Wednesday, June 17, 2020

அறிவொளிகால யுகம் ANTHROPOLOGY


அறிவெளிக் கால யுகமானது எவ் வகையில் மானிடவியலை தலையாய கற்கைப்புலமாக நிறுவுவதற்கு துணைபுரிந்துள்ளது. 

மானிடவியல் மனித இனம் பற்றிய அறிவியல் கற்கை துறையாகும.; இது மனிதகுலத்தை சமூக நிலை பண்பாட்டு நிலை உயிரியல் நிலை போன்ற பல்வேறுபட்ட நிலைகளில் கடந்தகால மக்களையும் சமகால மக்களையும் அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களையும் மக்களையும் ஆராயும் பரந்த விரிந்த பரப்பு கூடியதாக உள்ளது. இது இரண்டு வகைகளில் முழு தன்மையை கொண்டதாக காணப்படுகின்றது. இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும் மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றி கருத்தில் கொள்கின்றது பண்பாடு பற்றிய எண்ணக்கரு மனித இயல்பு பண்பாடு எனும் கருத்தும் கொண்டதாக முழுமை பெறுகின்றது.

முதன்முதலில் மானுடவியல் என்ற சொல்லை கி பி பதினாறாம் நூற்றாண்டில் உடல் கூற்றியல் என்ற குறுகலான பொருள்களும் சொல்லிற்கு பொருள் கூறப்பட்டது. இருபதாம் நூற்றாண்டில் மானுடவியல் துறை முழுமையான துறையாக உருவெடுத்துள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தார்வின்னது கொள்கை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மானிடவியல் துறையின் வளர்ச்சி அதிகரித்து இருக்கின்றது மானிடவியலின் தோற்றம் முதல் இன்று வரை உள்ள வளர்ச்சி நிலைகளை முன்று நிலைகளாக வகைப்படுத்து கூறுகின்றனர. அவை புத்தாய்வு காலத்திற்கு முந்திய காலம், புத்தாய்வுக் காலம்;, அறிவொளிக் காலம் என்பனவாகும்.

பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரை அறிவாற்றல் சார்ந்த சிந்தனைகளுக்கு எப்போதும் இல்லாத அளவில் பெரும் விறுவிறுப்பு ஏற்பட்டதால் இக்காலம் அறிவொளிக் காலம் என சிறப்பிக்கப்படுகிறது. மானிடவியலின் வளர்ச்சியில் முன்னைய காலங்களை விட இக் காலமே பெரும் பங்கினை கொண்டதாக காணப்படுகின்றது. இக்காலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் பல துறைகள் சேர்ந்தவர்களாக இருந்தனர் கணக்கியல் இயற்பியல் போன்ற பல துறைகள் சார்ந்த வளர்ச்சி காலகட்டத்தில் காணப்பட்டது. இக் கால சிந்தனையாளர்கள் மிகுந்த மன வளத்தை பெற்று ஆழ்நிலையில் ஆராயும் தன்மை கொண்டிருந்தனர் அவர்கள் பல துறைகளில் ஆர்வம் கொண்டிருந்தனர் ஒரு துறையைச் சேர்ந்த ஒரு ஆய்வுகளும் கருத்துக்களும் ஏனைய துறையினருக்கு நன்மை அளிப்பவையாக அமைந்தன. இக் காலகட்டத்தில் புதிய கொள்கைகளையும் சமுதாய பொருளாதார அறிவியல் கருத்துகளையும் மக்களிடையே பரவச் செய்த பெருமை இக்கால சிந்தனையாளர்களை சாரும்.

ஆறிவொளிக்காலத்திலேயே டாரிவின்னின் படிமலர்ச்சி சிறப்புற்று காணப்பட்டது இது மானிடவியலுக்கு ஒர் புதிய ஆரம்பத்தை வளங்கியது படிமலர்ச்சி என்ற சொல்லுக்கு பதிலாக அறிவாளிகால சிந்தனையாளர்கள் வளர்ச்சி என்று குறிப்பிட்டதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். அக்கருத்தை விளக்கும் பொருட்டு வரலாற்றுரீதியான வளர்ச்சியினை சுட்டிக் காட்டுகின்றனர். ஐரோப்பியர்களுக்கு முந்தைய நிலையில் கிரேக்க உரோமானியரிடமிருந்து வளர்ச்சி பெற்றதாக கூறினாரே தவிர மனித தோற்றத்தையோ அதற்கு முற்பட்ட கால வரலாற்றையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை. ஏனெனில் அவர்களின் கருத்துக்கள் மண்ணியல,; தொல்லியல் ஆகிய துறைகளின் வளர்ச்சினை எதிர்பார்த்திருந்தனர்.

இதே போன்று மனிதனின் தோற்றம் மற்றும் அவனது தன்மை பற்றியதான சிந்தனையும் இக் காலப்பகுதியிலேயே தோற்றம் பெற்றதை நாம் நோக்கலாம் இதுவும் மானிடவியல் ஒர் தலையாய கற்கை புலமாக தோன்றுவதற்க்கு உதவியது. தோமஸ் ஹோட்ஸின் கருத்துப்படி மனிதர்கள் இயற்கையிலேயே கொடுமையான அவர்கள் தன்னல நாட்டமுடையவர்கள் மனிதர்களின் இயல்புகள் பற்றி கூறினார் அறிஞர் ரூஸோ இதை மறுத்து மனிதர்கள் கூடி வாழும் இயல்புடையவர்கள் மக்கள் கூட்டமாக கூடி வாழ்ந்ததன் விளைவே நாகரீகம் என்றார்.

மனித நடத்தை முறைகளை அறிவதில் இயற்கை அறிவியலின் முறைகளைப் பயன்படுத்த வேண்டும். என்ற கருத்தே அறிவொளிக் காலம் முதல் இன்றைய அறிவியல் காலம் வரை தொடரும் ஒரு செயற்பாடாகவும் பங்களிப்பாகவும் காணப்படுகின்றது. இதுவே அவர்களின் தலையாய பங்களிப்பாகும். கண்டுபிடிக்க இயலாத விதிகள் இதில் காணப்படுகின்றன. அதனடிப்படையிலேயே இயங்குகின்றது. என அவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் ஆய்வு செய்யாமல் ஊகிக்கும் போக்கை இவர்கள் புறக்கணித்து தரவுகளையும் முடிவுகளையும் பரிசோதனை செய்து சோதித்து காணும் வழிமுறைகளை மேற்கொண்டனர். ஆகவே சமுதாய முறைகளையும் சமகாலத்தில் சமுதாய அரசியல் அமைப்புகளையும் குறித்த பகுத்தறிவு வாதி அணுகுமுறையும் ஆராயும் கோட்பாடாக பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து புறப்பட்டு விட்டன என்பது தெளிவாகின்றது. இது இவர்களின் முக்கிய பங்களிப்பாகும.; அமெரிக்க அரசியலமைப்பில் இடம்பெற்ற விடுதலை கோட்பாடுகள், அமெரிக்காவின் விடுதலைகள் போன்ற அறிவிப்பு மனித உரிமைகள் பற்றிய பிரெஞ்சு அறிவிப்பு முதலானவையும் அறிவொளிக் காலத்தில் தத்துவவியலில் காணப்படுகின்றது. இது அனைவரும் அறிந்த விடயமாகும்.

அறிவொளிக்கால காலச் சிந்தனைகளில் பெரும் பகுதி சமகால மானிடவியல் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளதை காணக்கூடியதாக உள்ளது காலத்தால் அழியாத பங்களிப்பு மனித நேயம் எனும் கோட்பாடு இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. இக்கோட்பாடு இனம் சாதி வகுப்பு சமயம் போன்ற அனைத்து பிரிவுகளையும் கடந்த மனிதர்கள் அனைத்தையும் மதிப்பையும் வலியுறுத்துகின்றது. அறிவொளி காலத்திய பங்களிப்புகளில் முக்கியத்துவம் பெறும் மற்றைய பங்களிப்பாக கல்வி சமுதாய சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றின் முக்கியத்துவம் காணப்படுகின்றது.

குறிப்பாக இளம் வயதினரை சமுதாயம் ஆக்கும் முறை பற்றியது கொள்கையில் இயன்றளவு ஒன்றிய மாற்றி காணப்படும் கருத்துக்கள் மற்றைய முக்கியத்துவ பங்களிப்பாகும். இயற்க்கையில் இருந்து மனிதன் தனித்து ஒதுங்கி வாழவில்லை இயற்கை விதிக்கு உட்பட்டு இவன் இயங்குகின்றான் இயற்க்கை அடிப்படையில் மட்டுமே மனிதனை அறியவேண்டும் மேற்கூறிய கருத்தின்படி சிந்தனைகள் மானிடவியலில் முக்கியத்துவம் பெறும் சிந்தனைகளாக இயன்றளவும் காணப்படுகின்றுத.


அறிவொளி கால சிந்தனைகள் விளைந்த இடங்களுள் ஸ்கொட்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகள் அடங்கும். இவ் நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் பல்வேறு பரப்புகளில் சிறந்த பங்களிப்பினையும் மேற்கொண்டுள்ளனர.; அவர்களின் கருத்துக்களும் இயன்றளவு சிறப்பு பெற்றதாக அமைகின்றது மானிடவியலில் முக்கியத்துவம் கருத்துகளாக இவ் நாட்டு அறிஞர்களின் கருத்து அமைகின்றது. இவை மானுடவியல் ஆய்வில் புதிய பரிணாமங்களை தோற்றுவித்தன.

அந்த வகையில் பிரான்ஸ் குழுவை சேர்ந்த டுர்காட் என்பவர் 'மனித மனத்தின் வரலாற்று கால வளர்ச்சி' எனும் நூல் 1750 ஆம் வரலாற்றுக் காலத்தில் இருந்து தற் காலம் வரை மனிதனின் அனைத்து போக்கிலும் அவனது செயல்முறைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது. என கூறுகின்றார். இதனை மனிதன் உணவுகள் தேடும் வழிமுறைகளில் ஏற்பட்ட வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு காணக்கூடியதாக உள்ளது. என குறிப்பிடுகின்றார். மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகள் உலகளாவிய நிலையில் உள்ளது. உயிரியல் சார்ந்த வேறுபாடுகள் காரணமல்ல பண்பாடுகளே காரணம் என்றார.; இப் பண்பாட்டு வேறுபாடுகள் கற்றல் முறையில் உள்ள வேறுபாடாகும். சுற்றுச்சூழலில் உள்ள வேறுபாடாகும். ஒருவரிடமிருந்து மற்றொருவர் தனித்திருக்கும் அளவில் உள்ள வேறுபாடாகும.; என குறிப்பிடுவதோடு இதுபோன்ற பிற வேறுபாடுகளும் காணப்படும் என குறிப்பிடுகின்றார். உலகில் பல்வேறு அரசுகளின் வளர்ச்சியும் தோல்வியும் மாறி மாறி தொடர்ந்து ஏற்பட்டுள்ளதால் மனிதனின் வளர்ச்சியில் இடத்துக்கிடம் வேறுபாடுகள் உள்ளது. என குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அறிவொளிக்காலத்தில் மக்கள் மற்றும் அரசுகள் பற்றிய கருத்துக்கள் பல ஆளமாக தெரிவிக்கபட்டன. இதே போன்று அடம் பெர்ஷன் எனும் ஸ்கொட்லாந்து அறிஞர். மனிதன் கூட்டமாக சேர்ந்து வாழும் முறை அவன் ஒருவரோடு ஒருவர் உதவி பெறா நிலையில் வாழ்ந்த குழந்தை பருவத்தை எண்ணி அதில் இருந்து தோன்றியதாகும். அதன் பின்னர் சமுதாயமயமாக்கலுக்கு உட்பட்டு ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு புரிந்து கொண்டு தம் சமுதாய அமைப்புக்கு ஏற்ப பெரியவர்களாக மனிதர்கள் வாழ்கின்றனர் என்று இவர் கருதினார்.
தொகுத்து பார்க்கும் போது இவ்வாறாக அறிவெளிக் காலமானது மானிடவியலின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை; பார்க்கும் புத்தாய்வு காலத்திற்கு முந்திய காலம், புத்தாய்வுக் காலம்; என்பனவற்றை விட அறிவொளிக் காலமானது. புல புதிய சிந்தனைகளையும் கோட்பாட்டின் ஆரம்பங்களையும் கோட்டதாய் அமைகின்றது. பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டில் இறுதிக் காலம் வரையாக அறிவாற்றல் மற்றும் மனித சிந்தனைகள் எப்போதும் காணப்படாத அளவிற்கு வளர்ச்சி பெற்ற காலம் என்பதால் சிந்தனையாளர்கள் பல துறைசார்க அறிவுகளை பெற்று அவற்றை மானிடவியல்க்கு பயன்படுத்ரினர்.. மானிடவியலின் ஒர் தலையாய துறையாக வளர்ச்சி பெற்று தற்காலத்தில் நிலைத்திருப்பதற்க்குட' அறிவொளிக் காலமானது பல்வேறுபட்ட பங்களிப்பினை செய்;துள்ளது. இதற்க்கு அறிவொளிக்காலத்தில் தோன்றிய கோட்பாடுகளும் சிந்தனைகளும் இன்றளவும் மானிடவியலில் முக்கியத்துவம் பெறுவதை காணலாம்.


