வூ பயபத்தியைகொண்டது
  • புறமெய்மை தொழில் சார்ந்து இனம் உலகளாவியது சாத்வீகம் உணர்வை கொண்டது
இவ்வாறு சமூகத் தோற்றபாடுகள் பற்றி மனித முன்னெற்றத்திறக்கான விதி எனும் கோட்பாட்டில் கொம்ற் கூறியூள்ளார். மேலும் சமூகம் இன்னும் இறையியல் நிலையிலும் இ நுன் பொருள் கோட்பாட்டு நிலையிலும்மே அதிகளவூ இருப்பதாக கொமற் கருதினார். ஆத்துடன் இவ் சமூகவியல் கோட்பாடு சமூகத்தோற்றபாடுகளின் பரிமானவளர்ச்சி பற்றி அறிவதற்க்கு பயன்படுவதாய்யூள்ளது.

அடுத்து நாம் தொல்சீர் சமூகவியல் கோட்பாட்டில் கொமற்றியால் முன்வைக்கப்பட்ட மற்றுமொர் கோட்பாடான சமூக நிலையமைப்பு சமூக தோற்றபாடுகள்ளை பற்றி கற்றுகொள்வதில் எத்தகைய பங்காற்றுகின்றது. என்பது தொடர்பாக நோக்குவோம்மாயின். சமூக நிலையமைப்ப என்பது சமூகம் இருக்கும் நிலையை குறிக்கின்றது. இதில் சமூகத்pன் ஒழுங்கு அமைந்திருக்கும் முறையையூம் இயற்கை விதிகளின் அடிப்படையில் ஒழுங்கு எவ்வாறு அமைகின்றது என்பது பற்றியூம் கொம்ற் கூறுகின்றார். கொமற் தமது நிலையியல் தொடர்பான ஆய்வில் சமூக உயிரியின் பகுதியளிடையேயான ஒருமைப்பாட்டிற்கான அடிப்படைகளையூம் விளக்கினார்.

சமூகவியலை உயிரியலுடன் இனைத்த கொமற் நோக்கிய போது சமூக உயிர்களின் தனித்துவத்தை அறிந்து கொண்டார். சமூக ஒருங்கினைவினை ஆத்மார்த்தமான பினைப்புகளின் வழியேதான் ஏற்படுத்த முடியூம்மென்று கொம்ற் நம்பினார் இதனால் சமயம் இ மொழி போன்ற சமூக கூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார். மேலும் உயிருக்கு செயல்பட அதன் கூறுகள் எவ்வாறு அவசியமோ அவ்வாறே சமூக ஒழுங்கு அமைய அதன் கூறுகளிடையே பினைப்பு இருத்ததல் வேண’டு என்றார் கொம்ற். சமூகத்தில் அங்கத்தவர்கள் ஒற்றுமையாக பினைப்புடன் வாழும் போதுதான் சமூக ஒழுங்கு ஏற்படுகின்றது என்று வலியூறுத்துகின்றார் கொமற்.

சமூக நிலையமைப்பு போன்று சமூகம் தொடர்டபாக கொம்ற்றினால் முன்வைக்கபட்ட மற்றுமொர் சமூகவியல் கோட்பாடாடக சமூக இயக்கபாடு காணப்படுகின்றது. நிலையியல் தொடர்பான தனது ஆய்வூ தேடலை தவிர்க்க முடியாதவாறு சமூக இயக்கவியலுடன் இனைந்த ஒன்றாகவே கொம்ற் கருதினார். சமூகத்தில் காண்ப்படும் நிலையமைப்பு அதன் நிலையில் முன்னெறிச் செல்லும் நிலையே சமூக இயக்கபாடு என குறிப்பிடபடுகின்றது. சமூக இயக்கவியலை ஒர் ஒழுங்கின் விருத்தியென கூறுகின்றார் கொம்ற். சமூக ஒழுங்கினை தொடர்ந்து எப்பொழுதும் முன்னெற்றம் அமையூம் என்பது கொம்ற்றின் நம்பிக்கை இத்தகைய முன்னெற்றமே சமூக இயக்கபாடாகும். சமூக முன்னெற்றத்திறக்கு அறிவூம் சிந்தனையூம் காரணம் என்று குறிப்பிட்டு சமூக நிலையமைப்பு மற்றும் சமுக இயக்கபாடு ஆகியவற்றை சமூகத்தின் அம்சங்களாக கொண்டு தன் கோட்பாட்டை விளக்கியூள்ளார் கொமற்.

