Friday, August 19, 2022

இந்து மதத்தில் தாய் தெய்வ வழிபாடு

இந்து மதத்தில் அம்மன் வழிபாடு எனும் தாய்தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது. உலகை காக்கும் சத்தியை பெண்னாக உருவகித்து வழிபடும் மரபு இந்துக்களிடையே தொன்மையில் இருந்து வந்துள்ளது. கல்வி தரும் தெய்வமாகவும், செல்வம் தரும் தெய்வமாகவும், வீரம் தரும் தெய்வமாகவும் உலகை வளமாக்கி காக்கும் தெய்வமாக அம்மன் வழிபாடு உள்ளது. இன்று இந்துக்களின் அம்மன் வழிபாட்டின் முன்னோடி தாய் தெய்வ வழிபாடாகும்.


சிந்துவெளி நாகரீகம்

1921 ஆம் ஆண்டு சிந்துநதியின் வட கரையில், பஞ்சாப்பில் கரப்பா என்ற புராதான நகரம் ஒன்று கண்டறியப்பட்டது. அதே போல் சிந்துநதியின் கரையில் மொகஞ்சதாரோ என்ற இன்னுமொரு நகரமும் கண்டறியப்பட்டது. இது சிந்துவெளி நாகரீகத்தின் ஆதாரமாக அமைந்தது. இந் நாகரீகம் கண்டறியப்படும் வரை இந்தியாவின் முறையான வரலாறு வேத காலத்தில் இருந்தே தோன்றியதாக கருதப்பட்டுவந்நது எனினும் அதை மாற்றும் வகையில் சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பு அமைந்தது.

இவ் நாகரீகம் நகர அமைப்பை கொண்ட ஒன்றாக காணப்பட்டுள்ளது. மேலும் இந் நாகீகத்தில் சிவன் வழிபாடு மற்றும் தாய் தெய்வ வழிபாடு என்பன இடம்பெற்றுள்ளமைக்கான ஆதாரங்களும் உள்ளன. சிந்து வெளியில் கிடைக்கப் பெற்றுள்ள பல சின்னங்களில் தாய் தெய்வ வழிபாட்டிற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிந்து வெளியில் உள்ள சின்னங்களில் பல பெண்ணுருக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

இரு கைகளிலும் பெருமளவு வளையல்களை அணிந்தும், தலை கீழாக நிற்கும் வகையிலும் வயிற்றில் இருந்ர் செடியொன்னு முளைத்து வருவதைப் போலவும் அவ் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ் உருவம் உலகை படைந்து அதற்பு வளங்களை வழங்கிய உலக மாதாவைக் குறிப்பதாக அமைவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிந்து வெளியில் தோன்றிய இவ் தாய்தெய்வ வழிபாடே பிற்காலத்தில் இந்து சமயத்தில் அம்மன் வழிபாடாக பரினமித்ததாக கூறப்படுகின்றது.

தேவதகால நாகரீகம்

1500 கி.மு மற்றும் 600 கி.மு க்கு இடைப்பட்ட காலமாக வேதகாலம் காணப்படுகின்றது. இந்துமத வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறும் காலமாக இக் காலம் காணப்படுகின்றது. இக் காலத்தில் இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வேதங்கள் தோன்றின. இந்திரன். வருனன், அக்கினி போன்ற கடவுள்கள் வழிபடப்பட்ட இக் காலத்தில் பெண் தெய்வ வழிபாடு மிக அரிதானதாகவே காணப்பட்டது. எனினும் அதிதி என குறிப்பிடப்படும் தாய் தெய்வ வழிபாடு இங்கு இடம்பெற்றுள்ளது.  இருக்கு வேதத்தில் இந்திரன், விஷ்னு, சூரியன் போன்ற பன்னிரு ஆதித்தியர்களின் தாயாக இத் தெய்வம் கருதப்பட்டடு வழிபாடு இடம்பெற்றுள்ளது. அதிதி என்ற சொல்லின் அர்த்தம் கட்டற்றது என்பதாகும். தன்னை வழிபடுபவர்களின் கட்டுகளை அறுத்து சுதந்திரம் வழங்கும் தாயாக அதிதி வழிபாடு இடம்பெற்றுள்ளது. 

ஆகமங்கள்

இந்து மதத்தில் வேதங்களினைப் போல் ஆகமங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆகமங்களில் சாக்த ஆகமங்கள் தாய்தெய்வ வழிபாட்டை வெளிப்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தாய் தெய்வ வழிபாடை சக்தி வழிபாடாக ஆகமங்கள் வெளிப்படுத்துகின்றது. சிவபெருமான் உலகத்தை பல்வேறு ஆகமங்களினால் நிரப்பினார். பின்பு சத்தியின் வேண்டுகோளுக்கு அமைய முன்னைய ஆகமங்களின் நோக்கங்கள் பயன்யாவற்றையும் சக்தி ஆகமத்தில் வைத்தார் என ஆதி சங்கரர் குறிப்பிடுகின்றார். 


No comments:

Post a Comment