ஃப்ராஙஃபர்ட் சிந்தனையாளர்களில் விமர்சனவியல் கோட்பாட்டு வளர்ச்சியில் லூகாச்சின் பங்களிப்பு
விமர்சனவியல் கோட்பாடு என்பது சமூக தத்துவம்சார் அனுகுமுறையாக அமைகின்றது. இவ் கோட்பாடு சமூக மற்றும் கலாசார கட்டமைப்புகளை பிரதிபலிப்பதாகவும் அவற்றை விமர்சனத்திற்க்கு உட்படுத்துபவையாகவும் அமைகின்றன. மேலும் இவ் கோட்பாடு சமூகத்தின் அதிகார கட்டமைப்புகளை கேள்வி கேக்கும் விதத்திலும் அவற்றை விமர்சிக்கும் விதத்திலும் காணப்படுகின்றது. இவ்வாறு சமூக, கலாசார, அதிகார கட்டமைப்புகளை விமர்ச்pப்பதன் மூலம் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தவும், புதைந்து கிடக்கும் மறைக்கப்பட்டிருக்கும் உண்மையை வெளிக்கொண்டு வரவும் இவ் கோட்பாடு முயற்ச்சிக்கின்றது.
இவ் விமர்சனக் கோட்பாடு மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு ஃப்ராஙஃபர்ட் பள்ளி சிந்தனையாளர்களினால் வளர்க்கப்பட்டதோன்றாகும். இவ் கோட்பாட்டின் முதன்மையான குறிக்கோள்களாக மக்களை ஆதிக்கத்திற்க்கும் அடிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தும் சமூக கட்டமைப்புகளை புரிந்துகொள்ளுதல் மற்றும் அவ் கட்டமைப்பை கட்ந்து செல்ல மக்களுக்கு உதவி செய்தல் என்பன அமைகின்றன. ஃப்ராங்ஃபர்ட் சிந்தனையாளர்களான Herbert Marcuse, Theodor Adorno, Walter
Benjamin, Max Horkheimer, George Lukas, Jurgen Habermas போன்றவர்கள் இவ் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர்களாக அமைகின்றனர்.
இவ் சிந்தனையாளர்கள் அறிவின் மற்றைய வடிவங்கள் போல அறிவும் ஆதிக்க மற்றும் அடக்குமுறைகளுக்கான கருவியாக பயன்படுத்தபடுகின்றது என்றும் அறிவின் விஞ்ஞான வளர்ச்சியின் மீது குருட்டுத்தனமான நம்பிக்கை கொண்டிருப்பதையும் விமர்சிக்கின்றனர். அறிவு என்பது மக்களின் விடுதலைக்கு பயன்படுத்துவதற்க்கு பதிலாக அவர்களின் முடிவுக்கு பயன்படுத்தப்படுகின்றது என இவ் அறிஞர்கள் வாதிடுகின்றனர். இவ்வாறான விமர்சனங்களை முன்வைக்கும் ஃப்ராஙஃபர்ட் சிந்தனையாளர்களுள் George Lukas எனும் அறிஞரின் பங்களிப்பு முதன்மையானவொன்றாக அமைகின்றது.
George Lukas 1885 இல் ஹங்கேரியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். மாக்ஸியத்தின் மீது இவர் கொண்ட ஆர்வத்தின் அடிப்படையில் விமர்சனவியல் மற்றும் மேற்கத்தேய மார்க்ஸியம் (Western Marxism) என்பனவற்றின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றினார். லூக்காஸிற்க்கு மார்க்ஸியம் சார்ந்த ஆர்வம் தோன்றுவதற்க்கு முன் இவர் கருத்துமுதல்வாத சிந்தனையாளர்களின் தாக்கத்திற்க்கு உட்பட்டிருந்தார். இவ் கருத்துமுதல்வாதிகள் முதலாளித்துவத்தினையும், அறிவொளி மரபு உருவாக்கியிருந்த விஞ்ஞான தொழில்நுட்பம் என்பனவற்றை விமர்சித்து மனித அகச்சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அழித்தனர். இத்தகைய விமர்சன தன்மையினை லூக்காச்சின் ஆக்கங்களிலும் காணலாம்.
முதலாம் உலகப்போரின் இறுதி ஆண்டுகளில் (1916) லூக்காச்சினால் எழுதப்பட்ட “The
Theory of the novel” எனும் நூல் ஹெகல் எனும் கருத்துமுதல்வாத சிந்தனையாளரின் சிந்தனைக்கு உட்பட்டிருந்தது. லூக்காஸ் இவ் நூலின்னூடாக உலகின் அரத்தமற்ற தன்மையினை விமர்சித்தார். இவ் சமூக உலகம் அதன் அர்த்தம்மற்ற மரபுகளின் அடிப்படையில் தம் உறுப்பினர்களான மக்களை இரண்டாம் நிலைப்பட்டவர்களாக கருதுகின்றது. இதன் விளைவாக தம் வீடாக இருக்க வேண்டிய உலகில் வீடற்றவர்களாக மக்கள் மாற்றப்படுகின்றனர் என தன் விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறு கருத்துமுதல்வாத சிந்தiiயின் தாக்கங்களின் ஊடாக லூக்காச் அந்நியமயமாதல் பற்றிய தம் விமர்சனபார்வையை முன்வைத்தார். மனிதனின் படைப்பு செயலால் உருவாகின்றவை எவ்வாறு அவனுக்கே எதிரான பகைசத்திகளாக மாறுகின்றன, மனித உறவுகள் எவ்வாறு பொருட்களுக்கிடையிலான உறவுகளாக மாற்றம் பெறுகின்றன என்றும் பல விமர்சனங்களை இவர் முன்வைத்தார்
லூக்காச்ன் விமர்சனவியல் கோட்பாட்டிற்க்கான பங்களிப்பில் அடுத்ததாக வரலாறும் வர்க்க உணர்வும் என்ற ஆக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது. கட்சிகளாக பிரிந்து இருந்த nஐர்மணிய இடதுசாரி அறிஞர்கள் கட்சிக்கும் தமக்கும் இடையில் உள்ள உறவினை பெரிதாக நினைத்து கொண்டிருந்த வேளை அவர்களை மாக்சிய கோட்பாடு சார்ந்து சிந்திக்க வைத்தது இவ் நூலாகும் இவ் நூலின் அடிப்படையிலேயே கட்சியை தாண்டி கோட்பாடுகள் ரீதியாக சிந்திக்கும் அறிஞர்கள் உருவாகினர். இதன் படியே ஃபராங்ஃபர்ட் சிந்தனைப் பள்ளியின் தோற்றமும் விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சியும் ஏற்ப்பட்டது.
மெக்ஸ் வெபரின் சிந்தனைகளுக்கு உட்படிருந்த லூக்காச் வெபரின் கருத்துகளுக்கு அமைவாக இவ் ஆக்கத்தை முன்வைத்தார். மானிட வாழ்வின் எல்லா அம்சங்களுமே கணக்கீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன, கணக்கீட்டற்க்கு உட்படாதவை நிராகரிக்கப்படுகின்றன, முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் நவீன தொழிற்சாலைகளுக்கு நிகரானவையாகவே அரசும் அதிகார வர்க்கமும் விளங்குகின்றன போன்ற வெபரின் கருத்துக்களை கொண்டு லூக்காச் முதலாளித்துவத்திற்க்கு எதிரான தன் விமர்சன பார்வையை முன்வைத்தார்.
வரலாறும் வர்க்க உணர்வும் என்ற நூலின் மூலம் லூக்காச்சின் நெறிபிறழா மார்க்சியம் தொடர்பான விமர்சனப் பார்வை வெளிப்படுத்தப்படுகின்றது. நெறிபிறழா மார்க்சியம் என்றால் என்ன? என்ற கேள்வியை இவ் நூலில் முன்வைக்கின்றார். நெறிபிறழா மார்க்சியம் என்பது மார்க்ஸின் ஆய்வுகளை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்வதோ, அவரின் ஆய்வில் முழுமையாக நம்பிக்கை வைப்பதோ அல்லது ஒரு வேத நூலுக்கு அழிக்கப்படும் விளக்கமோ அல்ல என்றார். அது மார்க்ஸியத்தை வேறுபடுத்திக்காட்டும் ஒர் முறையியல் என்றார். மார்க்ஸியத்தின் ஏனைய முறையியல்கள் நிராகரிக்கப்பட்டாலும் இவ் முறையியலினால் மார்க்ஸியம் செல்லுபடியாகதாக மாறும் என்றார்.
இவ் நெறிபிறழா மார்க்சியம் அதன் உருவாக்கினரின் வழியில் விரிவாக்கப்படலாம், அபிவிருத்தி செய்யப்படலாம், ஆழப்படுத்தப்படலாம் என்றார். இதனை மார்க்ஸியம் எவ் யதார்த்ததிற்க்கு உட்பட்டு அபிவிருத்தி அடைகின்றதோ அச் சமூக யதார்த்தத்தின் தாக்கத்திற்க்கு அது உட்பட்டே தீரும் என்று மார்க்ஸ் மற்றும் எங்கல்ஸின் படைப்புக்கள் ஒரே தன்மை கொண்டதாக இருக்காமல் லெனின், ப்ளகானோவ், காட்ஸ்கி, ரோஸா லுக்ஸம்பர்க, பெர்ஸ்டின் ஆகிய அறிஞர்களிடேயே மார்க்ஸியம் பற்றிய புரிதல்கள் வேறுபட்டு காணப்படுகின்றமையினை 1920 இல் லூக்காச் தெளிவுபடுத்தியமையின் மூலம் அறியலாம். இங்கு இவ் அறிஞர்களிடையே மார்க்ஸின் கருத்து அபிவிருத்தி அடைந்தும் மேலும் ஆழமாக்கப்பட்டதையம் நாம் அறியலாம்.
இவ்வாறு விமர்சனவியல் கோட்பாட்டில் பல்வேறு பங்களிப்புகளை மேற்கொண்ட லூக்காச் எங்கல்ஸ் கூறும் இயற்க்கையின் இயங்கியல் எனும் கோட்பாடினையும் விமர்சன பார்வை கொண்டு நோக்கினார். ஏங்கல்ஸ் தன் கோட்பாட்டில் 'சிறிய நுட்பமான பொருள் முதலாக மிகப் பெரிய பொருள் ஈறாக, சிறு மனல்துகள் முதலாக சூரியன் ஈறாக, உயிரனு முதல் மனிதன் வரை, இயற்க்கையில் உள்ள எல்லாப் பொருட்களும் இடையறாது தோன்றி, வளர்ந்து, மறைந்து கொண்டேயிருக்கின்றது. இடையிறாது இயங்கிவரும் நிலையிலும் மாறிக்கொண்டே இருக்கும் நிலையிலும் உள்ளது.' என்கின்றார்.
இயற்க்கை என்பது இடையறாது இயங்கிக்கொண்டிருக்கின்றது, மாறிக்கொண்டிருக்கின்றது. இடையறாது தன்னைதானே புதுப்பித்துக் கொண்டிருக்கின்றது. இயற்க்கையில் எதாவது ஒன்று நொறுங்கி சிதைந்து கொண்டிருக்கின்றது என்றும் ஏதாவது ஒன்று புதிதாக பிறந்து கொண்டும் இருக்கின்றது எனவும், இயற்க்கைப் பொருட்களும் அவற்றின் தோற்றங்களும் ஒன்றோடு ஒன்று இனைந்தும் சார்ந்தும் உள்ளன என இயங்கியல் கருதுகின்றது. எனவே பல்வேறு தோற்றங்களை ஆராய்யும் போது அவற்றுக்கிடையில் நிலவும் பரஸ்பர தொடர்புகள் மற்றும் பரஸ்பர சார்பு நிலைகளை ஆராய்ய வேண்டும் எனக்கருதினார் ஏங்கல்ஸ்.