அடுத்து தொல்சீர் சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறுபவர்ராக எமில் துர்கைம் உள்ளார்  இவர் சமூகவியல் கோட்பாட்டில்
• சமூக உண்மைகள் 
• சமூகத்தில் தொழிற்பிரிப்பு
• சமூக வகைப்பாடு 
• சமயத்தின் சமூகவியல் 
• தற்கொலை 
போன்ற பல்வேறுபட்ட எண்னகருக்களை முன்வைத்துள்ளார். இவர் முன்வைத் எண்ணகருக்களில் முக்கியமானது சமூக உண்மையாகும். சமூக உண்மை என்ற பதம் சமூகத்துடன் தொடர்பான நிகழ்வை அல்லது விடயத்தைக் குறிக்கின்றது. சமூதாயத்தில் இடம்பெறும் சில நிகழ்ச்சிகளில் சமூகத்தின் பங்கு காணப்படும். எடுத்துகாட்டாக அரசியல் , மதம், இலக்கியம் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு சமூகம் மூலகாரணியாக திகழும் இவ் சமூக நிகழ்வூகளும் விடயங்களுமே சமூக உண்மைகளாகும்.
இதே போன்று தொழிற்பிரிப்பு எனும் தன் எண்ணகருவில் சமூதாய ஒற்றுமையை பற்றி இவர் ஆராய்கறின்றார். வேலைகள் பகுக்கபட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பதே தொழிற்பிரிப்பாகும். இவ்வாறான பகுப்பு தேவைகள் மற்றும் திறமைகள் என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபடுகின்றன.
டுர்கைம் தனது கோட்பாட்டில் இரண்டுவகையான சமூகங்களை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்டுள்ளார். இயந்திரவியல் கட்டொருமைப்பாடு , உயிரினவியல் கட்டொருமைப்பாடு இவ் சமூகங்களை இவர் தொழிற்பிரிப்பின் இரண்டு விதிகளான அடக்கு முறை சட்டம் மற்றும் மீட்டளிப்புச்சட்டம் என்பவற்றுடன் தொடர்புபடுத்துகின்றார்.
மேலும் இவர் தற்கொலை எனும் தனது ஆய்விலும் சமயத்தின் சமூகவியல் எனும் ஆய்விலும் பல்வேறு சமூகதோற்றபாடுகள் பற்றி எடுத்து கூறுகின்றார். அத்துடன் தற்கொலை என்பதை ஒர் சமூகத்தின் விளைவூ என இவர் கருதுகின்றார். அத்துடன் சமயம் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய தனியன்களை தூண்டுவன என்றார்.

இவரின் கோட்பாடுகள் சமூகத்தோற்றபாடுகளின் மாற்றங்கள் சமூகத்திற்க்கும் தனியனுக்கும் இடையே உள்ள உறவின் தன்மை என்பன தொடர்பான கற்றுகொள்ளலுக்கு பயன்னுடையதாக உள்ளது.

அடுத்து சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடாக கார்ல் மார்க்ஸ் இன் கோட்பாடுகள் அமைந்துள்ளன. இவர் அன்னியமாதல் கோட்பாடு இ வகுப்பு கோட்பாடு போன்ற பல கோடபாடுகள் மூலம் சமூக தோற்றபாடுகள் பற்றி கூறுகின்றார். தமது வகுப்பு கோட்பாட்டில் மார்க்ஸ் பல சமூகங்களையூம் அவற்றில் காணப்படும் சமூக வகுப்புக்களை இனம் காட்டினார். ”ர்வீக பொதுவூடமை சமூகத்தில் சமூக வகுப்புக்கள் எதுவூம் காணப்படவில்லை என்றும் பிற்பட்ட காலங்களில் தோன்றிய பொருளாதார முரண்பாடுகளினால் பிற்பட்ட சமூகங்களான அடிமைச்சமூகம் இ நிலவூடமைச்சமூகம் இ முதளாளி சமூகம் போன்றவற்றில் முதலாளி மற்றும் தொழிலாளி போன்ற சமூக வகுப்புக்கள் தோற்றம் பேற்றதாக கூறுகின்றார். இவ் சமூகவியல் கோட்பாட்டின் மூலம் சமூகத்தோற்றபாடுகளான சமூகவகுப்புக்களை பற்றி கற்றுக்கொள்ள கூடியதாகவூள்ளது. மேலும் மார்க்ஸ் சமூகத்தோற்றபாடுகளை பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தார். இதன் விளைவாக சமூகத்தோற்றபாடுகளை பொருளாதாரத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ள கூடியதாகவூள்ளது.
அடுத்து சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடான செயற்பாட்டுவாதம் சமூகத்தோற்றபாடுகளை பற்றி கற்றுக்கொள்வதில் எவ்வாறு பங்காற்றுகின்றது என்பது தொடர்பாக நோக்குவோம்மாயின். சமூகவியல் கோட்பாட்டு வளர்ச்சியல் செயற்பாட்டுவாதம் முக்கிய இடத்தினை பெறுகின்றது. சமூகம் என்பது பல கூறுகளினால் ஆக்கபட்டதொன்றாகும் இச் சமூகம் முழுமையாக இயங்கும் பொருட்டு அவ் கூறுகள் ஒன்றினைந்து செயற்படுகின்றன என்பதை விளக்குவதே செயல்பாட்டியல்வாதமாகும்.

