Wednesday, April 10, 2019

செயற்பாட்டியம் (functionalism)


மானிடவியல்

மலினாவ்வஸ்கியின் செயற்பாட்டியம்

பண்பாடை பற்றி புரிந்து கொள்வதற்க்கான அனுகுமுறைகளில் ஒன்றாக செயற்பாட்டியம் அல்லது செயற்பாட்டுவாதம் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பண்பாடு கண்னுக்கு புலப்படாதமையால் அது ஒர் மாயை என்று கருதப்பட்டது. எனினும் செயற்பாட்டுவாதம் பண்பாடு என்பது பல கூறுகளை கொண்ட முழுமை என்று கருதி அதன் செயற்பாடுகளை ஆராய்கின்றது. இவ் செயற்பாட்டியத்தை மானிடவியலில் முன்வைத்த அறிஞர்களில் மலினோவஸ்க்கி முதன்மை பெறுகின்றார்.

trobriand என்ற தீவினரின் பண்பாட்டை விளக்க வேண்டும் என்ற முயற்ச்சியின் விளைவே செயற்பாட்டியம் ஆகும். இவரது புகழ்மிக்க நூல்லான பசுபிக் கிரேக்கர்கள் என்பதில் இவ் தீவின் மக்களின் குலாவளைய பரிமாற்றம் எனும் விசித்திர பழக்கத்தை பற்றி கூறியதுடன் அது அம்மக்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கின்றது மேலும் இப் பண்பாடு மற்றைய பண்பாடு கூறுகளுடன் எவ்வாறு இனைந்து செயற்படுகின்றது என்பதை இவர் விளக்கினார்.

பல சிறு தீவூகளில் வாழும் இம் மக்கள் பல தேவைகள் கருதி தமக்கு எதிர் திசையில் வாழ்பவர்களிடம் பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர். இவ் பரிமாற்றமானது திருமனம் குடும்பம் போன்ற பல்வேறு பண்பாட்டு கூறுகளுடன் இனைந்திருப்பதாக இவர் குறித்துகாட்டுகின்றார். இவ்வாறு trobriand மக்களின் பண்பாடு தொடர்பான தனது ஆய்வின் வழி செயற்பாட்டுவாதத்தை முன்வைத்தார் மலினோவஸ்க்கி.

தனது செயற்பாட்டியத்தில் பண்பாடுஎன்பது மக்களின் உயிரியல் மற்றும் உளவியல் ரீதியான தேவைகளை நிறைவேற்ற பல பண்பாட்டு நிறுவனங்களை கொண்ட முழுமையான அமைப்பாகும் என்றுவிளக்குகின்றார். இவ் நிறுவனங்கள் மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் இனக்கம் பெற்று செயற்படுகின்றன எனபது இவர் கருத்தாகும்.

இதே போல் பண்பாட்டின் செயலாற்றல் தொடர்பாகவூம் மலினோவஸ்க்கி கூறுகின்றார்.பண்பாட்டின் செயற்பாட்டை ஒர் இயந்திரத்துடன் ஒப்பிடுகின்றார் இவர் இயந்திரம் சிறப்பாக செயற்பட பல்வேறுபட்ட அம்சங்கள் அல்லது கூறுகள் தேர்ந்தேடுக்கபட்டு இனைக்கபட்டுள்ளன அவ்வாறே பண்பாடும் சிறப்பாக செயற்பட் மக்கள் பல்வேறுபட்ட கூறுகளை அதனுடன் இனைத்துள்ளனர் இனைத்துள்ளனர் இவ் கூறுகளை கொண்டு மக்களின் தேவை எத்தகையது என்று அறியலாம் மேலும் அத் தேவையை நிறைவேற்றி கொள்வதற்க்கு இவ் கூறுகள் ஒருங்கினைவூடன் செயற்படுகின்றன.

பண்பாட்டின் கூறுகள் குறைந்தது ஒரு தேவையேனும் நிறைவேற்ற கூடிய வகையில் காணப்படும் என்றும் தேவைகள் முதன்மை தேவை இரண்டாம் நிலை தேவை என காணப்படும் என்கின்றார் மலினோவஸக்கி. உடை முதன்மை தேவைஎனின் எதை உடுத்துவது என்பது இரண்டாம் நிலை தேவை எனப்படும். முதன்மை தேவை அனைவருக்கும் பொதுவானது என்றும் இரண்டாம்நிலை தேவை மாறுபடக்கூடியது என்றும் கூறுகின்றார்.

ஒர் முழுமையான பண்பாடு மக்களின் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்கின்றது என்பதை பின்வருமாறுவிளக்குகின்றார்.

சமூதாய நோக்கம் சமூதாயதேவையை நிறைவேற்றுவதாகவூம் இதற்க்காக நெறிமுறைகள் மற்றும் கருவிகள் பயன்படுத்தபட்டு பின் பணிகள் இடம்பெற்று இறுதியில் செயலில் முடிகின்றது என்றார்.
உதாரணமாக இனப்பெருக்கம் மற்றும் திருமணம் என்பனவற்றை கூறலாம்.

மேலும் பண்பாட்டின் முழுமை தன்மையில் ஒழுங்கு நிலை பாரிய பங்கினை கொண்டது என்கின்றார். இவை உயிரியல் ஒழுங்குநிலை அமைப்பு  ஒழுங்கு குறியீட்டு ஒழுங்கு என்பவற்றை கொண்டது. என்பதுடன் பண்பாட்டு நிறுவனங்களின் தன்மைமற்றும் அமைப்பு என்பதனை ஆறு விடயங்களினூடக வெளிப்படுத்துகின்றார். அவையாக திட்டம் ஆட்க்கள் நெறிமுறை கருவி பணி செயல் என்பனஅமைகின்றது.

உசாத்துனை
பக்தவத்சல பாரதி .2005.மானிடவியல்  கோட்பாடுகள் .புதுவை. வல்லினம் பதிப்பகம் 





Tuesday, April 9, 2019

சமூகவியல்

சமூகம் சார்ந்த விடயங்கள் அல்லது தோற்றபாடுகள் தொடர்பான கற்றுக்கொள்ளலுக்கு சமூகவியல் கோட்பாடுகள் பெரும்பங்காற்றுகின்றன ஆராய்க.

சமூகம் சார்ந்த விடயங்கள் அல்லது தோற்றபாடுகள் என்பன கால ஒட்டத்திற்க்கும் புறச் சூழலுக்கும் ஏற்ப மாறிகொண்டு செல்பவையாகவே அமைந்துள்ளன. இதற்கேற்ப சமூகத்தோற்றபாடுகள் பற்றிய சமூகவியல் கோட்பாடுகளும் மாற்றமுற்று செல்பவையாக அமைந்துள்ளன. அந்த வகையில் கோட்பாடு என்பது சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான விடயங்களையூம் விபரிப்புகளையூம் மேற்கொள்ளும் தர்க ரீதியாக ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கூற்றுக்களின் தொகுதி எனலாம். சமூகவியல் மேற்க்கு ஐரோப்பிய நாடுகளில் தோற்றம் பெற்றதாயினும் அவ் நாடுகளின் சமூக சூழ்நிலைக்கு ஏற்ப அவை பல வேறுபாடுகளை கொண்டுள்ளன இதன் அடிப்படையில் கோட்பாடுகள் பல்தன்மை பொருந்தியவையாக உள்ளன. அவை சமூகவியலாளருக்கு சமூகவியலாளர் மற்றும் நாடுகளுக்கு நாடு வேறுபாடுகள் உடையவையாக அமைகின்றன.

ஒரு பாடநெறி சார்ந்த கோட்பாடுகள் அப்பாட நெறியின் தோற்றம்  வரலாறு என்பவற்றுடன் தொடர்புடையவையாகும். அந்தவகையில் சமூகவியலும் மானிடவியலும் இனைந்த பாடநெறிகளாக வளர்ச்சியடைந்து வந்தமையால் சமூகவியல் கோட்பாடுகளையூம் மானிடவியல் கோட்பாடுகளையூம் பிரித்து நோக்குவது கடினமானதாகும். அந்த வகையில் செயற்பாட்டுவாதம், கட்டமைப்புவாதம் ,விமர்சனவியற்கோட்பாடுகள் போன்றவை இவை இரண்டுக்கும் போதுவானவை. இதே போன்று தனியே சமூகவியல் கோட்பாடுகளாக தொல்சீர் சமூகவியல் கோட்பாடுகள் இ வியாக்கியானிப்புவாதம் இ விமர்சனவியல் வாதம் இ நவீனத்துவம் இ பின் நவீனத்துவம் என்பன அமைகின்றன.

அடுத்து சமூக தோற்றபாடுகள் தொடர்பான கற்றலுக்கு சமூகவியல் கோட்பாடுகளின் பயன்பாட்டு தன்னையை நோக்குவோம்மாயின்.
சமூகவியல் சார்ந்த கோட்பாடுகளில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடாக தொல்சீர் சமூகவியல் கோட்பாடு அமைகின்றது. பிரஞ்சு புரட்சி மற்றும் தொழில் புரட்சியின் விளைவாக அதிகம் பாதிக்கபட்ட சமூகத்தையூம் மக்களையூம் அறிந்து கொள்ள முயன்றதின் விளைவாகவே தொல்சீர் சமூகவியல் கோட்பாடுகளின் தோற்றம் உண்டானது. இக் கோட்பாட்டில் முதன்மையான அறிஞர்ராக ஒகஸ்ற் கொம்ற் காணப்படுகின்றார். இவர் சமூகவியலில் தொடர்பாக

நேர்காட்ச்சிவாதம் 
• மனித முன்னெற்றத்திறக்கான விதி  
• சமூக நிலையமைப்பு 
• சமூக இயங்கியல் 
• ஆய்வூ முறைகள்
• அறிவியலின் தரவரிசை
போன்ற பல கோட்பாடுகளை முன்வைத்தார்

நேர்காட்ச்சிவாதம்; எனப்படுவது புலநறிவாதம் , நிச்சயவாதம் , புறமெய்மைவாதம் என சமூகவியல் புலங்களில் அறியப்படுகின்றது. சமூகம் தொடர்பான ஒர் இயற்கை வழியினை கண்டுகொள்ளும் பொருட்டே இவ்வாதம் முன்வைக்கபட்டது. இவ் வாதம் நேராக கண்ட உண்மைகளை மட்டுமே கருத்தில் கொள்வதாக அமைகின்றது. இது சமூகத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றிய எதிர்வூ கூறலாகவூம் அமைகின்றது.

