Sunday, November 17, 2019

THE ELEMENTARY FORM OF RELIGIOUS LIFE எனும் புத்தகத்தில் எமில் துர்கைம் குறிப்பிடுகின்ற மதம் தொடர்பான அனுகுமுறை

THE ELEMENTARY FORM OF RELIGIOUS LIFE எனும் புத்தகத்தில் எமில் துர்கைம் குறிப்பிடுகின்ற மதம் தொடர்பான அனுகுமுறை 


பிரான்சிய கல்வியுலகில் முதன்மைக் கல்வியாளராக புகழ் பெறும் டுர்கைம் லொறெயினின் கிழக்கு பிரான்ஸ் மாகணமான எபிநோல் என்ற இடத்தில் 1858 ஏப்பிரல் 15ம் திகதி பிறந்தார். யுத மத புலமையாளர்களை கொண்ட குடும்பம் ஒன்றில் இவர் தன் குடும்ப பாரம்பரியத்தினை பின்பற்றி மத கல்வியினை தொடந்தார் எனினும் பிற்காலத்தில் இக் கல்வியில் ஆர்வம் குறைந்த நிலையில் 'உழடடயபந ழக நவாiஉயட' இ 'டலஉந டழரளை – டந பசயனெ' இ 'நஉழடந ழெசஅயட ளரிநசழைச' போன்ற கல்வி நிலையங்களில் இனைந்து தனது கல்வியினை தொடர்ந்தார். 1882 ஈகாலில் பட்டபடிப்பினை முடித்து ஆசிரியர் தொழில்லினை மேற்கொண்டார். இக் காலகட்டத்தில் சமூகத்தின் பிரச்சினை தொடர்பாக தனது கவனத்தை செலுத்தினார். அப் பிரச்சினைகள் தொடர்பாக இவர் தன்னை அர்பனிக்க வேண்டும் என்று கருதினார். சமூகத்தினை விஞ்ஞான ரீதியாக அனுகவேண்டும் என்பது இவரது கருது கோள்ளாகும். இதன் விளைவாக அறிவியல் பள்ளியிலே இனைந்து தேசிய பொருளாதார நாட்டார் உளவியல் பண்பாட்டு மானிடவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றார்.

டுர்கைம் அகஸ்ட் கொம்ற்றின் செல்வாக்கிற்க்கு பெரிதும் உட்பட்டு இருந்தார். தனியன்களை சமூக யதார்த்தத்தின் சாரமாய் காணும் டுர்கைம்மின் கருத்தும் புற மெய்மைவாதமும் கொம்ற் ஸ்பென்சர் ஆகியோரின் சமூக படிமலர்ச்சிக் கோட்பாட்டின் செல்வாக்கு உட்பட்டவையாகவே அமைந்துள்ளது. இவரின் ஆய்வுகளின் அடிப்படையில் பல நூல்களை வெளியிட்டார் அத்தகைய நூல்களாக


  • 1893 – The Division of labour in society
  • 1895 – The rules sociology method 
  • 1897 – “The Suicide” (jw;nfhiy)
  • 1912 – The Elementry forms of Religion life
இவரின் நூல்களில் 1912 elementry form of religious lif எனும் நூல் முக்கியத்துவமுடையதாக அமைகின்றது. சமூக ஒழுங்கில் ஆர்வம் கொண்டு இருந்த டுர்கைம் ஒழுங்கில் தாக்கம் செலுத்தும் புற விசைகளை பற்றி ஆராய்ந்தார். தொடக்கத்தில் சட்ட ஒழுங்கில் தன் கவனத்தை செலுத்திய போதும் பின்நாட்களில் மதம் நோக்கி தன் கவனத்தை செலுத்தினார். அவரது பார்வையில் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்யுமாறு தனியன்களை தூண்டும் உணர்வை மதம் என்று இவர் கருதுகின்றார். சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் செயற்பாட்டை விளக்கும் ஆர்வத்தினால் அவர் மதம் பற்றி ஆராய்ந்தார். இதன் விளைவாகதான் the elementry form of religious life எனும் நூல் தோற்றம் பெற்றது.




இவ் நூலின் ஆய்வுக்கென அருந்தா எனும் ஆஸ்திரேலிய பழங்குடியினரை தேர்வு செய்தார். படிமலர்ச்சியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்த இவ் மக்கள் டுர்கைமின் ஆய்வுக்கான மூலங்களாக அமைந்தனர். அகவயக் கூறுகள், நிறுவன ரீதியான இடைத்தொடர்புகள் என்பனவற்றை பரிசோதனை ரீதியாக இவர்களிடை அவதானிக்க முடிந்தது. இம் மக்களிடையே காணப்படும் குலக்குறியம் எனும் சமயமானது டுர்கைமிம் ஆய்வுப் பொருளானது.
குலக்குறியம் என்பது அகவய நம்பிக்கையை குறிக்கின்றது. குலக்குறியாக அமையும் புனிதபொருட்க்கள்

• சமூக விலக்குகளை மீறுபவர்களுக்கு தண்டனை தருகின்றது
• குறித்த குழுவில் அற ஒழுக்க பொறுப்புக்களை விதைக்கின்றன

குலக்குறியமானது விலங்க தாவரம் அல்லது யாதேனும் ஒரு இயற்க்கை பொருள்ளாக அமைந்தது. ஒரு குலத்தின் அல்லது குழுவின் புனித குலக்குறிக் கோட்பாட்டின் குறியீடாக வெளிப்படுவது.



அருந்தாக்களின் வாழ்வு இரு கூறுகளாக பிரிக்கபட்டிருந்தது
• லௌகீக இலக்குகளுடான செயல்லாக்கம் குறைந்த மதமான சிறு குழுக்கள்
• கூட்டு வாழ்வின் செயற்றிறனோடு புனிதபொருட்களைச் சார்ந்து இயங்கும் குழுக்கள்

டுர்கைம் சமயப்பொருண்மையை தனியன்கள் சார்ந்த விடயமாக அன்றி சமூகப் பொருள்ளாக கண்டார். அவரை பொநுத்தவரையில் மதம் என்பது புனித பொருட்க்கள் தொடர்பான ஒன்றினைக்கபட்ட நம்பிக்கை, நடைமுறைகளின் தொகுதியாகவே அமைந்தது. மதம் செயற்படுவதற்க்கான வினைத்திறனான விசையாக குழு வாழ்வு காணப்படுவதாக டுர்கைம் கூறுகின்றார். மதக்கருத்தும் நடைமுறைகளும் ஒர் குழுவின் குறிடாக அமைகின்றன. எந்தவொர் சமூகத்திலும் புனித பொருட்க்கள், புனித பொருட்க்கள் அல்லாதவை என பாகுபாடு தோன்றும் போது மதம் சார் பொருண்மையும் சமூகத்தில் தோற்றம் பெற்றுவிடுகின்றது என்பார் டுர்கைம்.

சமயம் என்பது ஒர் சமூக நிறுவனமாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை சமூகத்தில் ஆற்றுகின்றது. சமயம் சமூகத்தில் மேற்கொள்ளும் செயற்பாடுகளை பின்வருமாறு கூநுகின்றார் டுர்கைம்.

• ஒழுக்காற்று செயல்
சமயச்சடங்குகள் சமூக வாழ்வுக்கு மனிதனை தயார்படுத்துவன. சுய ஒழுங்கு, சில வகை துறவு, நடவடிக்கையின் வழி ஒழுக்க செயற்பாட்டினை விளைவிப்பது.

• ஒருங்கினைப்பு செயல்
சமய சடங்குகளில் வழி சமய உறுதிப்பாட்டினை ஆற்றுதல், மீள வலியுறுத்தல், பாரமரித்தல் ஆகியன நிகழ்கின்றன. சமயச் சடங்குகள் மக்களை ஒன்றினைக்கின்றன. அதன் வழி பினைப்புக்கள் உறுதிபெறுகின்றன.

• பேனுகின்ற செயல்
சுமய நடைமுறைகள் ஒரு குழுவின் சமூகபாரம்பரியங்களை பேணுவதுடன் அவற்றின்மீள் மறுமலர்ச்சி அடையவும் வைக்கின்றன. கூடவே றிலவுகின்ற விழுமியங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்துவதின் வழி சமூக தொடச்சியை பேணுதலில் துணையாகின்றன்;

• மதிப்பார்ந்த சமூக விசையாகும் செயல்
சமயம்தன் உயர் விசை செயற்பாட்டின் வழி விரக்திஅ உணர்வுகளுக்கு எதிராகவும் நம்பிக்கை இழப்புக்கு பதிலாகவும் நம்பிக்கை தருவது. எடுத்துக்காட்டாக இறப்பு முதலாய இழப்புக்களில் இருந்து மீளுவதற்காண சமனிலையை தருவதன் மூலம் தாராயள மனதோடு மனித இருப்பும';'அர்த்தங்களும் தொடர துணையாகின்றன.

தொகுத்து நோக்கம் போது the elementry form of religious lif எனும் நூலில் எமில் டுர்கைம் சமயம் தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். சமயம் என்பது சமூகத்தின் எதிரபார்ப்பகளை நிறைவு செய்யும் ஒர் நிறுவனம் என்று அவர் குறிப்பிடுவதுடன் இவ் நிறுவனம் சமூக யதார்த்தமான சமூக உண்மைகளை வெளிக்கொண்டு வருபவையாக அமைகின்றதுடன். சமூகம் சார்ந்த பல பணிகளையும் சமயம் மேற்கொள்வதாய்யுள்ளது.

உசாத்துனை
• பேராசிரியர்.சண்முகலிங்கம்.என். .2008. சமூகவியல் கோட்பாட்டு மூலம். நாகலிங்கம் நூலாலயம்
• பேராசரியர்.சண்முகலிங்கம்.என். ;.2002. தொல்சீர் சமூகவியல் கோட்பாட்டாளர்கள். சமூகவியல் சமூகம் யாழ்ப்பாணப் பல்கலைகழகம


No comments:

Post a Comment

ஒரு பொருள் பல சொற்கள்

  பல பொருள் ஒரு சொற்கள் 1. அணி- அழகு, ஒழுங்கு, ஆபரணம், கருவி, படைவகுப்பு, அணிதல் 2. அம்பு- நீர், தளிர், கணை, மூங்கில், மேகம் 3. அரண்- மதில்,...