நேர்காட்சிவாதம்
நேர்காட்சிவாதம் தொடர்பாக கொம்ற்றின் பங்களிப்பும் குறைபாடுகளும்
ritzer and goodman என்பவரகள் நேர்காட்சிவாதம் தொடர்பாக கொம்ற் எட்டு விதமான பங்களிப்பினை மேற்கொண்டுள்ளதாக கருதுகின்றனர். அவ்வாறான பங்களிப்புக்கள் பின்வருமாறு.
1. சமூகவியல் எனும் பதத்தினை உருவாக்கினார்
2. சமூகவியலை நேர்காட்சிவாத விஞ்ஞானமாக நிறுவினார்
3. நான்கு விதமாக முறையியலை சமூகவியலில் தோற்றுவித்தார்
4. சமூக நிலையியல் மற்றும் சமூக இயக்கவியலை தோற்றுவித்தார்;
5. இவர் பேரின சமூகவியலாளராக காணப்பட்டார்
6. சமூக கட்டமைப்பினை தனிநபரின் நடவடிக்கையின் வாயிலாக நோக்கினார்
7. சமூக கட்டமைப்பின் மாற்றத்தினை இயல்பானதாக கருதினார்.
8. இவர் கோட்பாடு மற்றும் நடைமுறை செயல்களை ஒன்றிணைக்கும் முயற்;சியில் ஈடுபட்டார்.
நேர்காட்சிவாதம் தொடர்பான கொம்ற்றின் குறைபாடுகள்
1. கொம்ற்றின் கோட்பாடு அவரின் சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.
2. அவர் நிஐ உலகின் விடயங்களை புரிந்துகொண்டு தமது கோட்பாட்டை நிறுவவில்லை.
3. கொம்ற் தனது சமகால அறிஞர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாத வகையில் தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார்.
4. கொம்ற் தனது அனுபவம் வாயிலாக பெற்று கொண்ட அறிவு சிறப்பானது ஆனால் அவர் வெளிப்படுத்திய கோட்பாட்டு ரீதியான எண்ணம் பொது தன்மை வாய்ந்ததாகவே காணப்பட்டது.
5. கொம்ற் வரம்பிற்க்கு உட்பட்டே சமூகவியலை பயன்படுத்தினார் இவர் தனது 'ரணமான ஒத்துழைப்பினை சமூகவியலுக்கு வழங்கவில்லை.
6. இவர் சமூகவியலை பழமைவான ஒழுங்கின் அடிப்படையில் ஒழுங்கமைத்துள்ளார் அத்துடன் சமூக கூறுகளை உடற்பாகங்களுடன் ஒப்பீட்டு தனது கோட்பாட்டை முன்வைக்கின்றார்.
7. கொம்ற் தான் பகுப்பாய்விற்;கு உட்படுத்திய விடயங்களையும் தரவுகளையும் கொண்டே தனது கோட்பாட்டை நிறுவுகின்றார்.
8. கொம்ற் கொண்டிருந்த சில சுய கருத்துக்கள் அவரை மோசமான அறிவிப்புக்கள் மற்றும் பிழைகளை விட வழிவகுத்தது.
9. இவரின் நேர்காட்சி வாதமானது கத்தோலிக்க சமயத்திற்கு சார்பானதாக காணப்படுகின்றமையினால் இதன் விஞ்ஞானத்தன்மை மீது சந்தேகம் எழுகின்றது.
10. கொம்ற்றின் எதிர்காலம் பற்றிய திட்டம் எல்லையற்றதாகவும் விசித்திரமானதாகவும் காணப்படுகின்றது.
அயஒ றநடிநச சமூகம் தொடர்பாக கற்;கை என்பது தத்துவார்த்த விளக்கமாக கற்பதை விட அது அனுபவங்களின் வாயிலான கற்;கையாக அமைய வேண்டும் என்கின்றார்.
டுர்மைம்மின் நேர்காட்சிவாதம்
நவீன சமூகவியல் துறை டுர்கைம்மின் ஆய்வுப் பணிகளிற்;கு பின்னரேயே தோற்றம் பெற்றது. டுர்மைம் கொம்ற்றின் பல தத்துவார்த்த விடயங்களை எதிர்த்ததுடன் சமூகவியல் என்பது இயற்;கையின் தர்க்கரீதியான தொடர்ச்சி மற்றும் மனித நடவடிக்கையின் தர்க்கரீதியான தொடர்ச்சி என்று குறிப்பிட்டார்.
இவர் முதலாவதாக சமூகவியல் துறையினை Bordeaux பல்கலைகழகத்தில் தோற்றுவித்தார். 1895 இல் rules of the sociological method எனும் நூலினை வெளியிட்டார். இவ் நூலில் மனித நடத்தையானது அறிவியல் சார் நடத்தையாக நீடிக்க வேண்டும் என வாதிட்டார்.
டுர்கைம்மின் மற்றுமொரு நூலான தற்கொலை என்பது தற்கொலை மேற்கொள்ளும் கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்சாந்து மக்களை பற்றிய ஆய்வாக காணப்பட்டது. இதில் இவர் கத்தோலிக் சமூகத்தினரிடையே புரட்டஸ'சாந்து மக்களை விட குறைவான தற்கொலை இடம்பெறுவதாக கருதினார்.