அடுத்து மனித முன்னேற்றத்திறக்கான விதி தொடர்பாக நோக்கும் போது கொம்ற் மனித குலத்திலும் சமூகத்திலும் ஏற்பட்டு வந்த தொடர்மாற்றங்கள் தொடர்பாக அவதானித்ததின் விளைவாக இவ் கோட்பாட்டை முன்வைத்தார். இவர் மனித இன முன்னேற்றம் மற்றும் சமூக வளர்ச்சி ஆகிய இரண்டையூம் வரலாற்று ரீதியான பரிமான அடிப்படையில் ஆராய்ந்து இக் கோட்பாட்டை முன்வைத்தார். ஓர் தனியனின் மன வளர்ச்சிக்கு சமாந்தரமாகவே சமூகத்தின் பரிமான வளர்ச்சியூம் அமைந்தது என இக் கோட்பாட்டின் மூலம் தெரிவிக்கின்றார்.


மனித மன வளர்ச்சியானது பின்வரும் மூன்று படி நிலை கொண்டதாய்யூள்ளது.
1. இறையியல் நிலை 
2. நுண் பொருள் கோட்பாடடியல் நிலை 
3. புறமெய்மை நிலை
இவ் படி நிலைகளில் சமூகமும் வளர்ச்சியூற்றுள்ளது.

இறையியல் நிலை என்பது கி;.பி 1800 காலப்பகுதியாக கருதப்படுகின்றது. சமூக ஒழுங்குகளையூம் இ சமூககட்தமைப்புகளையூம் இயற்க்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வூகளுடன் தொடர்புபடுத்த முயன்ற காலமே இதுவாகும். இக் காலத்தில் சமூகம் தமக்கு அப்பாற்பட்ட இறை மற்றும் கடவூள் போன்ற கருதுகோள்களினால் ஆளப்படுவதாய் அமைந்தது. இறை சத்திகள்தான் உலக உயிர்களை இயக்குவன இ செயல்களை தீர்மானிக்கின்றன அனைத்திற்க்கும் இயல்நிலை கடந்த சத்திகளே காரணம் என நம்பிக்கை கொண்ட சமூகமே இக் கால சமூகமாகும்.

இரண்டாவது நிலையான நுண்பொருள் நிலையானது தத்துவ ஞானம் வளர்ச்சி கண்டதன் விளைவாக தோற்றம் பெற்ற நிலையாகும் இயல் நிலைக்கு மேலான சத்திகள் இக் காலத்தில் மெய்யியல் சிந்தனைகளாக மாற்றபட்டன. உலக இயக்கத்திற்க்கு இயல் நிலை கடந்த சத்திகள்தான் காரணம் என்பதை இக் காலத்துச் சமூகம் ஏற்க்க மறுத்தது. தாம் கண்டுகொண்டவற்றின் பின்னாதாரமான பரமாத்தீக உண்மைகளை பற்றி அறிய முற்பட்ட காலமே இதுவாகும்.

அடுத்து புறமெய்மை அல்லது நேர்காட்ச்சி நிலை என்பது கற்பனை நீங்கிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சி பருவமாகும். கி.பி 1800 க்கு பிற்பட்ட காலமே இதுவாகும். சமூகம் மேற்கூறிய இரு நிலைகளிலும் இருந்து விடுபட்டு அறிவூ”ர்வமாக சிந்திக்க தொடங்கிய காலம் நேர்காட்ச்சி நிலை எனலாம். அறிவூக்கு எட்டியதையே அளக்கின்ற இந்த பருவமே மனித மனச்செயற்பாட்டின் உச்ச நிலை என்பது கொம்ற்றின் கருத்து.

இவ் கோட்பாட்டின் மூலம் இந்த படிநிலைகளுடன் தொடர்புடைய வகையில் காணப்பட்ட சமூக நிலையமைப்புகள் இ சமூக ஒழுங்கின் தன்மை இ மற்றும் சமூகத்தின் பொருளாதார நிலை என்பவற்றிலும் கொமற் கவணம்செலுத்தினார்.

  • இறையியல் நிலை இரானுவமயமானது குடும்பம் விடு சாரந்நது பினைப்பு அடிப்படையானது
  • நுன்பொருள் கோடபாடு சட்ட ரீதியானது அரசு கூட்டுவாழ்வூ பயபத்தியைகொண்டது
  • புறமெய்மை தொழில் சார்ந்து இனம் உலகளாவியது சாத்வீகம் உணர்வை கொண்டது
இவ்வாறு சமூகத் தோற்றபாடுகள் பற்றி மனித முன்னெற்றத்திறக்கான விதி எனும் கோட்பாட்டில் கொம்ற் கூறியூள்ளார். மேலும் சமூகம் இன்னும் இறையியல் நிலையிலும் இ நுன் பொருள் கோட்பாட்டு நிலையிலும்மே அதிகளவூ இருப்பதாக கொமற் கருதினார். ஆத்துடன் இவ் சமூகவியல் கோட்பாடு சமூகத்தோற்றபாடுகளின் பரிமானவளர்ச்சி பற்றி அறிவதற்க்கு பயன்படுவதாய்யூள்ளது.

அடுத்து நாம் தொல்சீர் சமூகவியல் கோட்பாட்டில் கொமற்றியால் முன்வைக்கப்பட்ட மற்றுமொர் கோட்பாடான சமூக நிலையமைப்பு சமூக தோற்றபாடுகள்ளை பற்றி கற்றுகொள்வதில் எத்தகைய பங்காற்றுகின்றது. என்பது தொடர்பாக நோக்குவோம்மாயின். சமூக நிலையமைப்ப என்பது சமூகம் இருக்கும் நிலையை குறிக்கின்றது. இதில் சமூகத்pன் ஒழுங்கு அமைந்திருக்கும் முறையையூம் இயற்கை விதிகளின் அடிப்படையில் ஒழுங்கு எவ்வாறு அமைகின்றது என்பது பற்றியூம் கொம்ற் கூறுகின்றார். கொமற் தமது நிலையியல் தொடர்பான ஆய்வில் சமூக உயிரியின் பகுதியளிடையேயான ஒருமைப்பாட்டிற்கான அடிப்படைகளையூம் விளக்கினார்.

சமூகவியலை உயிரியலுடன் இனைத்த கொமற் நோக்கிய போது சமூக உயிர்களின் தனித்துவத்தை அறிந்து கொண்டார். சமூக ஒருங்கினைவினை ஆத்மார்த்தமான பினைப்புகளின் வழியேதான் ஏற்படுத்த முடியூம்மென்று கொம்ற் நம்பினார் இதனால் சமயம் இ மொழி போன்ற சமூக கூறுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார். மேலும் உயிருக்கு செயல்பட அதன் கூறுகள் எவ்வாறு அவசியமோ அவ்வாறே சமூக ஒழுங்கு அமைய அதன் கூறுகளிடையே பினைப்பு இருத்ததல் வேண’டு என்றார் கொம்ற். சமூகத்தில் அங்கத்தவர்கள் ஒற்றுமையாக பினைப்புடன் வாழும் போதுதான் சமூக ஒழுங்கு ஏற்படுகின்றது என்று வலியூறுத்துகின்றார் கொமற்.

சமூக நிலையமைப்பு போன்று சமூகம் தொடர்டபாக கொம்ற்றினால் முன்வைக்கபட்ட மற்றுமொர் சமூகவியல் கோட்பாடாடக சமூக இயக்கபாடு காணப்படுகின்றது. நிலையியல் தொடர்பான தனது ஆய்வூ தேடலை தவிர்க்க முடியாதவாறு சமூக இயக்கவியலுடன் இனைந்த ஒன்றாகவே கொம்ற் கருதினார். சமூகத்தில் காண்ப்படும் நிலையமைப்பு அதன் நிலையில் முன்னெறிச் செல்லும் நிலையே சமூக இயக்கபாடு என குறிப்பிடபடுகின்றது. சமூக இயக்கவியலை ஒர் ஒழுங்கின் விருத்தியென கூறுகின்றார் கொம்ற். சமூக ஒழுங்கினை தொடர்ந்து எப்பொழுதும் முன்னெற்றம் அமையூம் என்பது கொம்ற்றின் நம்பிக்கை இத்தகைய முன்னெற்றமே சமூக இயக்கபாடாகும். சமூக முன்னெற்றத்திறக்கு அறிவூம் சிந்தனையூம் காரணம் என்று குறிப்பிட்டு சமூக நிலையமைப்பு மற்றும் சமுக இயக்கபாடு ஆகியவற்றை சமூகத்தின் அம்சங்களாக கொண்டு தன் கோட்பாட்டை விளக்கியூள்ளார் கொமற்.

அடுத்து தொல்சீர் சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறுபவர்ராக எமில் துர்கைம் உள்ளார்  இவர் சமூகவியல் கோட்பாட்டில்
• சமூக உண்மைகள் 
• சமூகத்தில் தொழிற்பிரிப்பு
• சமூக வகைப்பாடு 
• சமயத்தின் சமூகவியல் 
• தற்கொலை 
போன்ற பல்வேறுபட்ட எண்னகருக்களை முன்வைத்துள்ளார். இவர் முன்வைத் எண்ணகருக்களில் முக்கியமானது சமூக உண்மையாகும். சமூக உண்மை என்ற பதம் சமூகத்துடன் தொடர்பான நிகழ்வை அல்லது விடயத்தைக் குறிக்கின்றது. சமூதாயத்தில் இடம்பெறும் சில நிகழ்ச்சிகளில் சமூகத்தின் பங்கு காணப்படும். எடுத்துகாட்டாக அரசியல் , மதம், இலக்கியம் போன்றவற்றின் செயற்பாடுகளுக்கு சமூகம் மூலகாரணியாக திகழும் இவ் சமூக நிகழ்வூகளும் விடயங்களுமே சமூக உண்மைகளாகும்.
இதே போன்று தொழிற்பிரிப்பு எனும் தன் எண்ணகருவில் சமூதாய ஒற்றுமையை பற்றி இவர் ஆராய்கறின்றார். வேலைகள் பகுக்கபட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பதே தொழிற்பிரிப்பாகும். இவ்வாறான பகுப்பு தேவைகள் மற்றும் திறமைகள் என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளபடுகின்றன.
டுர்கைம் தனது கோட்பாட்டில் இரண்டுவகையான சமூகங்களை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கண்டுள்ளார். இயந்திரவியல் கட்டொருமைப்பாடு , உயிரினவியல் கட்டொருமைப்பாடு இவ் சமூகங்களை இவர் தொழிற்பிரிப்பின் இரண்டு விதிகளான அடக்கு முறை சட்டம் மற்றும் மீட்டளிப்புச்சட்டம் என்பவற்றுடன் தொடர்புபடுத்துகின்றார்.
மேலும் இவர் தற்கொலை எனும் தனது ஆய்விலும் சமயத்தின் சமூகவியல் எனும் ஆய்விலும் பல்வேறு சமூகதோற்றபாடுகள் பற்றி எடுத்து கூறுகின்றார். அத்துடன் தற்கொலை என்பதை ஒர் சமூகத்தின் விளைவூ என இவர் கருதுகின்றார். அத்துடன் சமயம் என்பது சமூகத்தின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய தனியன்களை தூண்டுவன என்றார்.

இவரின் கோட்பாடுகள் சமூகத்தோற்றபாடுகளின் மாற்றங்கள் சமூகத்திற்க்கும் தனியனுக்கும் இடையே உள்ள உறவின் தன்மை என்பன தொடர்பான கற்றுகொள்ளலுக்கு பயன்னுடையதாக உள்ளது.

அடுத்து சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடாக கார்ல் மார்க்ஸ் இன் கோட்பாடுகள் அமைந்துள்ளன. இவர் அன்னியமாதல் கோட்பாடு இ வகுப்பு கோட்பாடு போன்ற பல கோடபாடுகள் மூலம் சமூக தோற்றபாடுகள் பற்றி கூறுகின்றார். தமது வகுப்பு கோட்பாட்டில் மார்க்ஸ் பல சமூகங்களையூம் அவற்றில் காணப்படும் சமூக வகுப்புக்களை இனம் காட்டினார். ”ர்வீக பொதுவூடமை சமூகத்தில் சமூக வகுப்புக்கள் எதுவூம் காணப்படவில்லை என்றும் பிற்பட்ட காலங்களில் தோன்றிய பொருளாதார முரண்பாடுகளினால் பிற்பட்ட சமூகங்களான அடிமைச்சமூகம் இ நிலவூடமைச்சமூகம் இ முதளாளி சமூகம் போன்றவற்றில் முதலாளி மற்றும் தொழிலாளி போன்ற சமூக வகுப்புக்கள் தோற்றம் பேற்றதாக கூறுகின்றார். இவ் சமூகவியல் கோட்பாட்டின் மூலம் சமூகத்தோற்றபாடுகளான சமூகவகுப்புக்களை பற்றி கற்றுக்கொள்ள கூடியதாகவூள்ளது. மேலும் மார்க்ஸ் சமூகத்தோற்றபாடுகளை பொருளாதாரத்தின் அடிப்படையில் ஆராய்ந்தார். இதன் விளைவாக சமூகத்தோற்றபாடுகளை பொருளாதாரத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ள கூடியதாகவூள்ளது.
அடுத்து சமூகவியல் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறும் கோட்பாடான செயற்பாட்டுவாதம் சமூகத்தோற்றபாடுகளை பற்றி கற்றுக்கொள்வதில் எவ்வாறு பங்காற்றுகின்றது என்பது தொடர்பாக நோக்குவோம்மாயின். சமூகவியல் கோட்பாட்டு வளர்ச்சியல் செயற்பாட்டுவாதம் முக்கிய இடத்தினை பெறுகின்றது. சமூகம் என்பது பல கூறுகளினால் ஆக்கபட்டதொன்றாகும் இச் சமூகம் முழுமையாக இயங்கும் பொருட்டு அவ் கூறுகள் ஒன்றினைந்து செயற்படுகின்றன என்பதை விளக்குவதே செயல்பாட்டியல்வாதமாகும்.

இவ் செயல்பாட்டு வாதத்தினை வளர்த்து எடுத்தவர்களில் முக்கியமானவர் வூயடஉழவ pயசளழn என்பவர்ராவார். செயற்பாட்டிற்க்கு இன்றியமையாத தேவைகளை சிலவற்றினை சமூகம் அடைந்தால்தான் சமூகம் தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பது இவரின் கருத்து. இவர் சமூதாயம் மற்றும் அதன் இயக்கத்தை அறிய முறையான செயற்பாட்டு அணுகுமுறையைக் கையாண்டார். சமூக அமைப்பானது பண்பாடு இ ஆளுமை இ போன்ற பல்வேறுபட்ட கூறுகளை கொண்டதாய் அமைந்துள்ளது. அத்துடன் சமூக அமைப்புகளும் அதன் கூறுகளும் ஒன்றிலொன்று தங்கி உள்ளதாக இவர் கருதுகின்றார்.

செயற்பாட்டுவாதம் போன்று சமூகவியல் கோட்பாட்டுகளில் முக்கியத்தவம் பெறும் கோட்பாடாக கட்டமைப்புவாதமும் காணப்படுகின்றது. சமூகவியலில் குறிப்பாக மானிடவியல்லில் டநஎi ளவசயரளள இந் சிந்தனையை முன்வைத்தார். கண்களுக்கு புலப்படக்கூடிய விடயங்களுக்கு அப்பால் ஆழத்தில் உள்ள சமூக கட்டமைப்பினை பிரதானப்படுத்திய ஒரு சிந்தனையாக இதனை முன்வைத்தார். இக் கட்டமைப்புக்கள் வெளிதோற்றங்களை உருவாக்குகின்றன என்பது இவரது வாதம். மேலும் இக் கோட்பாடானது சமூக கட்டமைப்புகளில் ஏற்படும் முரண்பாடுகளின் விளைவாகத்தான் சமூக மாற்றம் ஏற்படுகின்றது என்கின்றது. மேலும் சுயனநஉடகைக டீசழறn என்பவரின் கருத்துப்படி சமூக கட்டமைப்பு என்பது தனி நபர்களிடையான ஸ்திரமான வலைப்பின்னல் போன்ற உறவூமுறைகள் என குறிப்பிடுகின்றார். இதன் மூலம் இக் கோட்பாடு சமூக கட்டமைப்பு பற்றியூம் சமூக மாற்றம் பற்றியூம் கற்றுக்கொள்ள உதவூவதின் படி சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றுக்கொள்ளலுக்கு பயன்படுகின்றது.

இத்தகைய கட்டமைப்பு வாதம் போன்றே விமர்சனவியல்வாதமும் சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு உதவூகின்றது. குறிப்பிட்ட விடயம் தொடர்பாக அறிவை பெறுவதற்க்கு தடையாக இருக்கும் அதிகார மையங்களை கேள்வி கேட்hதின்னூடாகவூம் கலந்துரையாடியூம் அதன் மூலம் ஒர் மாற்றத்தினை ஏற்படுத்துவதும் விமர்சனவியல்வாதமாகும். இக் கோட்பாடு 1923 இல் அறிமுகப்படுத்தபட்டது. இக் கோடபாடானது சமூதாயம்(சோசலிச மற்றும் முதலாளித்துவ சமூதாயம்) இ அறிவூ இ பொதுக்களம் போன்ற பல்வேறு விடயங்களை விமர்சனபால்வையூடன் நோக்குவதின் விளைவாக சமூகத்தோற்றபாடுக் பற்றிய கற்றலுக்கு உதவூகின்றது.

இதேபோன்று சமூகவியல் கோட்பாடுகளில் ஒ;ன்றான நவீனத்துவமும் சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான கற்கைக்கு பயன்னுள்ளதாக அமைகின்றது. 18ம் 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவவியலாளர்களான வெபர் இ மார்க்ஸ் இ காணட் போன்றவர்களினால் நவீனத்துவம் பற்றியூம் இ சமூக பரிணாம வளர்ச்சி பற்றியூம் பல கருத்துக்களை முன்வைத்ததின் மூலம் இக் கோட்பாடு தோற்றம் பெற்றது. இக் கோட்பாடானது அரசியல் பொருளாதார வேறுபாடுகள் இ நவீன பொருளாதார தொழில்நுட்ப வளர்ச்சி இ சமூக மாற்றங்கள் என்பன இக் கோட்பாடு தோன்ற வழிவகுத்தது.

நவீனத்துவமானது சமூகத்தில் காணப்படும் கலாச்சார மாற்றங்களையூம் அதன் வேறுபாடுகளையூம் காண்பிக்கின்றது. நவீன நகரங்கள் மற்றும் கைத்தொழில்கள் என்பவற்றினை ஆராய்வதன் மூலம் நவீனத்துவம் மானுடவியலில் முக்கிய இடத்தை பிடிக்கின்றது. மேலும் “டார்வினிஸம்” போன்றவற்றின் மூலம் சமூகவியலிலும் முக்கிய இடத்தை நவீனத்துவம் பெறுகின்றது. இதன் வழியில் சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு நவீனத்துவம் எனும் கோட்பாடு பயன்படுவதாய்யூள்ளது.
நவீனத்துவம் போன்றே பின் நவீனத்துவமும் சமூகத்தோற்றபாடுகள் தொடர்பான கற்றலுக்கு உதவூகின்றது. இது அண்மை காலத்து விஞ்ஞான தொழில்நுட்ப அரசியல் மாற்றங்களை முன்னைய நிலையில் இருந்து வேறுபடுத்த கூடிய கோட்பாடாகும். இக் கோட்பாடானது மனித நடத்தையோடு கூடிய பலவற்றை பல கோணங்களில் ஆய்வூக்கு உட்படுத்துகின்றது.

அத்துடன் பின் நவீன்த்துவவாதிகளினால் முன்வைக்கபட்ட முக்கிய சிந்தனையாக சமூக இயக்காற்றல் காணப்படுகின்றது. சமூக நிகழ்ச்சிகளையூம் அவை ஒன்றன் பின் ஒன்றாக அடுத்து வரும் பாங்கினையூம் அவற்றிற்க்கான காரணங்களையூம் அவற்றின் விளைவூகளையூம் இக் கோட்பாடு கவணத்தில் கொள்கின்றது. இதன் அடிப்படையில் இக் கோட்பாடு சமூகத்தோற்றபாடுகள் பற்றிய கற்றலுக்கு பயன்படுகின்றது.

தொகுத்து நோக்கும்மிடத்து சமூகவியல் கற்கை துறையில் சமூகம் தொடர்பான கற்றுக்கொள்ளல் அவசியமான ஒன்றாக அமைகின்றது. அந்த வகையில் சமூகவியல் மாணவர்களுக்கு சமூகம் தொடர்பான கற்றலுக்கு சமூகவியல் அறிஞர்களினால் முன்வைக்கபட்ட சமூகவியல் கோட்பாடுகள் பெரிதும் பயனுடையவையாக அமைகின்றன். இக் கோட்பாடுகள் சமூகத்தின் பரிமாணவளர்ச்சி இ சமூக நிலையமைப்பு இ சமூக நிகழ்வூ இ சமூக நிறுவணம் இ சமூக இயக்கம் இ சமூகத்தின் வகைப்பாடுகள் இ நவீன சமூகத்தின் சமூகமாற்றம் போன்ற பல்வேறுபட்ட சமூகம் சார்ந்த விடயங்களை பற்றி பல கோணங்களில் ஆய்வூகளை மேற்கொண்டுள்ளமையினால் சமூகம் பற்றிய தோற்றபாடுகள் பற்றி கற்றகொள்வதில் இக் கோட்பாடுகள் அதிக பயன்னுடையவையாக அமைகின்றன.

BY; J K SATHEESH

உசாத்துனை நூல்கள்
• கலாநிதி . சண்முகலிங்கன் .எண். 2002. தொல்சீர் சமூகவியல் சிந்தனையாளர். சமூகவியல் சமூகம் யாழ்ப்பாணப் பல்கலைகழகம்
• கலாநிதி . சண்முகலிங்கன் .எண். 2008. சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்இ நாகலிங்கம் நூலாலயம் யாழ்ப்பாணம்
• சந்திரசேகரன்.சோ. 1996. அபிவிருத்தியூம் கல்வியூம் . தர்ஷனா பிரசுரம்இ பக்கம் 5-7

Monday, April 8, 2019



கல்வி உளவியல்

கற்பித்தலுக்காண உளவியல் பற்றிய  சிந்தனை  வகுப்பறை ஆராய்ச்சிக்கு அவசியம். ஆதாரம் முன்வைத்து விளக்குக.

ஒரு ஆசிரியரே அனைவருக்கும் பிரதானமானவர் வினைத்திறன் கொண்டவர் ஆக உள்ளார். ஒரு குழந்தையை தனி மனிதனாக உருவாக்குவதில் ஆசிரியருக்கே முக்கிய பங்கு காணப்படுகின்றது. ஒருவர் சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டுமானால்அவர் சிறந்த உளவியலாளராக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆசிரியர் தொடர்பான முறையில் ஒழுங்குபடுத்தி கற்பித்தால் பிள்ளைகள் விடயத் தொடர்பை விளக்கி அப் பாடத்தைப் பற்றிய ஒரு முழுமையான புலக்காட்சியைப் பெறுவார். ஆசிரியர் பாடங்களில் உள்ள உண்மைகள் சம்பவங்கள் கோட்பாடுகள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்தும் ஒத்த ஓசையூள்ள சொற்கள் ஒத்த அமைப்புள்ள விடயங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியூம் கற்பிக்கலாம்.

அந்தவகையில் உடல் உள்ளம் மனவெழுச்சி அறநெறி ஆகியவற்றில்  மாணவர்கள் முழுமையான முதிர்ச்சியடைய வழிவகுப்பதே கல்வியின் குறிக்கோளாகும்.அந்த குறிக்கோளையடைவதற்கு ஆசிரியரானவர் வகுப்பறையில் வெவ்வேறுபட்ட நடத்தைகளையூம் இயல்புகளையூம் மற்றும் தமக்கென குறிப்பிட்ட தனித்துவமான அடையாளங்களைக்கொண்ட மாணவர்களின் மனப்பாங்குகளையூம் எண்ணங்களையூம் துல்லியமாக அறியூம் சிறந்த உளவியலாளராக இருக்க வேண்டும். 


ஆசிரியர் மாணவரின் உடல் உள மனவெழுச்சி சமூகத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி நிலைகளையூம் மாணவரின் உளவியல் தேவைகள் மனப்பான்மை ஆளுமைப் பண்புகள் தனியாள் செயற்பாடுகள் என்பவற்றை புரிந்து அதற்கேற்றால்போல் அவர்களின் பாகம் புலக்காட்சி சிந்தiனை கற்பனை ஆகியவற்றின் உளச்செயற்பாடு பற்றியூம் அவர்களின் அறிவூ அடைவூ மட்டம் திறமை ஆகியவற்றை அளவிடும் உளவியல் நுட்ப முறைகளைக் கையாண்டு அதற்கேற்றாற்போல செயற்படுபவரே சிறந்த ஆசான் எனும் தகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.அவரே மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்து வழிகாட்டும் நல்லாசிரியராக விளங்குவார்.

 மேலும் மாணவர்களை நன்கு அவதானித்து அவர்களின் தேவைகள் என்ன? அவர்கள் எவ்வாறான விடயங்களினுhடாக கற்றல் செயற்பாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்பதை ஆய்ந்து அதற்கேற்றாற்போல் ஆசிரியர்கள் செயற்படுவது கற்பித்தல் செயற்பாட்டினதும் கற்றல் செயற்பாட்டினதும் சிறந்த ஆரம்பமாக அமையூம. அதுமட்டுமல்லாமல் ஒரு வகுப்பறையில் மீத்திறன் மிக்க மாணவர்களும் குறைதிறன்களைக் கொண்ட மாணவர்களும் காணப்படுகின்றனர்.அதன் காரணமாக அவரவர் திறன்களை கவனத்திற் கொண்டும் அவர்களின் மனநிலையை அவதானித்து வகுப்பறையில் கற்பித்தலை மேற்கொள்ளும் போது தான் அங்கு சிறந்த கற்றலும் கற்பித்தலும் நடைபெறும்.

மாணவர்கள் எவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையறிந்து உதாரணமாக வெறுமனே பாடப்பரப்புக்களை வாசித்து வினாக்களை வினவி விடைகளைக் காண செய்வது சிறந்த கற்பித்தலாகாது.அதற்கென பல்லுhடக எறிகை மூலம் (ஒலி ஒளி வீடியோக்களை)காண்பித்தல்.இதனுhடாக அவர்களின் கேட்டற் பார்த்தல் கிரகித்தற்  திறன்களை  அவர்களின் உள விருப்புக்களுக்கேற்ப வழிநடத்தி சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள முடியூம்.  
அத்தோடு ஒரு ஆசிரியரானவர் மாணவர்களிடத்து தமது திறமைகளையூம் ஆற்றல்களையூம் வெளிப்படுத்த நினைக்காது மாணவர்களின் திறமைகளையூம் ஆற்றல்களையூம் வெளிப்படுத்தும் வகையில் அவர்களது உளம் அறிந்து தமது கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்களது கற்பித்தலின் நோக்கம் மாணவர்களின்  அடைவூமட்டமும் அவர்களது எதிர்கால வாழ்க்கையூம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதேயாகும் எனவே மாணவர்களை அடிப்படையாகக் கொண்டே கற்பித்தல் இடம்பெற வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவிடயம் தொடர்பாக மாணவர்களுக்குக் கற்பிக்கையில் முன்கூட்டிய ஆயத்தத்தோடு ஆசிரியர்கள் காணப்பட வேண்டும்.உதாரணமாக பாலர் பாடசாலைகளிலோ முன்பள்ளிகளிலோ மாணவர்கள் விளையாட்டுக்களுடன் கூடிய கற்பித்தலையே விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஆசிரியர்கள் செயற்படவேண்டும்.மேலும் மாணவர்களின் வயது அவர்களது கொள்திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கற்பிக்கும் போதுதான் அவர்களால் சிறந்த கற்றற்செயற்பாடுகளையூம் மாணவர்களின் சிறந்த தேர்ச்சியையூம் அடைய வழிவகுக்க முடியூம் என்பது திண்ணமாகும்.எனவே மாணவர்களின் உள நடத்தைகளுக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்பவராக அதாவது ஓர் ஆசிரியரானவர் சிறந்த உளவியலாளராகக் காணப்பட வேண்டும்.

மேலும் ஆசிரியரானவர் மாணவர்களோடு இன்முகங்கொண்டு பேசுதல் அவர்களின் அகத்தைப் புரிந்து சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் அவர்களைப் பாராட்டுதல் மேலும்; மாணவர்கள் வீட்டுச்சூழலையடு;த்து பாடசாலைச்சூழலிலே தமது நேரத்தைச் செலவிடுகின்றனர் எனவே அவர்களின் குடும்ப சூழ்நிலைகளையறிந்து செயற்படுவது ஓர் சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.

பிள்ளையின் உள வளர்ச்சி பற்றியூம் கற்பித்தல் முறை பற்றியூம் அறிய விரும்பும் எவரும் பியாஜேயின் கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது.அந்தவகையில் அன்பு ஆதரவூ கணிப்பு ஆகியனவூம் உள வளர்ச்சிக்கு உதவூவன எனவூம் ஓர் ஆசிரியரானவர் அறிந்திருக்க வேண்டும்.பியாஜேயின் முடிவூகளின்படி வகுப்பறையின்(பாலர் பாடசாலை)உபகரணங்களிலும் பிள்ளைகள் ஈடுபட வசதிகளும் பாடுதல் கதை சொல்லுதல் ஆகியன மூலம் சொற் களசிய வளர்ச்சிக்கு வேண்டிய வசதிகளும்  பாடசாலைகளிலும் இருக்க வேண்டும்.உபகரணங்கள் பெரியனவாக இருப்பது அவசியம் அப்போது தான் இடைவெளித்தொடர்புகளை ஏற்படுத்த முடியூம்.

சிறுவர் பாடசாலைகளில் அகச்சிந்தனை துhலச் சி;ந்தனை ஆகிய வளர்ச்சிப்படிகளிலுள்ள காணப்படுவர்.எனவே வாசித்தல் எழுதுதல் கணித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடும் போது ஒழுங்குபடுத்தப் பட்ட விளையாட்டுக்களும் செயலனுபவங்களும் இருப்பது அவசியமாகும்.பின்தங்கிய சூழலின்றும் வரும் பிள்ளைகளுக்கு ஒழுங்கான விளையாட்டுக்களும் மணல் நீர் மரக்குற்றிகள் தொடர்பான செயல்களுக்கு வசதிகளும் திருத்தமான மொழி வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளும்  செய்ய வேண்டும்.

by.kirushanth

உசாத்துனைகள்


  • கலாநிதி முத்துலிங்கம்.ச. “கல்வியூம் உளவியலும்” 5ம் பத்pப்பு
  • மாணியம் சிவகுமார் “அடிப்படை உளவியல்” (பக்கம் 39-52)




Wednesday, April 3, 2019


DID YOU HEARD ABOUT AUTISM

What is autism

Autism is a mental condition, present from early childhood, characterized by great difficulty in communicating and forming relationships with other people and in using language and abstract concept. This autism affects among many children. Autism estimated affect 1 of 59 children. This autism child is very lazy to communicate others and they won’t make relationship with others. Mainly a combination of environment and genetic factors influenced in developing autism. Autism sign appear often in age 2 or 3 but many parents and family members are not identifying this as autism. Every autism child has different sign but common signs of autism are below
Common sign of autism children
• Loss of previously acquired speech or social skills
• Avoidance of eye contact
• Difficulty understanding other people’s feelings
• Delayed language development
• Resistance to minor changes in routine or surroundings
• Repetitive behaviors (flapping, rocking, spinning)
• Restricted interests
• Making unusual activities and sounds
• Intense reactions to sounds, smells, tastes, lights or colors

Autism affect four times more than boys to girls. Now autism is said that increasing but there is no any medical factor to diagnose autism. There are many reasons in causing autism elder aged father mother increased the chance of autism child, when a pregnant lady is exposed certain drugs and chemicals, her child mostly be an autistic child. But exactly why autism happens is not clear research suggest that it may arise from abnormalities in parts of brain that interpret sensory input and process language.

Important of changing autism stage

Autism is an un ordinary stage of brain activities. If we did not know the important of changing this stage the effect of autism will continue life long and it will spoil children’s life and their families to. Identifying the autism in pre-age of children will help to reduce the effect of autism. If you want to change the autism you want to start it before children enter pre - school, it will reduce the difficulty in changing autism stage. Children affected by autism have difficult in making relationship with others. First, we want to change this condition and improve their relationship. We want to make more opportunity to them to make relationship with others.
In changing autism, we want to understand normal growth of children. Language is a basic level in a growth of a children. If a child is willing to do a work it will try to connect and share the work to others to finish it. Mostly this process took place between mother to child or between shame aged group. For this process children will use language or any other expression to connect others but an autism child not like a normal child. An autism child is insufficient to connect others that child can’t use language or any expression to connect others. The autism children are mostly like to be alone they create their own word and be alone. Being alone will increase the effect of autism this will spoil the children life and the children’s families too. So, it’s very important to change the autism stage.

If we did not understand the important of changing autism will spoil the whole life of children. It is very difficult to change this autism stage but it’s very important to change it by changing this condition we can improve their skills and we can bring them in to social relationship in basic relationship must start in families and then it wants to expand to society this social relationship will improve the skills of autism children.

How to improve autism children’s skills?

It’s very hard to improve the autistic children’s skills because they are more different than normal children, they will not support for us to explore their talent. These children mostly like to be alone so they reject our help and they will not join with us but researchers mention some common steps to improve autism children’s skills. Below are some steps of them.

Common steps of improving autism children

 • We want to spend some time with these children specially parents or family members must spend most of the time with these children. Mostly we want to spend twenty or thirty minutes in a day with autism children
• We want to join these children in our day to day activities
• Don’t leave these children to be alone join them and share our work with them or we want to follow the work that children do
• Mostly autism children like to be alone if you try to be closer to them, they will cry or they will get angry but you want to try to be closer to them these children will use to join you after some time
• While speaking with autism children we want to use some easy instruction that can understand by them
• We want to make direct eye contact with these children

If we follow the above instruction, it will easy to improve the skills of these children but above steps will not bring easily among these autism children it’s very hard to handle these children. For this purpose, researchers have found some training activities to improve the skills of these children. The autism children can be brought back as normal by following this training activities. Some of that training activities are given below.


 Some training activities for autism children

• Keep a small moving object or sounding object on your eye level and make it move or sound do this activity until that child see your eye. This will improve the child eye contact
• Before giving anything to your child bring it to your eye level and ask the child to take it
• Make some dried foam bubbles in front of the child until that child look at your face and then stop it if he fails to see your face
• Cover your face with a cloth and by suddenly removing the closed cloth make the child to surprise by doing this the child will automatically connect to your eye contact.
• Keep some glossy stuff on your fore head and make to see it by the children
• Keep some playing goods in a place where children can’t easily take and make the children to ask help from you to get that goods
• Train your child to finger something and show the child how to finger something
• Show two types of foods in front of the child and then leave him to choose on of them for an example keep a cake piece and a ice cream in front of the child and leave him to take one but stop the child when he try to take those two things
• While you are playing with an autism child you want to bring your eye down to the child eye contact level and make the child to play with you.
• Talk anything with autism children it will help them to leave from loneliness.
• Make the child to wait until his turn in playing and don’t leave them to be alone in their world always join the child in any activities.
• Give some food that mostly liked by children for an example biscuit, snacks. Give this food while the child looking at your when we do this again and again that child will automatically be trained to look at your face.


• Tap the table with a spoon and then give a spoon to children’s hand then make the child to tap the table like you
• If autism children make any noise then you should follow the noise and make the noise again and again then the child will follow your noise and then child will reply to it.
• Touch the body parts like nose, head and name it like “I am touching your nose”, I am touching your head” by doing this the child will identify his body parts and this will help to improve condition the children who don’t like to touch them.

These are some activities of training process like this there more and more activities for autism children. The above activities are very helpful to change the bad condition of the autism children. By doing this activity we can improve the ability of watching, hearing, speaking skills of the autism children.




சமூக உளவியல்

சமூக உயவியலும் அதன் முக்கியத்துவமும் தற்கால சமூக பிரச்சினைகளை மையப்படுத்திய ஒர் வெளிப்படுத்தல்




உளவியல் என்பதிற்க்குறிக்கும் psychology என்ற ஆங்கிலப்பதமானது psyche , logos ஆகிய இரு சொற்களின் இனைவினால் ஏற்பட்டதாகும். psyche என்ற சொல்லானது கிரேக்க சொல்லில்லிருந்து பிறந்நதாகும். இச் சொல்லானது உயிர் மூச்சு (breath of life) என்ற பொருள் கொண்டதாய் அமைகின்றது. அதாவது இது ஆண்மா , ஆவி , உள்ளம் என அர்த்தப்படுகின்றது. இவ்வாறே logos எனும் பதமானது இயல் அல்லது கற்கை என்று பொருள்படுகின்றது. இதன் வடிவில்தான் உளவியல் என்பது “ஆன்மா பற்றிய கற்கை அல்லது உள்ளம் பற்றிய கற்கை” என வரைவிலக்கனப்படுத்தபடுகின்றது.

இவ் உளவியலானது ஒர் விதத்தில் உயிரியல் விஞ்ஞானத்துடனும் இன்னுமொர் விதத்தில் சமூகவியல் , மானிடவியல் , கல்வியியல் ,கலை , இலக்கியம் , மொழியியல் என்பனவற்றுடனும் இனைந்து பல்வேறுபட்ட வகைப்பாடுகளை கொண்டதாய் அமைகின்றது. அதன் ஆரம்ப கால வகைப்பாடுகளாக

• கட்டமைப்பு சார் உளவியல்

• செயற்பாடுசார் உளவியல்

• நடத்தைவாக உளவியல்

• கேஸ்டால் உளவியல்


என்பன காணப்படுகின்றன. இதே போன்று உளவியலின் நவீன வகைப்பாடுகளாக

• மருத்துவ உளவியல்

• கல்வி உளவியல்

• குழந்தை உளவியல்

• ஆளுமை உளவியல்

• சமூக உளவியல்

என்பன காணப்படுகின்றன. இத்தகைய வகைப்பாடுகளில் சமூக உளவியல் அதிக முக்கியத்துவம் பெறும் ஒன்றாக காணப்படுகின்றது.

சமூக உளவியல் என்பது சமூகச் சூழலில் மக்கள் எவ்வாறு சித்திக்கின்றார்கள், உணர்கின்றார்கள்இ நடந்து கொள்கின்றார்கள் என்பவற்றை குறித்த விஞ்ஞான பூர்வமான கற்கை என வரைவிலக்கனப்படுத்தலாம். நமது வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சுக துக்கங்கள் அநேக சந்தர்ப்பங்களில் பிறரே நிர்னயித்து கொள்கின்றனர். பிறர்ரை பற்றியோ அல்லது நம்மை பற்றியோ நாம் சிந்திப்பது தான் நமது நடத்தையை பாதிக்க கூடியது. இதனைப் போன்று சமூக சூழலும் எமது நடத்தையை தீர்மானிக்கினறது. சமூக நடத்தையானது நமது உணர்தலாலும் சமூக கோட்பாடுகளினாலும் உந்தப்படுகின்றது. எனவே சமூக உளவியல் என்பது சமூக நடத்தை மற்றும் எண்னங்களை அறிவியல் சார்ந்து விளங்கி கொள்ளுதல்லாகும்

2

சமூக உளவியல் என்பது எப்போது தோற்றம் பெற்றது என்பது தொடர்பாக நோக்கும் போது மனிதன் தன் குறியீடுகள்இ அடையாளங்கள்இ சைகைகள்இ ஆகியவற்றின் வழியே மனிதன் தன் மனவெளிப்பாடுகளை மற்றவர்களுக்கு உணர்த்திய போதே சமூக உளவியல் என்பது ஆரம்பித்துவிட்டது. சமூகம் ஒன்று தோன்றிய போது ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு வாழ தொடங்கிய போதே சமூக உளவியல் தோன்றிவிட்டது. எனினும் வரலாற்று ரீதியாக சமூக உளவியலானது ஆரம்பகால கிரேக்க தத்துவ ஞானிகள், பிரெஞ்சு தேச சமூக மெய்யியலாளர்கள் மானிடவியலாளர்கள் என்பவர்கள் கால காலமாய் சமூக உளவியலுக்கு வளம் சேர்த்து இத் துறையை வளர்ச்சிபாதைக்கு இட்டு சென்றுள்ளனர்.
என்பதை காணலாம். 

சமூக உளவியல்லானது காலத்தால் பிந்திய ஒர் கற்கை நெறியாகும். எனினும் இச் சிந்தனைக்கான ஆரம்ப கால சிந்தனைகள் கிரேக்க காலம் தொட்டே காணப்படுகின்றன. கிரேக்க நாட்டு அறிஞர்ரான பிளேட்டோ தனது நூல்லான குடியரசு என்ற நூலில் உயிர்களின் சமூக இயல்பாரந்த தன்மை தொடர்பாக குறித்துள்ளார். தனி மனிதர்களிடம் சுய இயலுமாற்றல் போதியளவூ இல்லாததனால் அவர்களிடம் சமூக இடைவினை வளர்ச்சியடைந்தது என்று இவர் கருதுகின்றார். இவ் கருத்தினை அரிஸ்டோட்டில் மறுதலித்து மனிதன் ஒர் அரசியல் விலங்கு என்று கருதினார்.

இதே போன்று Jeramy bentham பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு இன்ப துன்ப மனப்பாங்குகளை மையமாகக் கொண்டு “இன்ப வாதம்” என்கின்ற கொள்கையை முன்வைத்தார். இக் கொள்கையே சமூக உளவியல் தோன்றுவதற்க்கு பொருத்தமான ஆரம்பமாக அமைந்தது. இதன் பின் நோர்மன் றிப்பெட் 1897 இல் முதன் முதலில் சமூக உளவியலுக்கோர் ஆய்வூ கூடத்தை உருவாக்கிளார். இவரை தொடர்ந்து 1908 இல் வில்லியம் மக்டுகல் சமூகவியலுக்கோர் அறிமுகம் எனும்மோர் நூல்லை வெளியிட்டார் இதுவே சமூக உளவியல் தொடர்பான முதன் நூல்லாகும். இதே போன்று 1924 allport எனும் அறிஞர் சமூக உளவியல் எனும் நூல்லின் மூலம் தத்துவ ரீதியான பங்களிப்பை மேற்கொண்டார். 

இவ்வாறுபல அறிஞர்களின் பங்களிப்பின்னூடாக சமூக உளவியல்லானது வளர்ச்சியூற்றுவந்துள்ளது. இத்தகைய தோற்ற வரலாற்றினை கொண்ட சமூக உளவியலானது இன்று சமூகத்தில் பரிசோதனை முறையிலும் யதார்த்த ரீதியிலான ஆய்வாகவூம் அமைந்துள்ளது. சமூகத்தில் பண்பாட்டு சூழல்இ ஆளுமைஇ கருத்துருவாக்கம்இ சாதியம்இ புரட்சிஇ வர்க்கம் போன்ற பல்வேறுபட்ட விரிவாள தளத்தில் இருந்து சமூக உளவியல்லானது தனது ஆய்வூகளை மேற்கொள்கின்றது.

இத்தகைய சமூக உளவியல்லானது பல்வேறுபட்ட முக்கியத்துவத்தினை கொண்டதாய் அமைந்துள்ளது. அத்தகைய முக்கியத்துவங்களாக
சமூக உளவியல்லானது சமூகத்தில் மனிதனின் தனித்துவத்தையூம் சமூகத்தில் அவனது அந்தஸ்தையூம் பேனிகொள்ளவதாய் அமைகின்றது என்ற ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது அதாவது மனித வாழ்வின் முக்கியத்துவம் சமூகத்தன்மையாகும். மக்கள் கூடி வாழ்கின்றனர் அவர்கள் தமக்கிடையே சந்தோஷங்களையூம்இ துக்கங்களையூம்இ அனுபவங்களையூம் பகிர்ந்து கொள்கின்றனர். தமது எண்ணங்கள்இ கலாச்சாரங்கள்இ நம்பிக்கைகள் என்பவற்றை தம்மிடையே பரிமாற்றி கொள்கின்றனர். இருந்த போதிலும் சமூக உளவியலானது ஒவ்வொரு மனிதனையூம் தனித்துவமானவனாக நோக்குகின்றது. அது மனிதனின் பல்வேறுபட்ட நடத்தையை அறிய முற்படுகின்றது.

இதேபோன்று மனிதனின் சமூக இடைவினைகளை விளக்குகின்றது என்ற ரீதியில் சமூக உளவியல்லானது முக்கியத்துவப்படுகின்றது. இடைவினையானது இரு நபர்களின்னிடையில் நடக்கும் செயல்லை பாரத்து அறியக்கூடிய நடத்தையாகும். இங்கு இடைவினைகள் ஏற்படும் முறைகள், இடைவினையால் ஏற்ப்படும் தாக்கம்இ என்பனவற்றை சமூக உளவியல் அறிய முற்படுகின்றது என்ற ரீதியில் இப் பாடமானது முக்கியத்துவம் கொண்டதாய் அமைகின்றது. மேலும் சமூக உளவியல்லானது சமூக நடத்தை மற்றும் சிந்தனைக்கான காரணிகளையூம் புரிந்கொள்கின்றது. சமூக உளவியலானர் சமூக நடத்தை மற்றும் சிந்தனையூம் அமைக்கின்ற நிபந்தனைகளையூம் காரணிகளையூம் விளக்க முயல்கின்றனர். சமூக நடத்தையோடு தொடர்புள்ள வகையில் மக்களின் செயல்கள்இ உணர்வூகள், நம்பிக்கைகள், ஞாபகம், அனுமானம் போன்றவை தோற்றம் பெறும் பொருட்டு தாக்கம் செலுத்தும் சூழல்சார்மாறிகள், கலாசார காரணிகள்இ உயிரியற் காரணிகள் போன்றவற்றை சமூக உளவியல்லானது அறிந்து
கொள்கின்றது என்ற ரீதியில் சமூக உளவியல் முக்கியத்துவப்படுகின்றது.
அத்துடன் சமூக உளவியல்லானது சமூக எண்ணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது எவ்வாறு மாறுகின்றது மற்றும் அதனை எவ்வாறு அளக்கலாம் என்பதை அறிவதை நோக்கமாய் கொண்டுள்ளது. அத்துடன் மனித நடத்தையின் காரணகாரியங்களை அறிந்து எதிர்வூ கூறல்களையூம் முன்வைக்க கூடியது என்ற வகையில் சமூக உளவியல்லானது முக்கியத்துவப்படுகின்றது.

பொதுவாக சமூக உளவியலானது தனிமனித நடத்தை மற்றும் சமூககுழுக்களின் நடத்தைகள் எத்தகையதாக அமைகின்றது. அவை ஏற்படுவதற்க்கான காரண காரியங்கள் என்ன என்பதையூம்  அவ் நடத்தையினால் ஏற்ப்படும் தாக்கங்கள் எத்தகையது என்பதையூம் அறிந்து கொள்வதில் முக்கியத்துவமுடையதாக உள்ளது.

சமூக உளவியல்லானது பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடைய பிரச்சினைபற்றியூம் அவர்களுடைய சிக்கல்களை பற்றியூமே பெரும்பாலும் ஆராய்வதாய் அமைந்தது. அறிஞர்கள் பெரும்பாலும் மனிதர்களின் ஒழுக்கங்கள் பற்றியூம் நடத்தைகளை பற்றியூம் சமூதாயத்தின்  நல்லவை எவை கெட்டவை எவை என்பதை பற்றியூமே ஆராய்ந்தனர் இத்தகைய முக்கியத்துவத்தை கொண்ட சமூக உளவியல்லானது தற்காலத்தில் பல்வேறுபட்ட சமூகப்பிரச்சினைகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது. சமூக உளவியலானது நுன் கடன்  பிரச்சினைஇ போதைப் பொருள் பாவனைஇ சிறுவர் துஸ்பிரயோகம்இ பாடசாலை இடைவிலகல்இ இளவயது திருமணம்இ சிறுவர் தொழிலாளர்கள் உருவாகுதல் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை மையமாக கொண்டதாய் அமைந்துள்ளது.

இலங்கையில் தற்காலங்களில் முக்கியத்துவம் பெற்றுவரும் பாரிய சமூக பிரச்சினையாக நுன் கடன் பிரச்சினை அமைகின்றது. இதன் வினைவாக பல மக்கள் தமது சொத்துக்களை இழந்தும் உடமைகளை இழந்தும் காணப்படுகின்றனர். இதன் விளைவாக தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் மன விரக்த்தி மற்றும் மன உளைச்சல் போன்ற உளவியல் தாக்கங்களுக்கு உட்படுகின்றனர். இதனால் தற்கொலை போன்றவையூம் ஏற்ப்படுகின்றன. இத்தகைய சமூகப்பிரச்சினைகளை சமூக உளவியல்லானது தமது ஆய்வூப்பரப்பிற்க்குள் உட்படுத்தி அவற்றிற்க்கான காரண காரியங்களை அறிந்து இத்தகைய உளவியல் தாக்கங்களில் இருந்து
மக்களை விடுவிக்க கூடியது

இதேபோன்று சிறுவர் தொழிலாளர்கள்ளின் தோற்றம்இ பாடசாலை இடைவிலகல்இ இள வயது திருமணம் போன்ற பிரச்சினைகளை சமூக உளவியலானது கருத்தில் கொண்டு. ஒவ்வொரு தனிநபர்களையூம் அவர்கள் மீது இச் சமூகத்தின் செல்வாக்கு எவ்வாறு அமைந்துள்ளது. சமூகம் அவ் தனிநபர்களின் நடத்தையை எவ்வாறு தீர்மானிக்கின்றது என்பதை அறிந்து இப் பிரச்சினைகளுக்கான தீர்வூகளை முன்வைக்க கூடிய ஒரு கல்வியாகும். அடுத்து போதைப் பொருள் பாவனை தொடர்பாக நோக்கும் போது சமூக உளவியல்லானது தனிநபர் மற்றும் சமூக நடத்தையினை கருத்தில் கொள்வதால் இப் பாடமானது இப் பிரச்சினையில் இருந்து தனிநபரையூம் அவன் சார்ந்த சமூகத்தையூம் காப்பாற்ற கூடியதாய்யூள்ளது.

சமூக உளவியல் கற்கையானது சமூகத்தில் ஒவ்வொரு தனிநபரையூம் அவ் நபரின் தனித்துவத்தையூம் சமூக அந்தஸ்தையூம் பேனக்கூடியதாய்யூள்ளதால் சமூகத்தினால் தனிநபர் புறக்கனிக்கபடுத்தல்இ ஒத்திவைக்கபடுதல் என்பவற்றை இவ் கற்கை தனது அனுகுமுறைகளினால் தடுக்கின்றது. இதன் வாயிலாக கொலைஇ கொள்ளை போன்ற சமூக விரோத செயற்ப்பாடுகளில் ஈடுபடுவோர் உருவாகுவதில்லை. மேலும் சமூக உளவியலானது சமூக நடத்தை மற்றும் சிந்தனைகளுக்கான காரணங்களை அறிந்து கொள்ள முற்படுவதால் இக் கற்கையால் சமூகத்தில் நல்லவை எவை கெட்டவை எவை என பகுத்தறிய கூடியதாயூள்ளது. எனவே சமூகத்தினை பிரச்சினைகளில் இருந்து விடுவித்து ஒர் நல்வழிக்கு உட்படுத்த கூடியதாயய் அமைகின்றது. 

தொகுத்து நோக்கும் போது சமூக உளவியல்லானது ஒவ்வொரு தனிநபர்களையூம், தனி நபர்களிக்கிடையிலான இடைவினையின் தன்மைஇ இடைவினையின் தாக்கம்இ சமூகம் தனிநபரின் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றதுஇ சமூகத்தின் நடத்தைஇ தனிநபர் மற்றும் சமூக சிந்தனைகள் , நடத்தையின் காரண காரியங்கள் என்பனவற்றில் தன் ஆய்வினை வியாபித்து கொண்டு மேற்கூறியது போன்ற சமூகப்பிரச்சினைகளை தடுப்பதுடன் அப் பிரச்சினைகள் ஏற்படுத்தும் தாக்கங்களுக்கு தீர்வினையூம் வழங்குவதாய் அமைகின்றது. மேலும் தன் அனுகுமுறைகளின் ஊடாக இப் பிரச்சினைகள் சமூகத்தையூம் தனிநபரையூம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிந்து மேலும் அத்தகைய பிரச்சினைகள் மீண்டும் தோன்றாம்ல் தடுக்கின்றது.

உசாத்துனை

• பரணீதரன் .க. 2015. “உளவியல் பிரிவூகள் ஒரு பார்வை” . ஜீவநதி கலை அகம்

• கவிந்திரன். க. 2013. “உளவியல்”. குமரன் புத்தக இல்லம் கொழும்பு

• பேராசிரியர் முனைவர். ஜெயராசாஇ சபாஇ 2008. “உளவியல் முகங்கள்”. சேமமடு பதிப்பகம்

• அகோல்கர் .எ. “சமூக உளவியல்” . சென்னை தமிழ் வெளீயிட்டு கழகம்

Monday, April 1, 2019

தக்கணத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி சம கால அரசுகளுக்கு சவாலாக இருந்தான்.

தக்கணத்து சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி சம கால அரசுகளுக்கு சவாலாக இருந்தான்.






இந்திய வரலாற்றினை நோக்கும் போது வடஇந்தியாவில் சாளுக்கிய பேரரசு ஆட்சிகாலமானது
மிகவும் சிறப்பான ஓர் ஆட்சிகாலமாக காணப்பட்டது. அந்தவகையில் சாளுக்கிய மன்னர்கள்
இந்தியாவின் தெற்கு பகுதி தொடக்கம் மத்திய இந்தியாவின் பெரும்பகுதி வரை செல்வாக்கு
பெற்று விளங்கினர். கி.பி 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கு
இடைப்பட்ட காலப்பகுதியில் சாளுக்கியர்கள் இந்தியாவில் சகலவிதத்திலும் அதாவது அரசியல்
சமூகம் சமயம் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களாக
காணப்படுகின்றனர்.
சாளுக்கியர்களின் ஆட்சிக்கு முன்னர் தக்கண பிரதேசத்தை சாதவாகன பேரரசு ஆட்சிசெய்தது.
இப்பேரரசின் வீழ்ச்சியின் பின்னர் சாளுக்கியர்கள் தமது ஆட்சியினை நிறுவிக்கொண்டனர். மேலும்
இந்திய வரலாற்றில் பல்லவர்கள் தவிர தக்கணத்தில் ஆட்சி புரிந்த மேலைச்சாளுக்கியரும்
இராஷ்டிரகூடர்களும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக காணப்பட்டனர்.
இவ்விருவர்களுக்கும் தெற்கே பல்லவர்களும் சோழர்களும் போட்டியாளர்களாக இருந்தனர்.
சாளுக்கியர்களின் புகழ் பல்வேறு இடங்களிலும் பரவியிருந்தமையை வரலாற்று ஆதாரங்களை
அடிப்படையாகக் கொண்டு நோக்கமுடிகின்றது.
சாளுக்கிய அரச வம்சத்தை ஆரம்பித்து வைத்தவன் 1ஆம் புலிகேசி என்பவனாவான். புலிகேசி
என்ற வார்த்தையின் அர்த்தம் 'சிங்கேறு போன்றோன்' என்பதாகும். கி.பி 543 – 544 வரையில்
பாதிபக்கு அண்மையில் உள்ள மலையை 1ம் புலிகேசி அரணாக ஆக்கி கொண்டான் பின்னர்
இவன் அசுவமேத யாகம் ஒன்று செய்து தனது சுதந்திரத்தை பிரகடணப்படுத்தி கொண்டான்.
மலப்பிரபா ஆற்றில் இருந்து மூன்று மைல் தொலைவில் தற்காப்புக்கு ஏற்ற சிறப்பியல்புகளுடன்
கூடியதாய் இவ் அரண் விளங்கியது. மலைகள் மத்தியில் கிழக்கில் அமைந்துள்ள மகாகூடம்
ஆற்றங்கரை ஓரமாக கிழக்குதிசையில் மகாகூடத்தினின்று 5மைல் தொலைவில் உள்ள பத்தடக்கல்
ஆற்றின் பள்ளத்தாக்கில் பத்தடக்காரில் இருந்து 8 மைல் தொலைவில் விளங்கும் ஐகோல் ஆகிய
இடங்கள் சாளுக்கிய மேலாதிக்கம் நெடுநாள் நிலை பெற்றமைக்கு சான்று பகர்கின்றன. அங்குள்ள
கோவில்களும் கல்வெட்டுக்களும் கூட மேலாதிக்கம் புரிந்த சாளுக்கியரின் காலம் பற்றி
கூறுகின்றன.
இவ்வாறு பல்வேறு சிறப்புக்களை கொண்டு விளங்கும் சாளுக்கிய அரச வம்சத்தின் முக்கிய
ஆட்சியாளராக 2ம் புலிகேசி விளங்குகின்றார். ஐஹோலே கல்வெட்டு அவரது ஆட்சிக் காலத்தைப்
பற்றிய விபரங்களை கூறுகின்ற வரலாற்று சான்றாதாரமாக காணப்படுகின்றது. 2ம் புலிகேசி
மன்னனின் காலப்பகுதியானது கி.பி 609- கி.பி 642 வரையானதாக் அறியப்படுகின்றது. மேலும்
சாளுக்கிய வம்சத்தவர்களின் ஆட்சியானது பலம் பொருந்திய ஆட்சியாக காணப்படுகின்றது. மேலும்
இவனது ஆட்சி காலத்தில் சாளுக்கிய பேரரசு தக்கணத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கியதாக
விளங்கியது. அந்த வகையில் இவனது இயற்பெயர் ஏரேயா (இறையா) என்பதாகும். முடி சூட்டிக்
கொண்ட போதும் 2ம் புலிகேசி என்ற பெயர் பெற்றான். இவன் சாளுக்கிய மன்னனான 1ம்
கீர்த்திவரம்மனின் மகன் ஆவான் கி.பி 597 ஆம் ஆண்டில் இவனது தந்தை இறந்த போது இவன்
மிகவும் இளம் வயதினனாக இருந்தான்.
இதனால் இவனது சிற்றப்பன் மங்களேசன் பகர ஆளுனராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வந்தான்
மங்களேசனும் திறமையான ஆட்சியாளனாகவே இருந்தான். அவனது காலத்திலும் சாளுக்கிய
அரசனின் எல்லைகள் விரிவடைந்தன பதவி ஆசைகள் காரணமாக ஏரேயா பருவமடைந்த பின்னரும்
அவனுக்கு அரசுரிமையைக் கொடுக்காமல் தனது வழியில் அரசுரிமையை தக்கவைப்பதற்காக
தனது மகனை முடிக்குரியவனாக மங்களேசன் அறிவித்தான். ஏரேயா வாதாபியை விட்டு சென்று
வானவப் (கோலார்) பகுதியில் மறைந்து இருந்து கொண்டு தனது நண்பர்களின் உதவியுடன்
படைதிரட்டி மங்களேசன் மீது போர் தொடுத்தான். வேட்டவடக்கூர் கல்வெட்டு கூறுவதன் படி
எலப்பட்டு சிம்பிகே (இலப்பட்டுசிம்பிகை) என்னும் இடத்தில் இடம்பெற்ற போரில் மங்களேசன்
தோல்வியடைந்து கொல்லபட்டான். ஏரேயா 2ம் புலிகேசி என்னும் பெயருடன் சாளுக்கிய மன்னன்
அரியணையில் அமர்ந்தான்.
அந்த வகையில் கி.பி 610 இல் புலிகேசி சாளுக்கிய நாட்டிற்கு அதிபதியானான். மார்ஸ்டன்
துரையும் வின்ஸென்ட் ஸ்மித் என்பவரும் கி.பி 608 இல் புலிகேசி அரியனையில் ஏறினான் என்பர.;
மேலும் புலிகேசி அரசை அடைந்ததும் தான் செய்ய வேண்டியது பல என அறிந்து கொண்டான்.
தன் தம்பிமார்களை தனக்கு துணையாக வைத்துக் கொண்டான். மேலும் புலிகேசி
அரசுபுரியலாகினான். சாளுக்கிய தேசத்து குடிகள் புலிகேசி அரசன் ஆட்சிக்கு வந்ததையிட்டு
களிகூர்ந்தனர். புலிகேசியின் அரச சபையில் எந்தவொரு துன்பமும் எற்படவில்லை புலிகேசி தன்
நாட்டிற்கு பல நன்மைகளை புரிந்தான் மேலும் புலிகேசி மன்னன் பல வரிகளை குறைத்து ஒரு
பங்கு நிலவரியாக மட்டும் பெற்று வந்தார் நாட்டில் ஆங்காங்கு நீதிமன்றங்களை நிறுவினான். மேலும்
இயன்றளவு குடிமக்களுக்கு நன்மைகளை புரிந்தான்.
அந்த வகையில் புலிகேசி மன்னனின் போர் வீரம் பற்றி ஆராய்ந்தால் புலிகேசி மன்னன்
கடம்பர்களையும் மேலைக்கங்கர்களையும் தோற்கடித்தார். கொங்கணத்து அரசர்களை கடற்போரில்
வென்றார். ஹர்சவர்த்தனர். நர்மதையாற்றை கடந்து தக்கணத்திற் புகாதவாறு அவர் தடுத்தார்
மாலவகூச்சர மன்னர்களை புறங்கண்டார். கலிங்கத்தை வென்று கோசலர்களை அடிமைப்படுத்தினார்
ஆந்திர நாட்டில் உள்ள பித்தாபுரம் அவரால் கைப்பற்றபட்டது. இவற்றுக்கெல்லாம். மேலாக
சாளுக்கியர்களின் இயற்கை பகைவர்கள் என்று வரலாற்றில் கருதப்படும் பல்லவர்களையும்
வென்றார். ஆய்ஹொளெக் கல்வெட்டு அம் மன்னர் காவிரி ஆற்றை கடந்து தமிழகத்தின் தென்
பகுதியில் உள்ள அரசுகளையும் வென்றதாகக் கூறுகின்றது. இவ் அரிய செய்திகளை தரும்
கல்வெட்டு ரவிகீர்த்தி என்பவனால் இயற்றப்பட்டது. அவர் அக் கல்வெட்டில் தன் பெயரை
குறிப்பிட்டுக் கொள்வதுடன் தான் காளிதாசரைப் போலவே புகழ் எய்துவிட்டதாகவும் கூறுகின்றார்.
மேலும் 2ம் புலி;கேசி மன்னர் சத்தியாச்சரயர் ப்ரிதி வல்லபர் பரம மகேஸ்வரர் முதலிய பெயர்களை
தரித்தார் அவரது ஆட்சி பரப்பு ஹர்ஷர் ஆட்சி பரப்பை மிஞ்சியது. அவர் தக்கணம் முழுவதையும்
ஆண்டார் என்பதில் ஐயமில்லை மேலும் 2ம் புலிகேசி மன்னன் காஞ்சியில் ஆட்சி செய்த
பல்லவர்களோடு பகைத்து வென்றார். சாளுக்கியர் ஆயினும் பல்லவர் கல்வெட்டு ஒன்றில் பல்லவ
மகேந்திர வர்மன் பகைவரை வென்றார் என்று குறிக்கின்றது. சாளுக்கியர்கள் பல்லவரை வென்று
அவர்கள் அரசியல் பகுதியை ஆட்சியில் அடக்கி கொண்டார்.
கி.பி 641 இல் சீன யாத்திரிகர் யுவான் சுவாங் புலிகேசியின் அவைக்களத்தில் தங்கினார்.
மகாராஷ்டிர மன்னர் தனது காலாள் யானைகளைக் கொண்டு அயல் மன்னர்களைப்
பொருட்படுத்தாது இருந்தார் என்கிறார். அந்த யாத்திரிகர் புலிகேசி ஹர்ஷரை இருபது
ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடித்த செய்தியைத்தான் அவர் இங்ஙணம் குறிப்பிடுகிறார். மேலும்
சாளுக்கியர் செங்கோல் செலுத்தினர் என்றும் மக்கள் அமைதியோடு வாழ்ந்தனர் என்றும் அவர்
கூறுகின்றார். பல்லவர் சாளுக்கியர்களுக்கிடையே எழுந்த நெடுநாட் பகைமை முற்றி
மகேந்திரவர்மனின் மகனான நரசிம்மவர்மன் 1ஆம் பல்லவர் தலைநகருக்கு அருகில் உள்ள
மணிமங்கலம் எனும் இடத்தில் சாளுக்கியரை வென்றதோடு அமையாது தமது படைகளை
தலைமை தாங்கிச்சென்றவர் பரஞ்தோசியர் என்னும் சிவபக்தர் என்று திருத்தொண்டர்புராணம் கூறும்
பல்லவர் படைகள் வாதாபியை கைப்பற்றி அழித்தன. அந்நகர் இருந்த இடத்தில் வெற்றித்தூண்
ஒன்று நாட்டம் பெற்றது. நரசிம்மவர்மன் ஹர்ஷவர்த்தனரையும் தமது தந்தையாரான
மகேந்திரவர்மனையும் வென்றார் புலிகேசி. மேலும் 2ம் புலிகேசி மன்னன் சமகால அரசர்களுக்கு
பெரும் சவாலாக விளங்கியமைக்கு மிக முக்கியகாரணம் அவனால் மேற்கொள்ளப்பட்ட போர்கள்
அவனால் ஆற்றப்பட்ட சமய தேவைகள் மற்றும் ஆட்சி விஸ்தரிப்பு என்பனவாகும்.
அதாவது இவன் ஆட்சி காலத்தில் தெற்கே பல்லவ நாட்டில் வடக்கு எல்லை வரையும்
விரிவடைந்து இருந்தது இவனது ஆட்சி கால சிறப்பம்சமாகும். எனவே இந்த செயற்பாடானது
அக்கால மன்னர்களுக்கு பெரும் சவாலாகவும் அமைந்தது. 2ம் புலிகேசி மன்னன் தென் கிழக்கு
தக்கணத்தில் விஷ்னுகுண்டினர்களையும் தோற்கடித்து தனது ஆட்சியை இன்னும் விஸ்தரித்தான்.
இவ்வாறு இம் மன்னனால் மேற்கொள்ளபட்ட ஆட்சி நெருக்கமானது தென்னிந்திய வரலாற்றில் மிக
முக்கியமான செயற்பாடாக காணப்படுவதோடு மட்டுமன்றி சமகால அரசர்களுக்கும் பெரும்
சவாலாகவும் அமைந்தது.
2ம் புலிகேசி மன்னனது சவால்களில் மிக முக்கியமான செயற்பாடாக அவனது போர் முறை
காணப்பட்டது. அதாவது இவன் வானவாசி , கடம்பர்கள் , தலைக்காடு கங்கர்கள் அது மட்டுமின்றி
கொங்கன் மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியேர்ரை 2ம்புலிகேசி மன்னன் போரில் வெற்றி
கண்டான். இவ்வாறு இம் மன்னனால் மேற்கொள்ளப்பட்ட போர் முறையானது. அவனுக்கு சவாலாக
இருந்தாலும். சமகால மன்னர்களுக்கு அது பெரும் சவாலாகவும் விளங்கியது. அது மட்டுமின்றி
விஷ்னுவர்தனின் ஆட்சி விரிவாகாத வண்ணம் தடுத்து நிறுத்தியதும். வரலாற்றில் முக்கியமான
அம்சமாக கொள்ளப்பட்டது.
2ம்புலிகேசி மன்னன் சமகால அரசர்களுக்கு பெரும் சவாலாக விளங்கியதற்கு அடிப்படை காரணம்
அவனது போர் முறைகளும் நாட்டை வென்று எடுத்த விதமு;மாகும். உதாரணமாக இவன் பல
நாடுகளை கைப்பற்றியதனால் இவனது கீர்த்தியும் புகழும் பாரதகண்டம் முழுவதும் பரவலாயின.
இவ்வாறு இவனால் நாட்டை கைப்பற்றி ஆட்சிசெய்த விதமானது அக்கால மன்னர்களுக்கு பெரும்
சவாலாகவே காணப்பட்டன.
2ம்புலிகேசி மன்னன் சாளுக்கிய குலதிலகன் என்றும் சாளுக்கிய குலோத்துங்கன் என்றும்
அழைக்கப்பட்டான். இதற்கு காரணம் இவனது ஆட்சிகாலத்தில் இவனால் மேற்கொள்ளப்பட்ட
சேவைகளும் பொறுப்புக்களும் ஆகும். 2ஆம் புலிகேசி மன்னன் ஒரு இந்து அரசனாக இருந்த
போதிலும் அவன் ஏனைய மதமான பௌத்த மதத்தையும் பாதுகாத்தான். உதாரணமாக இவனது
ஆட்சிகாலத்தில் 100 பௌத்த விகாரைகள் இருந்ததாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன.
இவ்வாறு இம்மன்னனால் ஆற்றப்பட்ட சேவைகளும் அவனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களும்
;சமகால மன்னர்களுக்கு சவாலாகவே இருந்தது.
2ஆம் புலிகேசி மன்னன் வேற்றுமை இன்றி உதவிகள் பல புரிந்தான் இதனால் தான் வாதாபி
நகரத்து மக்களும் சாளுக்கிய இராஜ்ஜிய குடிகளும் மன்னனிடம் அன்பாகவும் ஒற்றுமையாகவும்
மன்னனுக்கு உதவிகள் புரிபவர்களாகவும் இருந்தனர். ஆகவே இதுவும் அவனது வீரத்தினை
வெளிப்படுத்தும் அம்சம் என்பதால் சமகால மன்னர்களுக்கு சவாலாகவே காணப்பட்டது. 2ஆம்
புலிகேசி மன்னன் கடம்பர்களை வென்று வந்தபோது அவனால் அமைதியாக அரசாட்சி செய்ய
முடியவில்லை ஏனெனில் சாளுக்கிய இராஜ்ஜியத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்று
பகைவர்கள் பலர் இருந்தமையே காரணமாகும். இதுவும் மன்னனுக்கு சவாலாக அமைந்தமையை
அறியமுடிகின்றது ஆயினும் பகைவர்களை வென்று சாளுக்கிய பேரரசை தென்னிந்தியாவில்
கட்டியெழுப்பினான். இதுவும் சமகால மன்னர்களுக்கு இருந்த பாரிய சவாலாக அமைந்தது.
தக்கணத்து சாளுக்கிய மன்னன் 2ஆம் புலிகேசி சமகால அரசர்களுக்கு சவாலாக
விளங்கியமைக்கு அவனது போர்த் தந்திரங்கள் கையாண்ட நுணுக்கங்கள் படை பலம்
போன்றவற்றை பிரதானமாகக் குறிப்பிடலாம். அதிலும் பல்லவர்கள் சோழர்கள் ஆட்சி முறைக்கு
மாறாக சாளுக்கிய ஆட்சி முறையில் அதிகாரம் மையப்படுத்தப்பட்டே இருந்தது. சாளுக்கியரின்
கீழ் கிராம சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சாளுக்கியர்கள் சிறந்த கடற்படையைக்
கொண்டிருந்தனர். 2ஆம் புலிகேசியின் கடற்படையில் 100 கப்பல்கள் இருந்தன. மேலும் நிரந்தரமான
சிறுபடையையும் அவர்கள் வைத்திருந்தனர். அதேபோன்று வானவாசி கடம்பர்கள் தலைக்காடு
கங்கர்கள் கொங்கன்மண்டலத்தை ஆண்ட மயிலர்கள் ஆகியோரை வெற்றி கொண்டது
மட்டுமல்லாமல் ஹர்ஷவர்த்தனரை போரில்தோற்கடித்து நர்மதைக்கு அப்பால் ஹர்ஷவர்தனரின்
ஆட்சி விரிவாகா வண்ணம் தடுத்து நிறுத்தியமை வரலாற்றில் முக்கியமானதாக கருதப்படுகின்றது
இவை 2ஆம் புலிகேசியின் பலத்தை நிறுவுகின்றதாக காணப்படுகின்றது. இவ்வாறே புலிகேசி
ஹர்ஷர் முதல் பல்லவர் வரை இந்தியாவில் அனைத்து மன்னர்களையும் வென்று ஈடு இணையற்ற
மன்னனாக காணப்பட்டமையும் இவன் சமகால அரசர்களுக்கு சவாலாக இருந்தான் என்பதையும்
உறுதிப்படுத்துகின்றது.

S.THANUSHKANTH
EUSL