இவ் செயல்பாட்டு வாதத்தினை வளர்த்து எடுத்தவர்களில் முக்கியமானவர் வூயடஉழவ pயசளழn என்பவர்ராவார். செயற்பாட்டிற்க்கு இன்றியமையாத தேவைகளை சிலவற்றினை சமூகம் அடைந்தால்தான் சமூகம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பது இவரின் கருத்து. இவர் சமூதாயம் மற்றும் அதன் இயக்கத்தை அறிய முறையான செயற்பாட்டு அணுகுமுறையைக் கையாண்டார். சமூக அமைப்பானது பண்பாடு இ ஆளுமை இ போன்ற பல்வேறுபட்ட கூறுகளை கொண்டதாய் அமைந்துள்ளது. அத்துடன் சமூக அமைப்புகளும் அதன் கூறுகளும் ஒன்றிலொன்று தங்கி உள்ளதாக இவர் கருதுகின்றார்.

செயற்பாட்டுவாதம் போன்று சமூகவியல் கோட்பாட்டுகளில் முக்கியத்தவம் பெறும் கோட்பாடாக கட்டமைப்புவாதமும் காணப்படுகின்றது. சமூகவியலில் குறிப்பாக மானிடவியல்லில் டநஎi ளவசயரளள இந் சிந்தனையை முன்வைத்தார். கண்களுக்கு புலப்படக்கூடிய விடயங்களுக்கு அப்பால் ஆழத்தில் உள்ள சமூக கட்டமைப்பினை பிரதானப்படுத்திய ஒரு சிந்தனையாக இதனை முன்வைத்தார். இக் கட்டமைப்புக்கள் வெளிதோற்றங்களை உருவாக்குகின்றன என்பது இவரது வாதம். மேலும் இக் கோட்பாடானது சமூக கட்டமைப்புகளில் ஏற்படும் முரண்பாடுகளின் விளைவாகத்தான் சமூக மாற்றம் ஏற்படுகின்றது என்கின்றது. மேலும் சுயனநஉடகைக டீசழறn என்பவரின் கருத்துப்படி சமூக கட்டமைப்பு என்பது தனி நபர்களிடையான ஸ்திரமான வலைப்பின்னல் போன்ற உறவூமுறைகள் என குறிப்பிடுகின்றார். இதன் மூலம் இக் கோட்பாடு சமூக கட்டமைப்பு பற்றியூம் சமூக மாற்றம் பற்றியூம் கற்றுக்கொள்ள உதவூவதின் படி சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றுக்கொள்ளலுக்கு பயன்படுகின்றது.

இத்தகைய கட்டமைப்பு வாதம் போன்றே விமர்சனவியல்வாதமும் சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு உதவூகின்றது. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அறிவை பெறுவதற்க்கு தடையாக இருக்கும் அதிகார மையங்களை கேள்வி கேட்hதின்னூடாகவூம் கலந்துரையாடியூம் அதன் மூலம் ஒர் மாற்றத்தினை ஏற்படுத்துவதும் விமர்சனவியல்வாதமாகும். இக் கோட்பாடு 1923 இல் அறிமுகப்படுத்தபட்டது. இக் கோடபாடானது சமூதாயம்(சோசலிச மற்றும் முதலாளித்துவ சமூதாயம்) இ அறிவூ இ பொதுக்களம் போன்ற பல்வேறு விடயங்களை விமர்சனபால்வையூடன் நோக்குவதின் விளைவாக சமூகத்தோற்றபாடுக் பற்றிய கற்றலுக்கு உதவூகின்றது.

இதேபோன்று சமூகவியல் கோட்பாடுகளில் ஒ;ன்றான நவீனத்துவமும் சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான கற்கைக்கு பயன்னுள்ளதாக அமைகின்றது. 18ம் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவவியலாளர்களான வெபர் இ மார்க்ஸ் இ காணட் போன்றவர்களினால் நவீனத்துவம் பற்றியூம் இ சமூக பரிணாம வளர்ச்சி பற்றியூம் பல கருத்துக்களை முன்வைத்ததின் மூலம் இக் கோட்பாடு தோற்றம் பெற்றது. இக் கோட்பாடானது அரசியல் பொருளாதார வேறுபாடுகள் இ நவீன பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி இ சமூக மாற்றங்கள் என்பன இக் கோட்பாடு தோன்ற வழிவகுத்தது.

நவீனத்துவமானது சமூகத்தில் காணப்படும் கலாச்சார மாற்றங்களையூம் அதன் வேறுபாடுகளையூம் காண்பிக்கின்றது. நவீன நகரங்கள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றினை ஆராய்வதன் மூலம் நவீனத்துவம் மானுடவியலில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. மேலும் “டார்வினிஸம்” போன்றவற்றின் மூலம் சமூகவியலிலும் முக்கிய இடத்தை நவீனத்துவம் பெறுகின்றது. இதன் வழியில் சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு நவீனத்துவம் எனும் கோட்பாடு பயன்படுவதாய்யூள்ளது.
நவீனத்துவம் போன்றே பின் நவீனத்துவமும் சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான கற்றலுக்கு உதவூகின்றது. இது அண்மை காலத்து விஞ்ஞான தொழில்நுட்ப அரசியல் மாற்றங்களை முன்னைய நிலையில் இருந்து வேறுபடுத்த கூடிய கோட்பாடாகும். இக் கோட்பாடானது மனித நடத்தையோடு கூடிய பலவற்றை பல கோணங்களில் ஆய்வூக்கு உட்படுத்துகின்றது.

அத்துடன் பின் நவீன்த்துவவாதிகளினால் முன்வைக்கபட்ட முக்கிய சிந்தனையாக சமூக இயக்காற்றல் காணப்படுகின்றது. சமூக நிகழ்ச்சிகளையூம் அவை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்து வரும் பாங்கினையூம் அவற்றிற்க்கான காரணங்களையூம் அவற்றின் விளைவூகளையூம் இக் கோட்பாடு கவணத்தில் கொள்கின்றது. இதன் அடிப்படையில் இக் கோட்பாடு சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு பயன்படுகின்றது.

தொகுத்து நோக்கும்மிடத்து சமூகவியல் கற்கை துறையில் சமூகம் தொடர்பான கற்றுக்கொள்ளல் அவசியமான ஒன்றாக அமைகின்றது. அந்த வகையில் சமூகவியல் மாணவர்களுக்கு சமூகம் தொடர்பான கற்றலுக்கு சமூகவியல் அறிஞர்களினால் முன்வைக்கபட்ட சமூகவியல் கோட்பாடுகள் பெரிதும் பயனுடையவையாக அமைகின்றன். இக் கோட்பாடுகள் சமூகத்தின் பரிமாணவளர்ச்சி இ சமூக நிலையமைப்பு இ சமூக நிகழ்வூ இ சமூக நிறுவணம் இ சமூக இயக்கம் இ சமூகத்தின் வகைப்பாடுகள் இ நவீன சமூகத்தின் சமூகமாற்றம் போன்ற பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த விடயங்களை பற்றி பல கோணங்களில் ஆய்வூகளை மேற்கொண்டுள்ளமையினால் சமூகம் பற்றிய தோற்றபாடுகள் பற்றி கற்றகொள்வதில் இக் கோட்பாடுகள் அதிக பயன்னுடையவையாக அமைகின்றன.

BY; J K SATHEESH

உசாத்துனை நூல்கள்
• கலாநிதி . சண்முகலிங்கன் .எண். 2002. தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர். சமூகவியல் சமூகம் யாழ்ப்பாணப் பல்கலைகழகம்
• கலாநிதி . சண்முகலிங்கன் .எண். 2008. சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்இ நாகலிங்கம் நூலாலயம் யாழ்ப்பாணம்
• சந்திரசேகரன்.சோ. 1996. அபிவிருத்தியூம் கல்வியூம் . தர்ஷனா பிரசுரம்இ பக்கம் 5-7

1 comment: