Wednesday, October 19, 2022

பால்நிலை சமூகவியல்

 

பால்நிலை சமூகவியல்

பால்நிலை வன்முறை

சமூகம் தொடர்பான கற்கை நெறிகளில் சமூகவியல் முக்கியத்துவம் பெறும் கற்கையாக வளர்ச்சியடைந்துள்ளது. இப் பாடத்தின் முக்கியமான துனை துறைகளில் பால்நிலை சமூகவியல் முக்கியத்துவம் பெற்று காணப்படுகின்றது.. ஆண் பெண் சிறப்பியல்புகள், பண்பாடுகள், வகிபாகங்கள், நடத்தை கோலங்கள் என்பன தொடர்பான கற்கையாக இவ் பால்நிலை சமூகவியல் அமைகின்றது.

பொதுவாக வன்முறை என்பதுஒரு நபர் அல்லது குழு சமூகத்திற்கெதிராக காயம், மரணம், உளவியல் தீங்கு மற்றும் இழப்பு ஆமியவற்றை ஏற்படுத்தும் விதமாக அல்லது இவை நிகழ வாய்ப்புகளை எற்படுத்தும் விதமாக உடல் பலம் மற்றும் அதிகாரம் என்பவற்றை பயன்படுத்துதல் வன்முறை எனப்படும். இதன் படி ஒவ்வொரு மனித உயிரும் உயிருடன் வாழ்பவரும் இயற்கையாகவே ஆண், பெண் என பொதுவாக பிறப்பின் போது வகுக்கபடுகின்றது இதன் அடிப்படையிலேயே மனிதனின் பாலியல்பு தீர்மானிக்கபடுகின்றது. இத்தகைய பால்நிலைகளிடையே இடம்பெறும் துஸ்பிரயோகம் அதிகாரபிரயோகம் என்பன வன்முறைகளாக கணிக்கபடுகின்றன


முதன் முதலாக 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட பெண்களுக்கான வன்முறையை ஒழிக்கும் உறுதிமொழியிலேயே பாலினம் சார்ந்த வன்முறைக்கு முதலாவது உத்தியோக 'ர்வ வரைவிலக்கனத்தை வழங்கபட்டது. பெண்கள், பெண்பிள்ளைகள் ஆண்கள், அல்லது சிறுவர்கள் ஆகியோருக்கு எதிராய் இழைக்கபடும் வன்புனர்வு உடல், உளரீதியான பாலியல் தன்மை கொண்ட வேறு ஏதேனும் தாக்குதல் இதில் அடங்கும் இது உள மற்றும் உடல் ரீதியான தாக்கங்களை ஏற்படுத்துவதாய் அமைகின்றது.

பால்நிலை வன்முறைகளினால் எல்லோரும் பாதிப்படைகின்றனர் எனினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவுகின்ற வரலாற்று ரீதியான கட்டமைப்புக்கள் ,ஏற்ற தாழவுகள் மற்றும் உலகமெங்கும் பெண்கள் எதிர் கொள்ளும் பால்நிலை ரீதியான பாரபட்சங்கள் பெண்கள் மற்றும் பெண்பிள்ளைகளுக்கு அதிக பால்நிலை ரீதியான வன்முறைகள் இடம்பெற வாய்ப்பளிக்கின்றது. மேலும் பாரம்பரிய ஆனாதிக்கம் கொண்ட சமூக முறைமை பெண்களை பலம் குன்றியவர்களாகவும் மதிப்பற்றவர்களாகவும் கருதுகின்றது. இத்துடன் ஆண்களின் ஆண்மைத்துவம் மேலாதிக்கம் என்பன ஆண்களை பெண்கள் மீது வன்முறைகளை ஏற்படுத்த ஊக்குவிப்பதாய் அமைகின்றது.

அத்துடன் ஆண்களின் ஆண்மைத்துவம் பலம் ஆக்கிரமிக்கும் தன்மை மேலாதிக்க சிந்தனை மற்றும் எதிர் பாலூனர்வு சிந்தனை என்பனவற்றை நியாயப்படுத்தும் அனுமானங்கள் அத்துடன் ஆண்கள் பெண்களை கட்டுபடுத்த வன்முறையை கையாளும் போக்கு என்பன பெண்களை அதிக அளவில் பால்நிலை வன்முறைக்கு ஆளாக்க செய்கின்றது.

அடுத்து நாம் பால்நிலை வன்முறைகளின் வகைப்பாடுகள் தொடர்பாக நேக்குமிடத்து பால்நிலை வன்முறைகள். உடலியல் தீங்கு, பாலியல் தீங்கு, உளவியல் தீங்கு, அச்சுறுத்தல்கள், வற்புறுத்தல்கள் ,சுயமாக செயற்படுவதற்க்கான சுதந்திர இழப்பு போன்ற வகைகளை சார்ந்நதாகவும். அத்துடன் வன்முறை இடம் பெறும் சூழலை மையமாக கொண்டு குடும்ப வன்முறை சமுதாய வன்முறை அரசிறக்குள் நிகழும் வன்முறை எனவும் வகைப்படுத்தலாம். 

குடும்ப வன்முறை என்பது குடும்ப உறவில் ஏற்படுகின்ற ஒர் துஸ்பிரயோகமான நடத்தையின் வடிவமாகும். இதனை ஒர் விதமான வலுகட்டாயம் மற்றும் கட்டுபாடு என்பதாகவே நோக்கபடுகின்றது. அத்துடன் சமூதாய வன்முறை என்பது சமூக மரபுகள் வழக்காறுகள் என்பவற்வால் ஏற்படுவன எடுத்து காட்டிற்க்கு பண்டைய காலத்தில் காணப்பட்ட உடன் கட்டை ஏறுதல் மற்றும் வரதட்சனை முறை என்பவற்றை கூறலாம் அரசிறக்குள் இடம்பெறும் வன்முறை என்பது சிறுபாண்மையின்னர் மீதான வன்முறை, அகதிகள் மற்றும் யுத்த சூழலில் ஏற்படும் வன்முறை என்பவற்றை குறிப்பிடலாம்.

உலகில் முன்றில் ஒரு பெண் பால்நிலை வன்முறைக்கு உட்படுவாதாக கூற்ப்படுகின்றது. அத்துடன் 203 நாடுகளில் 52 நாடுகள் மட்டுமே திருமனத்தின் பின்னரான பால்நிலை வன்முறைகளை தண்டிக்கதக்கதான குற்றமாக பிரகடனபடுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது. மேலும் உலகில் 45 மில்லியன்க்கு மேலான மக்கள் கட்டாய பால்நிலை துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதாக கூறப்படுகின்றது. 

அடுத்து பால்நிலை வன்முறைகள் மீது செல்வாக்கு செலுத்தும் சமூக மத மற்றும் பண்பாட்டு காரணிகள் பொருளாதார சூழ்நிலை சார் காரணிகள் என்பனவற்றை விரிவாக நோக்கும் போது. சமூகமானது குற்றமிழைத்தவரினை விட பாதிக்கபட்டவரின் மீதே அதிகாரம் மற்றும் கட்டுபாட்டினை பேனுகின்றது. இது குற்றமிழைத்தவரை மீண்டும் அத்தகைய குற்றத்தினை இழைக்க வாய்ப்பாக அமைகின்றது. அத்துடன் பாதிக்கபட்டவர் இவை அந்தரங்கமான விடயம் மற்றும் சமூக தூற்றலுக்கு அஞ்சி இவ் வன்முறைகளை மறைக்கமுற்படுகின்றனர் இத்தகைய செயற்பாடு பாதிக்கபட்டவரை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் குற்றமிழைத்தவர் எவ்வித குற்றஉணர்வுமின்றி செயற்பட வழிவகுக்கின்றது. எனவே இத்தகைய குற்றத்தினை வெளிப்படுத்துவதன் மூலம் Nலும் இத்தகைய வன்முறை இடம்பெறுவதை தடுக்கமுடியும்.

இதேபோன்று சமூகதத்தில் காணப்படும் சில வழக்காறுகள் மற்றும் சம்பிரதாயங்களும் பால்நிலை வன்முறைக்கு காரணமாக அமையலாம். எடுத்து காட்டாக வரதட்சனை வழங்கும் வழமையினை குறிப்பிடலாம் இத்தகைய வழக்காறுகள் பால்நிலை ரீதியான வன்முறைகளுக்கு உந்துதலாக அமைகின்றன இதன் வழி பெரும்பாலும் பெண்களே பாதிக்கபடுகின்றனர். இவ் வழமை மூலம் பெண்கள் தாம் தன்கிச்சையாக செயற்ப்படும் உரிமையை இழப்பதுடன் இது ஆண்களின் மேலாதிக்க சிந்தனைக்கு வலுசேர்ப்பதாய் அமைகின்றது. இவ்வாறான மேலாதிக்க சிந்கனை பால்நிலை வன்முறைகளை ஏற்படுத்துவதில் செல்வாக்கு செலுத்துகின்றது.

இதே போன்று தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் பால்நிலை வன்முறைகள் மீது செல்வாக்கு செலுத்துவதாக அமைகின்றது. எடுத்து காட்டுக்கு அறியாமை அச்சம் போன்றவை இத்தகைய வன்முறைக்கு பலர் உற்படுவதற்க்கு காரணமாக அமைகின்றன. இதே போன்று மது மற்றும் போதைப் பொருள் பாவனை என்பனவும் பால்நிலை வன்முறைகளுக்கு காரணமாக அமைகின்றன. அத்துடன் குடும்ப ஒற்றுமையின்மை புறக்கனிப்பு நடத்தை என்பனவும் இத்தகைய வன்முறைகள் ஏற்படுவதற்க்கு காரனமாக அமைகின்றன.

இத்தகைய சமூக காரணிகளினை போன்று பொருளாதார காரணிகளும் பால்நிலை வன்முறைகளை தூண்டுபவையாக அமைகின்றது. வறுமை ,குறிப்பிட்ட தொழில் அல்லது பொருயாதாரத்தை தங்கியிருத்தல் போன்றன வன்முறைகளுக்கு காரணமாய் அமைகின்றன இவை வேலைத்தளங்களில் வன்முறைகளை தூண்டுபவையாக அமைகின்றது. அத்துடன் சம்பள சமச்சீரின்மை சொத்து உரிமைத்துவம் முகாமைத்துவ குறைபாடு போதிய கல்வி இல்லாமை என்பனவும் பால்நிலை வன்முறைகள் ஏற்பட காரணமாய அமைகின்றன.

இத்தகைய வன்முறைகளை ஒழிப்பதற்க்கு பல சட்டகோவைகள் வடிவமைக்கபட்டுள்ளன. சுpவில் நடைமுறை ஒன்றுக்கான வழியினை 2005 ஆம் ஆண்டு குடும்ப வன்முறையை தடுப்பதற்க்காக சட்டம் இலக்கம் 34 இல் காணப்படுகின்றது. அடித்தல் வல்லுறவுக்கு உட்படுத்தல் உடல் சார் தீங்கு 

போன்றவை குடும்ப பின்னிலையில் ஏற்படுமாயின் அது குற்றவியல் தண்டனையாக கருதப்படும். அத்துடன் சட்டரீதியான பாலியல் உறவுக்கு சம்மதிக்க கூடிய ஆரம்பவயது 16 ஆகும் இவ் வயதுக்கு குறைந்த நபர்ரோ குறைந்த நபருடனோ உறவில் ஈடுபட்டால் அது பால்நிலை வன்முறையாக கருதப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தபடும். இவ்வாறு பல சட்ட கோவைகள் பால்நிலை வன்முறைகளை தடுப்பதற்க்கு காணப்படுகின்றன எனினும் இவை ஒழுங்கான முறையில் பேணப்படாமையும் கடைபிடிக்கபடாமையுமே வன்முறை இடம்பெறுவதற்க்கான காரணமாகும்.

உசாத்துனை

1. சுஸ்பிகா.ஆ.(2000) சமூக கோட்பாட்டு தளத்தில் பால்நிலை. பெண் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பு.

2. செல்வி.தி.(2000). சமூக கோட்பாட்டு பால்நிலை .பெண் கல்வி ஆய்வு நிறுவனம் கொழும்பு.






No comments:

Post a Comment