உசாத்துணை


பக்தவத்சல பாரதி. சீ., (1990), 'பண்பாட்டு மானிடவியல்', மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.


பக்தவத்சல பாரதி, சீ, (1997), மானிடவியல் கோட்பாடுகள், வல்லினம் எண் 09. பு-பிளேக் அரசு குடியிருப்பு, இலாச்சுப்பேட்டை புதுச்சேரி.


நேர்காட்சிவாதம் தொடர்பான விமர்சனங்கள்


நேர்காட்சிவாதம்


நேர்காட்சிவாதம் தொடர்பாக கொம்ற்றின் பங்களிப்பும் குறைபாடுகளும்
ritzer and goodman என்பவரகள் நேர்காட்சிவாதம் தொடர்பாக கொம்ற் எட்டு விதமான பங்களிப்பினை மேற்கொண்டுள்ளதாக கருதுகின்றனர். அவ்வாறான பங்களிப்புக்கள் பின்வருமாறு.

1. சமூகவியல் எனும் பதத்தினை உருவாக்கினார்
2. சமூகவியலை நேர்காட்சிவாத விஞ்ஞானமாக நிறுவினார்
3. நான்கு விதமாக முறையியலை சமூகவியலில் தோற்றுவித்தார்
4. சமூக நிலையியல் மற்றும் சமூக இயக்கவியலை தோற்றுவித்தார்;
5. இவர் பேரின சமூகவியலாளராக காணப்பட்டார்
6. சமூக கட்டமைப்பினை தனிநபரின் நடவடிக்கையின் வாயிலாக நோக்கினார்
7. சமூக கட்டமைப்பின் மாற்றத்தினை இயல்பானதாக கருதினார்.
8. இவர் கோட்பாடு மற்றும் நடைமுறை செயல்களை ஒன்றிணைக்கும் முயற்;சியில் ஈடுபட்டார்.

நேர்காட்சிவாதம் தொடர்பான கொம்ற்றின் குறைபாடுகள்
1. கொம்ற்றின் கோட்பாடு அவரின் சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
2. அவர் நிஐ உலகின் விடயங்களை புரிந்துகொண்டு தமது கோட்பாட்டை நிறுவவில்லை.
3. கொம்ற் தனது சமகால அறிஞர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத வகையில் தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார்.
4. கொம்ற் தனது அனுபவம் வாயிலாக பெற்று கொண்ட அறிவு சிறப்பானது ஆனால் அவர் வெளிப்படுத்திய கோட்பாட்டு ரீதியான எண்ணம் பொது தன்மை வாய்ந்ததாகவே காணப்பட்டது.
5. கொம்ற் வரம்பிற்க்கு உட்பட்டே சமூகவியலை பயன்படுத்தினார் இவர் தனது 'ரணமான ஒத்துழைப்பினை சமூகவியலுக்கு வழங்கவில்லை.
6. இவர் சமூகவியலை பழமைவான ஒழுங்கின் அடிப்படையில் ஒழுங்கமைத்துள்ளார் அத்துடன் சமூக கூறுகளை உடற்பாகங்களுடன் ஒப்பீட்டு தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார்.
7. கொம்ற் தான் பகுப்பாய்விற்;கு உட்படுத்திய விடயங்களையும் தரவுகளையும் கொண்டே தனது கோட்பாட்டை நிறுவுகின்றார்.
8. கொம்ற் கொண்டிருந்த சில சுய கருத்துக்கள் அவரை மோசமான அறிவிப்புக்கள் மற்றும் பிழைகளை விட வழிவகுத்தது.
9. இவரின் நேர்காட்சி வாதமானது கத்தோலிக்க சமயத்திற்கு சார்பானதாக காணப்படுகின்றமையினால் இதன் விஞ்ஞானத்தன்மை மீது சந்தேகம் எழுகின்றது.
10. கொம்ற்றின் எதிர்காலம் பற்றிய திட்டம் எல்லையற்றதாகவும் விசித்திரமானதாகவும் காணப்படுகின்றது.
அயஒ றநடிநச சமூகம் தொடர்பாக கற்;கை என்பது தத்துவார்த்த விளக்கமாக கற்பதை விட அது அனுபவங்களின் வாயிலான கற்;கையாக அமைய வேண்டும் என்கின்றார்.


