சமூக இடைவினை
SOCIAL INTERACTION
சமூகவியல் என்பது சமூகத்தை பற்றி அறிவியல் பூர்வமாக கற்கும் கற்கையாகும். இந்த கற்கையில் சமூக நடத்தை, சமூக அமைப்புகள், சமூக மதிப்புகள், சமூக இடைவினை போன்ற சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட விடயப்பரப்புகள் ஆய்விற்குட்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் சமூகவியல் விடயப்பரப்புகளில் சமூக இடைவினை என்பது முக்தியத்துவம் பெறுகின்றது. சமூக இடைவினை என்பது தனிநபர்களிடையே அல்லது குழுக்களிடையே ஏற்படும் தொடர்பாகும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே இடம்பெறும் சமூகப்பரிமாற்றமாகும். மனிதன் ஒரு சமூக விலங்கு என்பதால் அவனுடைய பெரும்பாலான செயற்பாடுகள் பிற மனிதர்களுடன் இனைந்தே காணப்படுகின்றது. இதனால் சமூக இடைவினை என்பது சமூகத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. சமூகத்தில் காணப்படும் கலாச்சாரம் மற்றும் பல சமூக நிறுவனங்கள் இந்த சமூக இடைவினையை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. சமூக நிறுவனங்களான மதம், குடும்பம் போன்றவை உறுதியான சமூக இடைவினையின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பொதுவான நலன்களை அடிப்படையில் இனையும் பல்வேறு மனித குழுக்களின் மூலம் சமூகம் உருவாக்கப்படுகின்றது. இந்த சமூகம் உருவாக்குவதற்கு பிரதான காரணமாக இடைவினையுள்ளது. நபர்களிடையேயும் குழுக்களிடையேயும் காணப்படும் இடைவினையின் அடிப்படையில்தான் சமூகம் கட்டமைகக்கப்படுகின்றது. சமூக இடைவினைகள் பிரதானமாக மூன்று வகையாக பாகுபடுத்தப்படுகின்றது. அவை
1. மனிதனிலிருந்து மனிதன்
2. மனிதனிலிருந்து குழு
3. குழுவிலிருந்து குழுவிற்கு
இதில் முதலாவது மனிதர்களிற்கிடையில் இடம்பெறும் இடைவினையாகும். இது ஆளிடை இடைவினை என கருதப்படுகின்றது. இதற்கு உதாரணமாக தாய் மற்றும் குழந்தையிடையான இடைவினையை கூறலாம். அடுத்தது ஒரு குழுவிற்கும் தனியனுக்கும் இடையிலான இடைவினையாகும். இதில் ஒரு தனிநபர் ஒரு குழுவிற்கிடையில் எதிர்வினைகள் இடம்பெறுகின்றது. இதற்கு உதாரணமாக பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களிடையில் இடம்பெறும் இடைவினையை கூறலாம். அடுத்து இரு குழுக்களிடையில் இடம்பெறும் இடைவினையாகும். இங்கு பல தனிமனிதர்கள் குழுவாக இனைந்து அது போன்று இருக்கும் மற்றுமொரு குழுவிடம் எதிர்வினையாற்றுவதாகும். இதற்கு உதாரணமாக இரு கட்சிகளிடையான இடைவினையை குறிப்பிடலாம். இவற்றுக்து மேலாக சமூக இடைவினைகள் முதல் நிலை குழு மற்றும் வழிநிலைக்குழு இடைவினை எனவும் பாகுபடுத்தப்படுகின்றது. அதேபோல் அக நிலை குழு, புற நிலை குழு எனவும் பாகுபடுத்தப்படுகின்றது.
சமூகத்தில் இடம்பெறும் இடைவினைகள் செயற்படும் விதம் பிரதானமாக ஐந்து வகைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன.
1. Exchange (பரிமாற்றம்)
2. Competition (போட்டி)
3. Conflict( முரண்பாடு)
4. Cooperation (ஒத்துழைப்பு)
5. Accommodation
இந்த ஐந்து வகைகளில் exchange , cooperation மற்றும் accommodation என்பன சமூகத்தை நிலையாகவும் உறுதியாகவும் வைத்திருக்க உதவுகின்றது. அதேவேளை competition மற்றும் conflict என்பன சமூகத்தில் மாற்றத்தை ஊக்குவிப்பவையாக அமைகின்றன.
அடுத்து மேற்கூறிய சமூக இடைவினைகள் பற்றி விரிவாக நோக்குவோம். பரிமாற்றம் என்பது ஒரு வெகுமதியினை எதிர்பார்த்து இடம்பெறும் இடைவினையாகும். ஒருவர் தன்னுடைய செயலுக்குக்கான வெகுமதியை பெறும் பொருட்டு இந்த இடைவினை இடம்பெறுகின்றது. இங்கு இடைவினை என்பது புலப்படகூடிய பொருளாகவோ அல்லது புலப்படாத ஒன்றாகவோ அமையலாம். அடுத்து போட்டி என்பது ஒருவர் மட்டும் அடையக்கூடிய ஒரு இலக்கை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் அடைய முற்படும் போது ஏற்படும் இடைவினையாகும். இந்த போட்டி ஒத்துழைப்பின்மை மற்றும் முரண்பாட்டை ஏற்படுத்த கூடியதாக காணப்படும். அடுத்து முரண்பாடு அல்லது மோதல் என்பது ஒருநபரை கட்டுப்படுத்த முற்படும் போது ஏற்படும் இடைவினையாகும். இதற்கு உதாரணமாக யுத்தம் மற்றும் கலவரங்களை கூறலாம். இந்த இடைவினை ஒருவரை எதிர்க்கும் ஒருவருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்தத்தை கொண்டதாக அமையும். அடுத்ததாக ஒத்துழைப்பு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அல்லது குழுக்கள் ஒன்றாக இனைந்து ஒரு இலக்கை அடைய முயற்சிக்கும் போது ஏற்படும் இடைவினையாகும். இறுதியாக Accommodation என்பது ஒத்துழைப்பு மற்றும் முரண்பாட்டிற்கு இடையில் இருக்கும் நிலையாகும். மோதலை தடுந்து ஒத்துழைப்பை ஏற்படுத்தும் இடைவினையாக இது உள்ளது. இவ் இடைவினை பல விதங்களில் செயற்படுகின்றது. அவை
1.Compromise (சமரசம்)
மோதலில் உள்ள இரண்டு தரப்புகளும் ஒரு பொதுவான உடன்படிக்கைக்து ஒப்புக்கொள்ளுதல்.
2. Mediation (மத்தியஸ்தம்)
மோதலில் மூன்றாம் தரப்பு தலையிட்டு ஒரு பொதுவான உடன்படிக்கைக்கு வருதல்
3. Truce (தற்காலிக மோதல் நிறுத்தம்)
மோதலை தற்காலிகமா தடுத்து நிறுத்துதல்
4. Arbitration (நடுவர்)
மூன்றாம் தரப்பு நடுவராக இருந்து எடுக்கும் முடிவிற்கு மோதலில் ஈடுபடும் இரு தரப்பும் ஒத்துக்கொள்ளுதல்.
சமூக இடைவினை முக்கியமான ஆறு கூறுகளை கொண்டவையாகும். அவை
1. Actor
2. Partner
3. Relation
4.Activiest
5. Context
6. Evaluation
சமூக இடைவினையை பாதிக்கும் காரணிகள்
1. அரசியல், அதிகராம்
2. சமூக அடுக்கமைவு, வர்கம், சாதி, மதம்
3. சமூக கட்டுப்பாடுகள்
4. சமூக விழுமியங்கள்
5. சமூக அந்தஸ்து

