கல்வி உளவியல்
கற்பித்தலுக்காண உளவியல் பற்றிய சிந்தனை வகுப்பறை ஆராய்ச்சிக்கு அவசியம். ஆதாரம் முன்வைத்து விளக்குக.
ஒரு ஆசிரியரே அனைவருக்கும் பிரதானமானவர் வினைத்திறன் கொண்டவர் ஆக உள்ளார். ஒரு குழந்தையை தனி மனிதனாக உருவாக்குவதில் ஆசிரியருக்கே முக்கிய பங்கு காணப்படுகின்றது. ஒருவர் சிறந்த ஆசிரியராக இருக்க வேண்டுமானால்அவர் சிறந்த உளவியலாளராக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆசிரியர் தொடர்பான முறையில் ஒழுங்குபடுத்தி கற்பித்தால் பிள்ளைகள் விடயத் தொடர்பை விளக்கி அப் பாடத்தைப் பற்றிய ஒரு முழுமையான புலக்காட்சியைப் பெறுவார். ஆசிரியர் பாடங்களில் உள்ள உண்மைகள் சம்பவங்கள் கோட்பாடுகள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பீடு செய்தும் ஒத்த ஓசையூள்ள சொற்கள் ஒத்த அமைப்புள்ள விடயங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டியூம் கற்பிக்கலாம்.
அந்தவகையில் உடல் உள்ளம் மனவெழுச்சி அறநெறி ஆகியவற்றில் மாணவர்கள் முழுமையான முதிர்ச்சியடைய வழிவகுப்பதே கல்வியின் குறிக்கோளாகும்.அந்த குறிக்கோளையடைவதற்கு ஆசிரியரானவர் வகுப்பறையில் வெவ்வேறுபட்ட நடத்தைகளையூம் இயல்புகளையூம் மற்றும் தமக்கென குறிப்பிட்ட தனித்துவமான அடையாளங்களைக்கொண்ட மாணவர்களின் மனப்பாங்குகளையூம் எண்ணங்களையூம் துல்லியமாக அறியூம் சிறந்த உளவியலாளராக இருக்க வேண்டும்.
ஆசிரியர் மாணவரின் உடல் உள மனவெழுச்சி சமூகத்தொடர்பு ஆகியவற்றின் வளர்ச்சி நிலைகளையூம் மாணவரின் உளவியல் தேவைகள் மனப்பான்மை ஆளுமைப் பண்புகள் தனியாள் செயற்பாடுகள் என்பவற்றை புரிந்து அதற்கேற்றால்போல் அவர்களின் பாகம் புலக்காட்சி சிந்தiனை கற்பனை ஆகியவற்றின் உளச்செயற்பாடு பற்றியூம் அவர்களின் அறிவூ அடைவூ மட்டம் திறமை ஆகியவற்றை அளவிடும் உளவியல் நுட்ப முறைகளைக் கையாண்டு அதற்கேற்றாற்போல செயற்படுபவரே சிறந்த ஆசான் எனும் தகுதிக்குள் உள்ளடக்கப்படுகின்றனர்.அவரே மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கல்வி கற்பித்து வழிகாட்டும் நல்லாசிரியராக விளங்குவார்.
மேலும் மாணவர்களை நன்கு அவதானித்து அவர்களின் தேவைகள் என்ன? அவர்கள் எவ்வாறான விடயங்களினுhடாக கற்றல் செயற்பாட்டுகளில் ஆர்வம் காட்டுகின்றார்கள் என்பதை ஆய்ந்து அதற்கேற்றாற்போல் ஆசிரியர்கள் செயற்படுவது கற்பித்தல் செயற்பாட்டினதும் கற்றல் செயற்பாட்டினதும் சிறந்த ஆரம்பமாக அமையூம. அதுமட்டுமல்லாமல் ஒரு வகுப்பறையில் மீத்திறன் மிக்க மாணவர்களும் குறைதிறன்களைக் கொண்ட மாணவர்களும் காணப்படுகின்றனர்.அதன் காரணமாக அவரவர் திறன்களை கவனத்திற் கொண்டும் அவர்களின் மனநிலையை அவதானித்து வகுப்பறையில் கற்பித்தலை மேற்கொள்ளும் போது தான் அங்கு சிறந்த கற்றலும் கற்பித்தலும் நடைபெறும்.
மாணவர்கள் எவ்வாறான விடயங்களில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதையறிந்து உதாரணமாக வெறுமனே பாடப்பரப்புக்களை வாசித்து வினாக்களை வினவி விடைகளைக் காண செய்வது சிறந்த கற்பித்தலாகாது.அதற்கென பல்லுhடக எறிகை மூலம் (ஒலி ஒளி வீடியோக்களை)காண்பித்தல்.இதனுhடாக அவர்களின் கேட்டற் பார்த்தல் கிரகித்தற் திறன்களை அவர்களின் உள விருப்புக்களுக்கேற்ப வழிநடத்தி சிறந்த கற்பித்தலை மேற்கொள்ள முடியூம்.
அத்தோடு ஒரு ஆசிரியரானவர் மாணவர்களிடத்து தமது திறமைகளையூம் ஆற்றல்களையூம் வெளிப்படுத்த நினைக்காது மாணவர்களின் திறமைகளையூம் ஆற்றல்களையூம் வெளிப்படுத்தும் வகையில் அவர்களது உளம் அறிந்து தமது கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும்.ஆசிரியர்களது கற்பித்தலின் நோக்கம் மாணவர்களின் அடைவூமட்டமும் அவர்களது எதிர்கால வாழ்க்கையூம் சிறந்த முறையில் அமைய வேண்டும் என்பதேயாகும் எனவே மாணவர்களை அடிப்படையாகக் கொண்டே கற்பித்தல் இடம்பெற வேண்டும்.
எடுத்துக்காட்டாக ஒருவிடயம் தொடர்பாக மாணவர்களுக்குக் கற்பிக்கையில் முன்கூட்டிய ஆயத்தத்தோடு ஆசிரியர்கள் காணப்பட வேண்டும்.உதாரணமாக பாலர் பாடசாலைகளிலோ முன்பள்ளிகளிலோ மாணவர்கள் விளையாட்டுக்களுடன் கூடிய கற்பித்தலையே விரும்புகின்றார்கள். எனவே அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப ஆசிரியர்கள் செயற்படவேண்டும்.மேலும் மாணவர்களின் வயது அவர்களது கொள்திறன்களுக்கேற்ப ஆசிரியர்கள் கற்பிக்கும் போதுதான் அவர்களால் சிறந்த கற்றற்செயற்பாடுகளையூம் மாணவர்களின் சிறந்த தேர்ச்சியையூம் அடைய வழிவகுக்க முடியூம் என்பது திண்ணமாகும்.எனவே மாணவர்களின் உள நடத்தைகளுக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்பவராக அதாவது ஓர் ஆசிரியரானவர் சிறந்த உளவியலாளராகக் காணப்பட வேண்டும்.
மேலும் ஆசிரியரானவர் மாணவர்களோடு இன்முகங்கொண்டு பேசுதல் அவர்களின் அகத்தைப் புரிந்து சிறு சிறு விடயங்களுக்கெல்லாம் அவர்களைப் பாராட்டுதல் மேலும்; மாணவர்கள் வீட்டுச்சூழலையடு;த்து பாடசாலைச்சூழலிலே தமது நேரத்தைச் செலவிடுகின்றனர் எனவே அவர்களின் குடும்ப சூழ்நிலைகளையறிந்து செயற்படுவது ஓர் சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.
பிள்ளையின் உள வளர்ச்சி பற்றியூம் கற்பித்தல் முறை பற்றியூம் அறிய விரும்பும் எவரும் பியாஜேயின் கருத்துக்களை அலட்சியம் செய்ய முடியாது.அந்தவகையில் அன்பு ஆதரவூ கணிப்பு ஆகியனவூம் உள வளர்ச்சிக்கு உதவூவன எனவூம் ஓர் ஆசிரியரானவர் அறிந்திருக்க வேண்டும்.பியாஜேயின் முடிவூகளின்படி வகுப்பறையின்(பாலர் பாடசாலை)உபகரணங்களிலும் பிள்ளைகள் ஈடுபட வசதிகளும் பாடுதல் கதை சொல்லுதல் ஆகியன மூலம் சொற் களசிய வளர்ச்சிக்கு வேண்டிய வசதிகளும் பாடசாலைகளிலும் இருக்க வேண்டும்.உபகரணங்கள் பெரியனவாக இருப்பது அவசியம் அப்போது தான் இடைவெளித்தொடர்புகளை ஏற்படுத்த முடியூம்.
சிறுவர் பாடசாலைகளில் அகச்சிந்தனை துhலச் சி;ந்தனை ஆகிய வளர்ச்சிப்படிகளிலுள்ள காணப்படுவர்.எனவே வாசித்தல் எழுதுதல் கணித்தல் ஆகிய செயல்களில் ஈடுபடும் போது ஒழுங்குபடுத்தப் பட்ட விளையாட்டுக்களும் செயலனுபவங்களும் இருப்பது அவசியமாகும்.பின்தங்கிய சூழலின்றும் வரும் பிள்ளைகளுக்கு ஒழுங்கான விளையாட்டுக்களும் மணல் நீர் மரக்குற்றிகள் தொடர்பான செயல்களுக்கு வசதிகளும் திருத்தமான மொழி வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளும் செய்ய வேண்டும்.
by.kirushanth
உசாத்துனைகள்
- கலாநிதி முத்துலிங்கம்.ச. “கல்வியூம் உளவியலும்” 5ம் பத்pப்பு
- மாணியம் சிவகுமார் “அடிப்படை உளவியல்” (பக்கம் 39-52)
No comments:
Post a Comment