Sunday, July 2, 2023

Post Conflict And Peace Buildings

ஆயுத மோதல்களில் குழந்தைகள் எவ்வாறு பாதிப்படைகின்றனர் 

இந்த உலகத்தில் ஒரு நாளில் குறைந்தது 27 தொடக்கம் 110 வரையான ஆயுத மோதல்கள் இடம்பேறுவதாக கூறப்படுகின்றது. இரண்டு குழுக்களுக்கு இடையில் நடக்கும் இந்த மோதல்களில் பல உயிர்கள் பலியாகின்றன. அதிலும் அதிகமாக குழந்தைகள் பாதிப்படைகின்றனர். உலக நாடுகளில் தொடர்ந்து நடக்கும்

ஆயுத மோதல்களில் பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றிய அறிக்கை ஒன்று ஐக்கியநாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இரண்டாயிரத்து இருபத்திரண்டாம் ஆண்டு நடந்த ஆயுத மோதல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்தப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையின் படி 27,180 சம்பவங்களில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவங்கள் பெரும்பாலும் நான்கு வகைகளுக்கு உட்பட்டதாக அமைந்திருக்கின்றது. ஆயுத குழுக்களில் அல்லது மோதல்களில் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளுதல், கொலை அல்லது காயப்படுத்துதல், பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் குழந்தைகளை கடத்துதல் போன்ற நான்கு விதங்களில் அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். யுத்தங்களினால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆண் குழந்தைகளாகவே உள்ளனர் என இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆயுத மோதல்களில் 8831 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் 7622 குழந்தைகள் ஆயுத குழுக்களில் இனைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகமான வன்முறைகள் இடம்பெற்ற நாடுகளாக காங்கோ ஜனநாயகக் குடியரசு, இஸ்ரேல், பாலஸ்தீனம், சோமாலியா, சிரியா, உக்ரைன், ஆப்கானிஸ்தான் மற்றும் யேமன் ஆகிய நாடுகள் பதிவாகியுள்ன. அத்துடன் கடத்த ஆண்டில் 1163 பாடசாலைகள் தாக்கப்பட்டுள்ளதுடன், 647 மருத்துவமனைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன, மேலும் பல பாடசாலைகள் ஆயுத குழுக்களினால் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இந்த அறிக்கை இரண்டாயிரத்து இருபத்திரெண்டாம் ஆண்டு நடந்த ஆயுத மோதல்களில் குழந்தைகள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை வெளிக்காட்டுகின்றது. இந்த இரண்டாயிரத்து இருபத்தி மூன்றிலும் கூட பல குழந்தைகள் ஆயுத மோதல்களினால் பாதிப்படைந்து கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக ரஸ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலா ஆயுத மோதலில் பல உயிர்கள் பலியாகியுள்ளன. அதில் பல குழந்தைகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் ரஸ்யா குழந்தைகளை கடத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து நடக்கும் ஆயுத மோதல்களில் அப்பாவிக் குழந்தைகள் பலியாவதும் பாதிப்படைவதும் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஆயுத மோதலில் ஈடுபடும் இரு தரப்புகளையும் கண்காணித்து பாதுகாப்பையும் அமைதியையும் உறுதிப்படுத்துகின்றது. இந்த அமைப்பு ஒரு ஆயுத மோதலில் குழந்தைகள் ஆறுவிதமாக பாதிப்படைகின்றனர் என கூறுகின்றது. முதலாவதாக கொலை அல்லது ஊனமாக்குதல் இரண்டாவதாக ஆயுத குழுக்களில் குழந்தைகளை இனைத்துக் கொள்ளுதல் மூன்றாவதாக பாலியல் ரீதியான வன்முறைகள் நான்காவதாக குழந்தைகளை கடத்துதல் ஐந்தாவதாக பாடசாலைகள் மருத்துவமனைகளை தாக்குதல் இறுதியாக ஆறாவதாக மனிதாபிமான உதவிகளை தடுப்பது உள்ளது. அதாவது ஆயுத மோதலில் வழங்கப்படும் மனிதாபிமான உதவிகளை தடுத்து நிறுத்துதல், உதவிகள் வழங்கப்படும் இடங்களையும் வழங்கும் அதிகாரிகளையும் தாக்குதல் போன்றவையும் குழந்தைகளை பாதிப்படைய செய்கின்றது. ஒரு ஆயுத மோதல் சர்வதேச சட்டங்களுக்கும், சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் உட்டபட்டதாகவே அமைய வேண்டும். அந்த வகையில் ஆயுத மோதல்களில் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில்

ஜெனிவா உடன்படிக்கை மற்றும் CRC எனப்படும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் என்பன உருவாக்கப்பட்டிருக்கின்றன.  ஜெனிவா உடன்படிக்கை மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்கள் என்பன, ஆயுத மோதலின் பாதிப்பில் இருந்து ஒவ்வொரு குழந்தையையும் பாதுகாக்க கூடிய விதிகளையும் நிபந்தனைகளையும் கொண்டுள்ளன. அதில் C R C சட்டவிதிகளின் படி ஒவ்வொரு குழந்தைகளும் வாழ்வதற்கான அடிப்படை உரிமையை கொண்டுள்ளனர் எனவும், ஒரு ஆயுத மோதல் இடம்பெறும் போது ஒரு அரசு அந்த குழந்தைகளை பாதுகாப்பதற்காக அதிக உட்சபட்சமான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றது. அதே போல் ஜெனிவா உடன்படிக்கை ஆயுத மோதல்களின் போது எதிரிப்படைகள் மற்றும் பொதுமக்களை வேறுபடுத்தி அடையாளப்படுத்த வேண்டும் எனவும் கூறுகின்றது. இதன் மூலம் பொதுமக்களுடன் குழந்தைகளும் பாதுகாக்கப்படுகின்றனர். மேலும் ஜெனிவா உடன்படிக்கை collateral damage  எனப்படும் தேவையற்ற தாக்குதல்கள் இடம்பெறக்கூடாது என தடை செய்கின்றது. அதாவது ஆயுத மோதலில் சம்பந்தம் இல்லாத மக்களையும் ஆயுத மோதலில் தொடர்புபடாத கட்டிடங்களையும் தாக்க கூடாது என இந்த உடன்படிக்கை கூறுகின்றது. இதன் மூலம் குழந்தைகள் கொல்லப்படுவதும் ஊனமாகுதலும் தடுக்கப்படுகின்றது.

சர்வதேச சட்டங்கள் ஆயுத மோதலில் குழந்தைகளை இனைத்துக் கொள்ள கூடாது என வலியுறுத்துகின்றன. ஜெனிவா உடன்படிக்கை மற்றும் C R C படி 15 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளை ஆயுத மோதலில் பயன்படுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 18 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளையும் ஆயுத படைகளில் இனைந்து கொள்ள வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன் ஜெனிவா உடன்படிக்கை குழந்தைகள் மரியாதைக்குரியவர்களாக நடத்தப்பட வேண்டும் எனவும், அவர்களை எவ்வித அநாகரிகமான செயல்களுக்கும் உட்படுத்த கூடாது எனவும் கூறுகின்றது. இதன் மூலம் குழந்தைகள் பாலியல் ரீதியான வன்முறைகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

ஒரு ஆயுத மோதலில் எவ்வித காரணங்களுக்காகவும் குழந்தைகளை கடத்துதல், தடுத்துவைத்தல் என்பன தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு குழந்தைகளை தடுத்து வைத்திருந்தாலும் அங்கு அவர்களுக்கான சுதந்திரம் வழங்கப்படல் வேண்டும் அவர்கள் விளையாடுவதற்கும் கல்வி கற்பதற்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகள் எல்லா நேரத்திலும் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என ஜெனிவா உடன்படிக்கை கூறுகின்றது. ஆயுத மோதலில் எல்லா சூழ்நிலைகளிலும் உதவிகளைப் பெறுவதிலும் பாதுகாக்கபடுகதிலும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் என குழந்தைகளின் உரிமைக்கான உலகளாவிய பிரகடனம் வலியுறுத்துகின்றது.

இந்த உலக வரலாற்றில் பல்வேறுபட்ட காலகட்டங்களில் பல யுத்தங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த யுத்தங்களிலெல்லாம் அதில் பங்குபற்றுபவர்களை தாண்டி அதற்கு எந்த சம்மந்தமும் இல்லாத பல அப்பாவி உயிர்கள் பலியாகியுள்ளன. அதிலும் பல குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். என்னதான் ஆயுத மோதல்களில் குழந்தைகளை பாதுகாக்க பல விதிகளும் நிபந்தனைகளும் இருந்தாலும், எந்த யுத்தத்திலும் குழந்தைகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டதில்லை. பிரபல சமூக ஆர்வலரும் Save the children அமைப்பின் ஸ்தாபகருமான எக்லான்டைன் ஜெப் 

இந்த உலகில் நடக்கும் ஒவ்வொரு யுத்தமும் குழந்தைகளுக்கு எதிரான யுத்தமேயாகும் என்கின்றார். இவர் கூறிய படி இன்று நடக்கும் ஒவ்வொரு யுத்தமும் பல்லாயிரம் குழந்தைகளில் எதிர்காலத்தை இல்லாமல் செய்கின்றது.



No comments:

Post a Comment

ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...