டுர்மைம்மின் நேர்காட்சிவாதம்

நவீன சமூகவியல் துறை டுர்கைம்மின் ஆய்வுப் பணிகளிற்;கு பின்னரேயே தோற்றம் பெற்றது. டுர்மைம் கொம்ற்றின் பல தத்துவார்த்த விடயங்களை எதிர்த்ததுடன் சமூகவியல் என்பது இயற்;கையின் தர்க்கரீதியான தொடர்ச்சி மற்றும் மனித நடவடிக்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சி என்று குறிப்பிட்டார்.
இவர் முதலாவதாக சமூகவியல் துறையினை Bordeaux பல்கலைகழகத்தில் தோற்றுவித்தார். 1895 இல் rules of the sociological method எனும் நூலினை வெளியிட்டார். இவ் நூலில் மனித நடத்தையானது அறிவியல் சார் நடத்தையாக நீடிக்க வேண்டும் என வாதிட்டார்.
டுர்கைம்மின் மற்றுமொரு நூலான தற்கொலை என்பது தற்கொலை மேற்கொள்ளும் கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்சாந்து மக்களை பற்றிய ஆய்வாக காணப்பட்டது. இதில் இவர் கத்தோலிக் சமூகத்தினரிடையே புரட்டஸ'சாந்து மக்களை விட குறைவான தற்கொலை இடம்பெறுவதாக கருதினார்.
இதன் அடிப்படையில் இவர் சமூக உண்மை எனும் எண்ணகருவை உருவாக்கினார். இதன் மூலம் சமூகத்திற்க்கு ஆரோக்கியமான பாதையை காட்டமுடியும் என்று இவர் கருதினார்.


நேர்காட்சிவாத எதிர்ப்பு மற்றும் விமர்சன கோட்பாடு

20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் germany
 சமூகவியலாற்றாளர்கள் நேர்காட்சிவாத எதிர்ப்பினை ஆரம்பித்தனர். இவர்கள் ஆய்வு என்பது மனிதனின் கலாச்சார நெறிகள் , மதிப்புக்கள், சின்னங்கள், மற்றும் சமூக செயல் முறைகள் என்பவற்றை உள்ளடக்கியதாக காணப்பட வேண்டும் என்றனர்.
சமூகவியல் என்பது சமூக உறவுகளை அடையாளம் காண்பதினால் இதனை இலகுவில் விஞ்ஞானம் என்று கருதலாம் என்று அயஒ றநடிநச வாதிடுகின்றார். மேலும் இவர் சமூகவியல் என்பது சமூக செயல் பற்றியதான கற்கை என வாதிடுகின்றார்.
சமூகவியலாளர்களான georg simmel, ferdinands tonnies, George Herbert mead> Charles cooly  என்பவர்களும் நேர்காட்சிவாத எதிர்ப்பிற்;கு பங்களிப்பினை செலுத்தியுள்ளனர். மேலும் கார்ல்மார்க்ஸ் இன் பொருள் முதல் வாதம் மற்றும் விமர்சன பகுப்பாய்வு என்பது நேர்காட்சிவாத எதிர்ப்பை அபிவிருத்தியடைய செய்தது.


சமகால நேர்காட்சிவாதம்

நேர்காட்சிவாதம் என்பது சமூக மற்றும் மனித நிகழ்வுகள் நிகழ்கையில் அதனை சமூக மேம்பாட்டின் பொருட்டு விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்தலாகும். நேர்காட்சிவாத எதிர்ப்பு என்பது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது இது மனித மற்றும் இயற்கை பற்றிய விஞ்ஞானம் என்பது காலத்திற்;கு காலம் மாற்றமடைய கூடியதாக அமைகின்றது என்றும் இது நீண்ட காலம் நிலையாக அமைவதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடங்கியது.
தற்காலத்தில் அமேரிக்க சமூகவியலாளர்கள் மற்றும் அரசியல் பத்திரிகையாளர்களின் ஆக்கங்களின் வாயிலாக நேர்காட்சிவாதம் வெளிப்படுகின்றது. நேர்காட்சிவாதம் கொண்டுள்ள ஆய்வு முறையியலே இன்றைய இதன் பிரசித்தத்திற்கு காரணமாக அமைகின்றது.
1950 களில் நேர்காட்சி வாதத்தின் முக்கிய அம்சங்கள்
1. அறிவியல் மொழியியல் மற்றும் எண்அறிக்கைகளின் தொகுப்பாக நோக்கபட்டது
2. இது முரண்பாடில்லாத தன்மை மற்றும் செயல் விளக்கம் என்பவற்றை கொண்டதாய் காணப்பட்டது.
3. இவ் வாதத்தின் சில அறிக்கைகள் அனுபவம் மூலமும் மெய்யான அறிக்கைகள் மூலமும் தவறு என நிரூபிக்ககூடியதாக காணப்பட்டது.
4. அறிவியல் என்பது தெளிவாக வளர்ச்சியடைய கூடியது என்ற நம்பிக்கை காணப்பட்டது.
5. அறிவியல் என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், இனம் என்பவற்றை கொண்டது என்ற நம்பிக்கை காணப்பட்டது.
6. அறிவியல் என்பது அறிவியலாளர்களின் தனிப்பட்ட ஆளுமை சமூக அந்தஸ்து என்பனவற்றில் விலகி இருக்கும்.
7. அறிவியல் பொதுவான கோட்பாடுகள் மற்றும் ஆய்வு முறைகளை கொண்டவையாக அமைகின்றது.
8. அறிவியல்கள் புதிய சிந்தனைகளை கொண்டவையாக அமைகின்றது
9. அறிவியல் என்பது பல்வேறுபட்ட அறிவியல்துறைகளின் சிந்தனைகள் உள்ளடக்கியதாகவும் உண்மை உலகத்தை பற்றியதாகவும் அமையும்.
நேர்காட்சி வாதம் என்பது அறிவு என்பது விஞ்ஞானரீதியானது என்று நம்புவதுடன் அனைத்து விடயங்களும் அளவிடத்தக்கது என்று கூறுகின்றது.
விமர்சனங்கள்
max horkheimer இரண்டு அடிப்படையில் நேர்காட்சிவாதத்தை விமர்சித்தார். சமூக செயலை இவ் வாதம் தவறான முறையில் வெளிப்படுத்துகின்றது மற்றும் சமூக வரலாறு சமூக நிலைமைகள் என்பவற்றினை நேர்காட்சி வாதம் கருத்தில் கொள்ளவில்லை என்று விமர்சித்தார். இரண்டாவதாக இவர் நேர்காட்சி வாதம் காட்டும் சமூகம் பற்றியும் விமர்சனங்களை முன்வைக்கின்றார். நேர்காட்சிவாதம் செயற்கை சமூகத்தை எதிர்ப்பதை விடுத்து அதை ஆதரிப்பதாக அமைகின்றது என்பது இவர் முன்வைக்கும் விமர்சனமாகும். இவரால் முன்வைக்கபட்ட இத்தகைய விமர்சனங்கள் பின் நேர்காட்சிவாத அபிவிருத்திக்கு உறுதுணையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.








ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...