ஏங்கல்ஸின் இவ் இயற்க்கை இயங்கியல் கோட்பாட்டினை லூக்காச் விமர்சித்தார். இயங்கியல் முறைமையின் நோக்கமும் மையப்பிரச்சினையும் மெய்யுலகை எவ்வாறு மாற்றியமைப்பது என்பதுதானேயன்றி மெய்யுலகு எவ்வாறு இயங்கியல் ரீதியாக மாற்றமடைகின்றது என்பதை புரிந்துகொள்வதல்ல என்று விமர்சித்தார். 'இயங்கியல் என்பது பரஸ்பர வினையே அன்றிக் கறாரான ஒரு காரணம் ஒரு விளைவு என்ற விடயம் அல்ல' என்ற ஏங்கல்ஸின் கருத்தை சுட்டிக்காட்டி மிக மிக முக்கியமான வரலாற்றியக்கத்தில் மானுடருக்கும் புறவுலகுக்ககுமிடையில் நிலவும் பரஸ்பரவினையைப் பற்றி ஏங்கல்ஸ் குறிப்பிடவில்லை என லூக்காஸ் விமர்சித்தார்.
இவ் விமர்சனத்தின் அடிப்படையில்தான் லூக்காச் சமூக முழுமை எனும் கருத்தாக்கத்தை பிராதனப்படுத்தினார். இவர் சமூக முழுமை என்பது ஒன்றோடு ஒன்று தொடர்புடைய அவ் தொடர்புகள் மூலம் புரிந்து கொள்ளக்கூடியதான உறுப்புகளை கொண்ட தொகுப்பு எனக்கருதுகின்றார். இவ் சமூக முழுமை இயங்கியலை புரிந்து கொள்வதற்க்கு இன்றியமையாத கருத்தாக்கம் என கருதினார். இதன் வழி அவரது காலத்தில் நிலவிய மாக்சிய இயங்கியல் விளக்கங்களை விமர்சித்தார். உற்பத்தி சத்திகள், உற்பத்தி உறவுகளின் வடிவத்தை தீர்மாணிக்கின்றன, இதன் விளைவால் ஏற்படும் வர்க்கபிரிவினைகள் அரசியல் சித்தாந்தத்தை தீர்மாணிக்கின்றன போன்ற ஒரு அம்சம் மற்றைய அம்சத்திற்க்கு காரணமாக அமைகின்றது எனும் குறுக்கல் பார்வையை விமர்சித்து, உயிருள்ள உறுப்புகளை போல ஒன்றுடன் ஒன்று பரஸ்பர இயங்கியல் தொடர்பினை கொண்ட முழுமையான சமூக அமைப்பாகவே சமூதாயத்தை பார்க்க வேண்டும் என்றும் இதுவே மார்க்ஸின் பார்வையும் என்று லூக்காச் வாதிட்டார். இவ்வாறு பாரபட்சமின்றி மாக்சிய சிந்தனைகள் பற்றியும் தன் விமர்சனங்களை முன்வைத்து விமர்சனவியல் கோட்பாட்டு வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.
அடுத்து விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சியில் லூக்காச் ஆற்றிய முக்கிய பங்களிப்பாக மார்க்ஸின் பொருளாதிக்கம், சரக்கு வழிபாடு, அந்நியமாதல் போன்ற கருத்தாக்கங்களினை முக்கியத்துவப்டுத்தியமையினை கூறலாம்.
லூக்காச்சிற்க்கு முன்னரே மார்க்ஸ் தன் 'மூலதனம்' எனும் நூலில் இவ் கருத்தாக்கங்கள் பற்றி கூறியிலுந்தாலும் அதன் கையெழுத்துப் படிகள் வரும் முன்னே லூக்காச் தன் 'வரலாறும் வர்க்க உணர்வும்' எனும் ஆக்கத்தில் மார்க்ஸின் இவ் சிந்தனைகளை முக்கியத்துவப்படுத்தினார். இதன் பின்னரே மாக்சிய சிந்தனையின் இவ் சிந்தனைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது. இதன் வழியே இவை விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் உதவின.
லூக்காச் மாக்ஸியத்தின் சிந்தனைகளினை கொண்டு முதலாளித்துவத்தின் உற்பத்தி முறை, தொழிற்பிரிப்பு எனும் பல வடிவங்களை விமர்சிப்பதன் மூலம் விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றுகின்றார். லூக்காச் முதலாளித்துவ உற்பத்தி செயற்பாட்டின் வழியில் தொழிலாளி அந்நியமாதலுக்கு உட்படுகின்றான் என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றார். முதலாளித்துவம் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய அதன் உற்பத்தி முறையினுள்ளே தொழிற்பிரிப்பும் வளர்ச்சியடைந்து செல்லும், நவீன தொழிற்சாலைகளில் ஒரு பண்டத்தினை முழுமையாக ஒரு தொழிலாளி உற்பத்தி செய்வதில்லை அவ் பண்டத்தின் ஒரு பகுதியினையே உற்பத்தி செய்கின்றான். இதன் வழி முழு உற்பத்தி இயக்கத்தையும் பார்க்க முடியாத தொழிலாளி அவனது உழைப்பில் இருந்து அந்நியமாகின்றான் என்றார்.
அந்நியமாதல் தோன்றுவதற்க்கு பிரதான காரணமாக மார்க்ஸ் கூறும் சரக்கு வழிபாடு என்பது காணப்படுவதாக கூறுகின்றார். முதலில் மார்க்ஸ் எதனை சரக்கு என்று கருதுகின்றார் என்பதை அறிதல் வேண்டும். சரக்கு என்பது முதலாவதாக எமக்கு புறத்தேயுள்ள பொருள், தனது குணங்களை கொண்டு எதேனும் மனித தேவைகளை நிறைவு செய்கின்ற ஒன்று. இத் தேவைகளின் தன்மை எப்படிபட்டதாய் இருந்தாலும் சரி. சமூகத்தால் சமூகத்திற்க்காக உற்பத்தி செய்யப்படும் இவ் பரிவர்த்தனை பொருட்க்கள் தனிமனிதர்களினாலேயே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் பொருட்கள் செல்வம்மாக சமூகத்தில் எண்ணற்ற சரக்கு குவியலாக தோற்றமளிக்கின்றது. இதன் வழியில் ஒரு பொருளிள் பயன்மதிப்பு அதன் பரிவர்தனை மதிப்பிற்க்கு பின்னால் மறைக்கபடுவதாக தன் விமர்சனத்தை முன்வைக்கின்றார் லூக்காச்.
ஒரு பொருளின் பயன்மதிப்பு மற்றும் பரிவர்த்தனை மதிப்பு என்பதை பற்றி மார்க்ஸ் பின்வருமாறு தனது 'பணமும் சரக்கும்' எனும் நூலில் குறிப்பிடுகின்றார். ஒரு பொருளின் பயன்மதிப்பு என்பது அவ் பொருளின் உள்ளார்ந்த தன்மை எனலாம், அவ் பொருள் நுகரப்படுவதால் பயன்மதிப்பு உருவாக்கப்படுகின்றது. அதே பொருள் சந்தைக்கு செல்லும் போது அங்கு அதற்க்கான பரிவர்த்தனை மதிப்பு தீர்மாணிக்கப்படுகின்றது. பயன்மதிப்பில் இருந்து எவ்வாறு பரிவர்த்தனை மதிப்பு தோன்றுகின்றது. பரிவர்த்தனை மதிப்பு கண்னுக்கு புலப்படாத ஒன்றின் மூலம் தீர்மாணிக்கப்படுகின்றது. எல்லா சரக்கிற்க்கும் பயன்மதிப்பு காணப்பட்டாலும் அவ் மதிப்பு பொருளுக்கு பொருள் வேறுபாடு கொண்டவை. பரிவர்த்தனையில் அரிசியினையும் இரும்பையும் சமப்படுத்துவது எது, ஒரு பொருளின் பயன்மதிப்பை விலக்கிப் பாரத்தால் பரிவர்தனையில் வெளிப்படும் பொதுவான அம்சமான உழைப்புதான் பரிவர்த்தனை மதிப்பை தீர்மானிப்பதாக அமைகின்றது. எனவே உழைப்பின் அடிப்படையிலேயே பரிவர்த்தனை மதிப்பு தீர்மாணிக்கப்படுகின்றது.
இவ்வாறு பரிவர்த்தனை மதிப்பு மனிதனின் உழைப்பின் படி தீர்மாணிக்கபடுவதை லுர்க்காச் விமர்சிக்கின்றார். இவ்வாறு உழைப்பின் அடிப்படையில் பரிவர்த்தனை மதிப்பு கணக்கிடப்படுவதால் உற்பத்தியாளன் தமக்கிடையே கொண்டுள்ள உறவு சரக்குகளிடையேயான சமூக உறவு போல் தோற்றமளிக்கின்றது என்கின்றார். மேலும் இவ்வாறு பரிவர்த்தனை மதிப்பில் எல்லாம் கணக்கிலெடுக்கபடுகின்றன மனித உழைப்பும் இங்கு கணக்கிடப்படுகின்றது. அவனது உழைப்பும் உற்பத்தி திறனும் கணக்கெடுக்கப்படுகின்றது, அவனது உழைப்பின் இயக்கமும் கூட நுட்பமாக கூறு கூறாக்கப்படுகின்றது. தொழிலாளியின் ஆளுமையினை கருத்தில் கொள்ளாது குறிப்பிட்ட வேலையினை மட்டும் செய்யும் இயந்திரம் போல் அவனை கருத்தில் கொள்வதினை லூக்காஸ் கடுமையாக விமர்சித்தார்.
இதன் வழி முதலாளித்துவத்தின் மற்றுமொரு அம்சமான பொருளாதிக்கத்தினையும் லூக்காச் விமர்சனம் செய்கின்றார். பொருளாதிக்கம் என்பது எல்லா விடயங்கனும் பொருட்களுடன் தொடர்புபடுத்தி நோக்குதல் ஆகும். எடுத்துக்காட்டிற்க்கு உழைப்பினை கூட ஒரு சரக்காக கணக்கிடலை கூறலாம். இவ் பொருளாதிக்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது சமூக வாழ்க்கை முழுவதிலும் பரவியுள்ளதாக லூக்காஸ் கூறுகின்றார். இவ் பொருளாதிக்கம் உழைப்பு, சட்டம் என்பனவற்றை அருவமாக்கின்றது என லூக்காஸ் விமர்சிக்கின்றார். உற்பத்தி செயற்பாட்டில் உழைப்பை துண்டு துண்டாக இது பிரிக்கின்றது பின் அனைவருக்கும் பொதுவான சட்டம் என சட்டங்களை அருவமாக்கின்றது. இதனால் சமூக உறவுகள் இங்கு சட்ட உறவுகளாக காட்சியளிக்கின்றன.
இவ் பொருளாதிக்கம் உழைப்பினை போன்று சிந்தனைகளினையும் துண்டு துண்டாக பிரிக்கின்றது இதன் விளைவாக ஒரு முழுமையில் இருந்து பிரியும் அறிவு துறைகள் தாமே ஒரு தனி முழுமை துறைகளாக மாற்றம் பெறுகின்றன என தன் பொருளாதிக்கம் மீதான விமர்சனத்தை முன்வைக்கின்றார்.
இதனால் இவ் தனித்துறைகள் எந்த அடிப்படையில் தோன்றியதோ அதை தெரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்ப்படுகின்றது. இதற்க்கு எடுத்துகாட்டாக நேர்காட்சிவாதம் மற்றும் அனுபவவாதம் என்பனவற்றை சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றார். இவ் கோட்பாடுகள் விவரங்களை அதன் ஒட்டு மொத்த சூழலில் இருந்து பிரிக்கின்றன என்பது லூக்காச்சின் விமர்சனமாகும்.
நேர்காட்சிவாதம் சமூகத்தில் புறவயமான தர்க்க ரீதியாக நிறுபிக்கக் கூடிய அறிவியல் பூர்வமான விடயங்களை மட்டுமே தன் ஆய்விற்க்கு உட்படுத்துகின்றது. இங்கு சமூகத்தின் கலாசார நெறிகள், சமூக மதிப்புக்கள், சின்னங்கள் என்பன ஆய்விற்க்கு உட்படுத்தபடுவதில்லை எனவே இதன் வழி லூக்காச்சின் விமர்சனத்தை பரிந்துகொள்ளலாம். இவ்வாறு லூக்காச் முழுமையில் இருந்து தனியாக்கப்பட்ட பல கோட்பாடுகளை விமர்சன பார்வையுடன் நோக்கி விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றினார்.
விமர்சனவியல் கோட்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்று மாக்சியம் உட்பட அனைத்து கோட்பாடுகளுக்கும் சுயாதீனமாக இருப்பதாகும். இதன் படி மாக்ஸிய சிந்தனையின் தாக்கத்திற்க்கு உட்பட்டிருந்தாலும் மார்க்ஸின் கருத்துகளையும் விமர்சித்து விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு தன் பங்களிப்பை வழங்கினார். மார்க்ஸ் கூறிய வர்க்க உணர்வு பற்றிய விமர்சனங்களை லூக்காச் கொண்டிருந்தார். மாக்சிய கோட்பாட்டின் படி வர்க்க உணர்வு என்பது தமது பொருளாதார அல்லது தமது வர்க்கம் பற்றிய விழிப்புனர்வாகும். எனினும் இவ் வர்க்க உணர்வு எவ்வாறு தோற்றம் பெற்று வளர்ச்சியடைகின்றது என்பதையும் அதன் வளர்ச்சியை தடுப்பது எது என்பது பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடவில்லை என்பது லூக்காச்சின் விமர்சனமாக காணப்படுகின்றது.
வர்க்க உணர்வு பற்றிய விமர்சனத்தில் மார்க்ஸ் விட்ட இடத்தில் இருந்து லூக்காச் தொடங்குகின்றார். வர்க்க உணர்வு என்பதை லூக்காச் இரண்டு வகையாக நோக்குகின்றார். ஒரு வர்க்கம் சமூதாயத்தில் தனக்குள்ள நிலை பற்றி தானே பெறும் உணர்வை உடனடி உணர்வு என்றும் தனது நலன் பற்றி புரிந்து கொண்டு அதற்க்காக போராடகச் கற்றுக்கொள்ளும் போது பெறும் உணர்வு ஊட்டப்பட்ட உணர்வு என்றும் கூறுகின்றார் லூக்காச். இவ் உணர்வை பாட்டாளிவர்க்கத்திற்க்கு கொடுப்பது கட்சியென்றும் இவ் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் மனசாட்சியாக இருக்கின்றது என்றும் கூறுகின்றார்.
இவ்வாறு எல்லாக் கோட்பாட்டுகளுக்கும் சுயாதீனமாக நின்றும் ஆதிக்க சத்திகளையும் அதிகார வர்க்கத்தையும் விமர்சனத்திற்க்கு உள்ளாக்கி மக்களின் போலி அறிவை நீக்கும் விதத்தில் விமர்சன கோட்பாட்டின் வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றினார் லூக்காச். இவருடைய பணிகளின் அடிப்படையில் பின் வந்த விமர்சனவியல் கோட்பாட்டாளர்களாகிய ஹோர்க்ஹமர் மற்றும் அதோரனோ போன்ற அறிஞர்கள் தம் விமர்சன அறிவை வளர்த்துக்கொண்டு விமர்சனவியல் கோட்பாட்டின் வளர்ச்சிக்கு மேலும் பங்காற்றினர் எனலாம்.
No comments:
Post a Comment