இதன் அடிப்படையில் இவர் சமூக உண்மை எனும் எண்ணகருவை உருவாக்கினார். இதன் மூலம் சமூகத்திற்க்கு ஆரோக்கியமான பாதையை காட்டமுடியும் என்று இவர் கருதினார்.
நேர்காட்சிவாத எதிர்ப்பு மற்றும் விமர்சன கோட்பாடு
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் germany
சமூகவியல் என்பது சமூக உறவுகளை அடையாளம் காண்பதினால் இதனை இலகுவில் விஞ்ஞானம் என்று கருதலாம் என்று அயஒ றநடிநச வாதிடுகின்றார். மேலும் இவர் சமூகவியல் என்பது சமூக செயல் பற்றியதான கற்கை என வாதிடுகின்றார்.
சமூகவியலாளர்களான georg simmel, ferdinands tonnies, George Herbert mead> Charles cooly என்பவர்களும் நேர்காட்சிவாத எதிர்ப்பிற்;கு பங்களிப்பினை செலுத்தியுள்ளனர். மேலும் கார்ல்மார்க்ஸ் இன் பொருள் முதல் வாதம் மற்றும் விமர்சன பகுப்பாய்வு என்பது நேர்காட்சிவாத எதிர்ப்பை அபிவிருத்தியடைய செய்தது.
சமகால நேர்காட்சிவாதம்
நேர்காட்சிவாதம் என்பது சமூக மற்றும் மனித நிகழ்வுகள் நிகழ்கையில் அதனை சமூக மேம்பாட்டின் பொருட்டு விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்தலாகும். நேர்காட்சிவாத எதிர்ப்பு என்பது 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கியது இது மனித மற்றும் இயற்கை பற்றிய விஞ்ஞானம் என்பது காலத்திற்;கு காலம் மாற்றமடைய கூடியதாக அமைகின்றது என்றும் இது நீண்ட காலம் நிலையாக அமைவதில்லை என்ற நம்பிக்கையுடன் தொடங்கியது.
தற்காலத்தில் அமேரிக்க சமூகவியலாளர்கள் மற்றும் அரசியல் பத்திரிகையாளர்களின் ஆக்கங்களின் வாயிலாக நேர்காட்சிவாதம் வெளிப்படுகின்றது. நேர்காட்சிவாதம் கொண்டுள்ள ஆய்வு முறையியலே இன்றைய இதன் பிரசித்தத்திற்கு காரணமாக அமைகின்றது.
1950 களில் நேர்காட்சி வாதத்தின் முக்கிய அம்சங்கள்
1. அறிவியல் மொழியியல் மற்றும் எண்அறிக்கைகளின் தொகுப்பாக நோக்கபட்டது
2. இது முரண்பாடில்லாத தன்மை மற்றும் செயல் விளக்கம் என்பவற்றை கொண்டதாய் காணப்பட்டது.
3. இவ் வாதத்தின் சில அறிக்கைகள் அனுபவம் மூலமும் மெய்யான அறிக்கைகள் மூலமும் தவறு என நிரூபிக்ககூடியதாக காணப்பட்டது.
4. அறிவியல் என்பது தெளிவாக வளர்ச்சியடைய கூடியது என்ற நம்பிக்கை காணப்பட்டது.
5. அறிவியல் என்பது பல்வேறுபட்ட கலாச்சாரம், இனம் என்பவற்றை கொண்டது என்ற நம்பிக்கை காணப்பட்டது.
6. அறிவியல் என்பது அறிவியலாளர்களின் தனிப்பட்ட ஆளுமை சமூக அந்தஸ்து என்பனவற்றில் விலகி இருக்கும்.
7. அறிவியல் பொதுவான கோட்பாடுகள் மற்றும் ஆய்வு முறைகளை கொண்டவையாக அமைகின்றது.
8. அறிவியல்கள் புதிய சிந்தனைகளை கொண்டவையாக அமைகின்றது
9. அறிவியல் என்பது பல்வேறுபட்ட அறிவியல்துறைகளின் சிந்தனைகள் உள்ளடக்கியதாகவும் உண்மை உலகத்தை பற்றியதாகவும் அமையும்.
நேர்காட்சி வாதம் என்பது அறிவு என்பது விஞ்ஞானரீதியானது என்று நம்புவதுடன் அனைத்து விடயங்களும் அளவிடத்தக்கது என்று கூறுகின்றது.
விமர்சனங்கள்
max horkheimer இரண்டு அடிப்படையில் நேர்காட்சிவாதத்தை விமர்சித்தார். சமூக செயலை இவ் வாதம் தவறான முறையில் வெளிப்படுத்துகின்றது மற்றும் சமூக வரலாறு சமூக நிலைமைகள் என்பவற்றினை நேர்காட்சி வாதம் கருத்தில் கொள்ளவில்லை என்று விமர்சித்தார். இரண்டாவதாக இவர் நேர்காட்சி வாதம் காட்டும் சமூகம் பற்றியும் விமர்சனங்களை முன்வைக்கின்றார். நேர்காட்சிவாதம் செயற்கை சமூகத்தை எதிர்ப்பதை விடுத்து அதை ஆதரிப்பதாக அமைகின்றது என்பது இவர் முன்வைக்கும் விமர்சனமாகும். இவரால் முன்வைக்கபட்ட இத்தகைய விமர்சனங்கள் பின் நேர்காட்சிவாத அபிவிருத்திக்கு உறுதுணையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment